உலகக் கவிதை நாள்: “கற்றனைத் தூறும்” சிறப்பு நிகழ்ச்சி

உலகக் கவிதை நாள்: “கற்றனைத் தூறும்” சிறப்பு நிகழ்ச்சி

1 mins read
62e7ed49-3b58-4428-97c8-681cf74e9160
கவிமாலையின் 286ஆவது சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 23ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தேசிய நூலக வாரியத்தின் 16ஆம் தளத்தில் உள்ள ‘தி பாட்’ அறையில் நடைபெறவிருக்கிறது.   - படம்: இணையம்

சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள், கவிதை ஆர்வலர்கள் ஆகியோருடன் கவிமாலை அமைப்பு ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையன்று மாதாந்திரச் சந்திப்பை நடத்திவருகிறது.  

கவிமாலையின் 286ஆவது சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 23ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தேசிய நூலக வாரியத்தின் 16ஆம் தளத்தில் உள்ள ‘தி பாட்’ அறையில் நடைபெறவிருக்கிறது.    உலகக் கவிதை நாளை முன்னிட்டு, ‘கற்றனைத் தூறும்’ எனும் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

கவிஞர்கள் ஏதேனும் ஒரு கவிதை நூலிலிருந்து கவிதையை வாசிப்பதுடன் அக்கவிதை பற்றிய தங்கள் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்வார்கள். இதில் கலந்துகொள்பவர்கள் அக்கவிதை நூலைக் கொண்டு வரவேண்டும். கவிஞர்கள் கொண்டுவரும் நூலை வாசிக்க விரும்புபவர்களுடன் அந்நூலைப் பரிமாற்றிக் கொள்ளலாம்.

கவிதை வாசிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

செவியின்ப சங்கீதா நிகழ்ச்சியின் நெறியாளராக இருப்பார். 

“விரல் தொடாத மழை” எனும் தலைப்பில் இம்மாதப் போட்டியில் கவிதை வாசித்தல், கவிதை விமர்சனம், பரிசளிப்பு ஆகியவை இடம்பெறவிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். 

குறிப்புச் சொற்கள்