தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
வேலையிட வேங்கையாக மாறிய முதலாளி ஒருவரின் ‘ரத்த வெறி’

ரத்த வகையின் அடிப்படையில் வேலையிடப் பாகுபாடு

2 mins read
6f5275a1-0634-441d-91ce-2719021c7137
உயிரோவிய நிறுவனமான ‘ஸ்டுடியோ கிப்லி’ நிறுவனர் ஹயாவோ மியாஸாகி. - படம்: இணையம்

ஜப்பானில் புகழ்பெற்ற ‘அனிமே’ உயிரோவிய நிறுவனம் ஒன்றில் அலுவலக ஊழியர்கள் ஒரு சமயத்தில் ரத்த வகையின் அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.

‘ஸ்டுடியோ கிப்லி’ என்ற அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ஹயாவோ மியாஸாகி, விந்தையான வழக்கத்தைக் கொண்டிருந்ததாக மூத்த உயிரோவியக் கலைஞர் ஷின்சாக்கூ கோஸூமா, பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

‘ஃபைனல் ஃபேன்டசி’ (Final Fantasy), ‘ஜூஜுட்சு கைசென்’ (Jujutsu Kaisen), ‘இயூ இயூ ஹக்குஷோ’ (Yu Yu Hakusho) போன்ற உலகப் புகழ்பெற்ற படைப்புகளில் ஈடுபட்டுள்ள திரு கோஸூமா, ‘ஸ்டுடியோ கிப்லி’யில் தம் முன்னாள் முதலாளியின் சேட்டைகளைப் பற்றி விவரித்தார். அலுவலகத்திற்குத் தாமதமாக வருவோர் அபராதம் கட்ட வேண்டும்.

ஒருவரின் ரத்த வகை அவரது குணத்தைத் தீர்மானிக்கும் என்பது பிரபல உயிரோவிய இயக்குநராகவும் உள்ள திரு மியாஸாகியின் நம்பிக்கையாக இருந்ததாம்.

‘ஏ’ ரத்தப் பிரிவினர், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியாக செய்வர். ஆனால் ‘பி’ ரத்தப் பிரிவினர் பொதுவாகவே கலகலப்பானவர்கள் என்றாலும் தங்களைப் பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் என்று திரு மியாஸாகி கருதினார்.

திரு மியாஸாகி வித்தியாசமானவர் மட்டுமல்ல. பயங்கரமானவர் என்றும் பிற உயிரோவியர்களால் வருணிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் வேலை பார்க்கத் தொடங்கிய காலத்திலிருந்து நிறுவனத்தின் வெற்றி தோல்விக்கு அவர் மட்டுமே பொறுப்பேற்கும் நிலையால் ஏற்பட்ட மன உளைச்சல் இதுபோன்ற அடாவடித்தனங்களுக்கு வித்திட்டதாகச் சிலர் கருதுகின்றனர்.

‘இவெஞ்சலியன்’ என்ற மற்றோர் உயிரோவிய அரங்கின் தலைவர் ஹிடேக்கி அன்னோ, அலுவலகத்தில் பணியாளர்களை அச்சுறுத்தும் முதலாளி எனக் கூறப்படுகிறது. திரு மியாஸாக்கியைப் போல இவரும், தம் தொழில் மீதுள்ள அளவுகடந்த ஆர்வத்தால் தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத ஓவியர்கள் மீது கடிந்துகொள்வர்.

ஆனால், திரு மியாஸாக்கி திறமையான உயிரோவியக் கலைஞரும் இயக்குநருமாகத் திகழ்ந்தார். கலையின் எல்லைகளைத் தொடர்ந்து தொட்டுத் தாண்ட எண்ணும் இவரைப் போன்ற உண்மையான கலைஞர்கள், இதற்காக தங்களையும் பிறரையும் வருத்தினாலும் முடிவில் எல்லாரையும் இன்னல்களைத் தாங்கிச் சாதிக்கக்கூடியவர்களாக மாற்றியதாக மூத்த ‘அனிமே’ துறையினர் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்