தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோயாலுக்காஸ் நகைக் கடை அறிவித்துள்ள சலுகை விற்பனை

1 mins read
7831c36e-817f-4d85-84e7-46c210adcb90
லிட்டில் இந்தியாவில் நடந்த ஜோயாலுக்காஸ் சலுகை அறிவிப்பு நிகழ்ச்சி.  - படம்: ஜோயாலுக்காஸ் 

லிட்டில் இந்தியாவில் உள்ள பிரபல நகை விற்பனைக் கடையான ‘ஜோயாலுக்காஸ்’ கடந்த மார்ச் 1 ஆம் தேதியன்று, பெரும் நகை விற்பனைச் சலுகையை அறிமுகம் செய்தது.

சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் உள்ளிட்ட பத்து நாடுகளில், பல நேர்த்தியான, குறிப்பிட்ட நகைகளுக்கு, செய்கூலியில் 50 விழுக்காடு வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கநகை மட்டுமின்றி வைரம், போல்கி போன்ற இதர விலையுயர்ந்த நகைகளுக்கும் இச்சலுகை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஊடகத் துறையின் பிரபலமும், தொகுப்பாளரும், ‘மஸ்தி மீடியா நெட்வொர்க் நிறுவனருமான ரேணுகா அரோரா பகத், “கண்ணைப் பறிக்கும் அழகிய நகைகள், கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கிறது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.

ஜோயாலுக்காஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜான் பால் ஆலுக்காஸ், வாடிக்கையாளர்களுக்கு புதிய நவீன வடிவமைப்புகளையும், இணையற்ற சேவையையும் வழங்க அந்நிறுவனம் தொடர்ந்து உறுதி செய்யும் என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்