‘விழி’ப்புணர்வு அவசியம்

உடலில் உள்ள எவ்வித சிறு குறைபாட்டையும் விரைவில் கண்டறிந்தால், அதனால் ஏற்படும் பெரும் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். குறிப்பாக, குழந்தைகளிடம் சிறு மாற்றம் தென்பட்டாலும், அதனை கவனித்து உரிய கவனம் அளித்தால் மீள்வது எளிதாகும். கண் நலமும் அதற்கு விதிவிலக்கன்று.

கண் தொடர்பான பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டால், அதனை அவர்களால் புரிந்துகொள்ள இயலாது. அதுதான் இயல்பென நினைத்து அதற்குப் பழகி விடுகின்றனர் என்கிறார் கண் நிபுணர் ஃபாருக்.

குழந்தைகள் பெரும்பாலும் ‘ஹைப்ரோபியா’ என்னும் தூரப்பார்வை நிலையுடனேயே பிறக்கின்றனர். அவர்களது கண் பார்வைத் திறன் ‘+’இல் இருக்கும். வயது ஏற ஏற பார்வைத்திறன் சீரடையும். சில குழந்தைகளுக்குச் சீரடையாமல், தொடர்ந்து பார்வைத் திறன் குறைந்து ‘மையோபியா’ எனும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.

பொதுவாக, இந்தப் பிரச்சினை உள்ள பிள்ளைகள் அடிக்கடி கண்ணைக் கசக்குவார்கள். புத்தகம், திறன்பேசி அல்லது தொலைக்காட்சி பார்க்கும்போது, மிகவும் அருகில் சென்று பார்ப்பதை உணர்ந்தால் உடனடியாகக் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார் திரு ஃபாருக்.

பிள்ளைகள் படிக்கும்போது கண்களைச் சுருக்கி படித்தாலும் கண்களைப் பரிசோதிப்பது அவசியம். சில பிள்ளைகள் எப்போதும் தலையை நேராக வைக்காமல் சற்றே மேல்நோக்கி அல்லது பக்கவாட்டில் சாய்த்தபடி இருப்பதைக் கவனிக்கலாம். நேர் பார்வையைவிட அந்தக் கோணத்தில் கண்கள் தெளிவாகத் தெரிவதால், அறியாமல் அவர்கள் அதற்குப் பழகிவிடுவார்கள். இதுவும் ஒரு வகை பார்வைத்திறன் குறைபாடாக இருக்கலாம் எனத் திரு ஃபாருக் எச்சரிக்கிறார்.

பள்ளி செல்லும் பிள்ளைகள் வகுப்பறையில் பாடம் சரியாகத் தெரிவதில்லை எனச் சொன்னாலோ, சரிவர எழுத முடியாமல் சிரமப்பட்டாலோ, கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

கண் கருவிழிகள் ஒரே மாதிரியாக இல்லாமல் சற்றே மாறுபட்டு இருப்பதைக் கவனித்தால், உடனடியாக கண் மருத்துவ நிபுணரை நாட வேண்டும். இவ்வகை மாறுகண் நிலையைக் கவனிக்காமல் விட்டால் கண்பார்வை மங்குதல், இரட்டைப் பார்வை, ஆம்ப்ளியோப்பியா எனப்படும் ‘சோம்பேறிக்கண்’ நோய்க்கு ஆளாக நேரிடலாம். கண் செயல்பாடு முற்றிலும் குறையவும் வாய்ப்புள்ளதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று திரு ஃபாருக் சொல்கிறார்.

குடும்பத்தில் யாருக்காவது கண் சம்பந்தப்பட்ட நோய் இருந்தால், அவ்வப்போது குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்வது அவசியம்.

பொதுவாக, குழந்தைகளிடம் கண் நலம் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

முகம் கழுவும்போது கண்களையும் கழுவ சொல்லித் தர வேண்டும். கண்களை அடிக்கடி கசக்குவதைத் தவிர்க்கச் சொல்ல வேண்டும். கைகள் அசுத்தமாக இருந்தால் கண்களைத் தொடுவதைத் தவிர்க்கச் சொல்லித் தர வேண்டும்.

மிகுந்த எண்ணெய்ப் பசையுள்ள சருமம் கொண்ட குழந்தைகளுக்கு, இமைகளில் கட்டி ஏற்படலாம். அவற்றைத் தவிர்க்க, அவ்வப்போது தரமான, அதிகம் எரிச்சல் தராத சோப்பு கொண்டு, கண் இமைகளையும் ஓரங்களையும் மெதுவாக தேய்த்துக் கழுவ வேண்டும். அடிக்கடி கட்டி உருவானால், வெதுவெதுப்பான துணியைக் கண்களில் ஒற்றி எடுப்பதும் உதவும்.

ஊட்டச்சத்துள்ள உணவுக்குப் பழக்குவது, திரை நேரத்தைக் குறைத்து, வெளியில் விளையாடுவதை ஊக்குவிப்பது உள்ளிட்டவை கண்களுக்கும் முழு உடலுக்கும் நன்மை பயக்கும் என்கிறார் திரு. ஃபாருக்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!