சொற்களம் 2024: களைகட்டிய இரண்டாம் சுற்று

1 mins read
00d9e99d-6a8d-4352-b732-4e1f4d8aac83
விவாதப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்கும் மாணவர்கள். - படம்: பாலாஜி பாண்டுரங்கம்

இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களும் நற்பணிப் பேரவையும் இணைந்து நடத்தும் சொற்களம் 2024இன் இரண்டாம் சுற்றுப் போட்டி கடந்த மார்ச் 2 ஆம் தேதியன்று பெண்டிமியர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

இதே பள்ளியில் கடந்த பிப்ரவரி 17 அன்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் வென்ற 16 பள்ளிகளைச் சேர்ந்த குழுக்கள் இரண்டாம் சுற்றில் பங்கேற்றன.

‘நம் நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்குத் தொழில்முனைப்பே அடிப்படையானது’ எனும் தலைப்பில் ஒட்டியும் வெட்டியும் பேசிய குழுக்களிலிருந்து எட்டுக் குழுக்கள் காலிறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

காலிறுதிச் சுற்று மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்க வேண்டும்: 2024 பிப்ரவரி 27ஆம் தேதி தமிழ் முரசு நாளிதழின் ஏழாம் பக்கத்தில் வெளியான செய்தியில் பெண்டிமியர் உயர்நிலைப் பள்ளி என்பதற்குப் பதிலாக பெண்டிமியர் தொடக்கப் பள்ளி என்று இருந்திருக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்