நாசா விண்வெளிச் சுற்றுகலச் சவாலில் சிங்கப்பூர் மாணவர்கள்

இரண்டாம் ஆண்டாக நாசா விண்வெளிச் சுற்றுகலச் சவாலில் தென்கிழக்காசியாவின் ஒரே பிரதிநிதியாக சிங்கப்பூரின் ‘என்பிஎஸ்’ அனைத்துலகப் பள்ளி.

இவ்வாண்டு ஏப்ரல் 19, 20ஆம் தேதிகளில் அமெரிக்காவில் நடக்கவுள்ள நாசா மனித ஆய்வு விண்வெளிச் சுற்றுகலச் சவாலில் (NASA Human Exploration Rover Challenge), தென்கிழக்காசியாவின் ஒரே பிரதிநிதியாக சிங்கப்பூரின் ‘என்பிஎஸ்’ அனைத்துலகப் பள்ளியைச் சேர்ந்த ‘ரீச் ரோவர்ஸ்’ அணி பங்கேற்கவுள்ளது.

அலாபாமா மாநிலத்தின் அமெரிக்க விண்வெளி, ஏவுகணை மையத்தில் இப்போட்டி நடைபெறும். இதற்காக மாணவர்கள் பல மாதங்களாகத் தயார்செய்து வந்துள்ளனர்.

செவ்வாய்க் கிரகம் (மார்ஸ்), நிலவு ஆகியவற்றின் புவியியல் நிலப்பரப்புகளைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள மேடுபள்ளம் நிறைந்த பாதையை மாணவர்களின் சுற்றுக்கலங்கள் கடக்கவேண்டும்.

எட்டு நிமிடங்களுக்குள் அவர்கள் மற்றொரு பழுதான சுற்றுக்கலத்தைச் சென்றடைந்து, அதனைப் பழுதுபார்த்து, அதன் கண்டுபிடிப்புகளைப் பத்திரமாக மீட்டெடுக்கவேண்டும்.

மாணவர்களே தங்கள் சுற்றுக்கலங்களை வடிவமைத்து, கட்டமைக்கவேண்டும்.

சுற்றுக்கலம் இருவர் அமரக்கூடியதாக இருக்கவேண்டும். போட்டியில், ஓர் ஆண், ஒரு பெண் அல்லது இரு பெண்கள் சுற்றுக்கலத்தில் அமர்ந்தபடியே சவால்களை முடிக்கவேண்டும்.

தங்கள் சுற்றுக்கலத்தை உருவாக்க ‘என்பிஎஸ்’ மாணவர்கள் https://gogetfunding.com/nasa-human-exploration-challenge-team-reach-ro… இணையத்தளம் வழியாகவும் நிதி திரட்டிவருகின்றனர்.

உலகெங்கிலுமிருந்து 42 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களையும், 30 மேல்நிலைப் பள்ளிகளையும் சேர்ந்த குழுக்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.

2023ல் நான்காம் இடத்தைப் பிடித்த ‘என்பிஎஸ்’

சென்ற ஆண்டின் ‘என்பிஎஸ் ரீச் ரோவர்ஸ்’ அணியுடன் அணி ஆலோசகர் டாக்டர் கிரிஷ் பட் (இடம்). படம்: ‘என்பிஎஸ்’ அனைத்துலகப் பள்ளி சிங்கப்பூர்

சென்ற ஆண்டு இதே சவாலில் முதன்முறையாகப் பங்கேற்ற ‘என்பிஎஸ்’ அனைத்துலகப் பள்ளியின் ‘ரீச் ரோவர்ஸ்’, மேல்நிலைப் பிரிவில் மொத்த மதிப்பெண் அடிப்படையில் நான்காவது இடத்தைப் பிடித்தது.

அப்போட்டியில் அமெரிக்காவின் 16 மாநிலங்களிலிருந்தும் பல்வேறு நாடுகளிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

ஒரு புதுமுகமாக, ஆக இளைய அணியாக நாங்கள் 103 புள்ளிகளைப் பெற்று எங்கள் பெயரை நிலைநாட்டினோம்.
அணித் தலைவர் பிரணவ் பரத்வாஜ்.

“பரிசு இல்லையென்றாலும், சிறந்த அனுபவங்களோடு திரும்பினோம்,” என்றார் அணித் தலைவர் பிரணவ் பரத்வாஜ்.

“ஆரம்பத்திலிருந்தே இச்சுற்றுகலத்தை வடிவமைத்தது எனக்கும் எனது குழுவினருக்கும் மறக்கமுடியாத கற்றல் அனுபவமாக இருந்தது,” என்றார் சுற்றுக்கல ஓட்டுநர் சமர்த் உம்மநாத்.

“தூக்கமில்லாத இரவுகள், எண்ணற்ற அறிக்கைகள் இருந்தபோதும் இப்போட்டி மிகவும் பலனளிக்கும் பயணமாக அமைந்தது,” என்றார் பாதுகாப்பு அதிகாரி நந்திதா கனோடியா.

சென்ற ஆண்டைப் போலவே இவ்வாண்டும் சிறப்பாகச் செய்யும் என நம்புகிறது ‘ரீச் ரோவர்ஸ்’ அணி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!