‘கலையுலகில் நுழைய திறனிருந்தால் போதும்’

1 mins read
கலையுலகில் சாதாரண மக்களையும் நுழைய ஊக்குவிக்கும் கலைஞர்கள்
23f586ae-bb62-404a-a3df-4f2609e55a47
மக்களுடன் உணர்வுபூர்வமாக இணையும் காணொளிகளை ஒரு தனி பாணியில் படைக்கின்றது ‘நைட்ஸ்கை புரொடக்‌ஷன்ஸ்’. - படம்: நைட்ஸ்கை புரொடக்‌ஷன்ஸ்

தரமிக்க காணொளிகளை உருவாக்க உயர் ரக கருவிகளோ தயாரிப்புக் கூடமோ தேவையில்லை, புத்தாக்கம் இருந்தால் போதும் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இருவர் இறங்கியுள்ளனர்.

சுரேஷ் சுபாஷ், 39, மற்றும் வசந்தகுமார் அன்பழகன், 24, நாடகங்கள்வழி ஒருவருக்கொருவர் அறிமுகமாகினர். அதன்வழி, சென்ற அக்டோபரில் பிறந்தது @nightsky_creatives எனும் இன்ஸ்டகிராம் தளம்.

‘நைட்ஸ்கை புரொடக்‌ஷன்ஸ்’ தோற்றுநர்கள் சுரேஷ் சுபாஷ், 39 (இடம்), வசந்தகுமார் அன்பழகன், 24.
‘நைட்ஸ்கை புரொடக்‌ஷன்ஸ்’ தோற்றுநர்கள் சுரேஷ் சுபாஷ், 39 (இடம்), வசந்தகுமார் அன்பழகன், 24. - படம்: நைட்ஸ்கை புரொடக்‌ஷன்ஸ்

முப்பது வினாடிகளிலிருந்து ஒன்றரை நிமிடம் வரையிலான குறுங்காணொளிகளையும் குறும்படங்களையும் அவர்கள் தயாரித்து, தங்கள் தளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

உயர் ரக புகைப்படக் கருவிகள் இல்லாததால் எழும் கட்டுப்பாடுகளை இவர்களது புத்தாக்கம் தகர்த்தெறிகிறது.

வெறும் காட்சிகளையும் முக பாவனைகளையும் கொண்டு உணர்வுபூர்வமாகக் கதை சொல்வதை நாங்கள் முன்னிலைப்படுத்துகிறோம்.
சுரேஷ் சுபாஷ், 39

இருவரது வேறுபட்ட அனுபவங்களின் சங்கமம் ஒரு தனி பாணியைச் சார்ந்த காணொளிகளுக்கு வழிவகுத்துள்ளது.

சுரேஷ் நாடகம், ஊடகத் துறைகளில் ஊறியவர். வர்த்தக ஆலோசகராகவும் சுயதொழில் புரிகிறார்.

வசந்தகுமார் ஒரு வரைபட வடிவமைப்பாளர். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கலை, வடிவமைப்பு ஊடகப் பள்ளியில் மாணவராகவும் படிக்கிறார்.

பிரபல கலைஞர்களையும் புதிய கோணங்களில் காண்பிக்கின்றது ‘நைட்ஸ்கை புரொடக்‌ஷன்ஸ்’. படத்தில் உள்ளூர்க் கலைஞர் ஜானகி நாயர்.
பிரபல கலைஞர்களையும் புதிய கோணங்களில் காண்பிக்கின்றது ‘நைட்ஸ்கை புரொடக்‌ஷன்ஸ்’. படத்தில் உள்ளூர்க் கலைஞர் ஜானகி நாயர். - படம்: நைட்ஸ்கை புரொடக்‌ஷன்ஸ்

தனித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இவர்களது 30 வினாடிக் காணொளியின் பின்னணியில்கூட பல வாரத் திட்டமிடுதல் உண்டு.

அனைத்துலக ரீதியாக கலையுலகில் சிங்கப்பூர்க் கொடியை உயர பறக்கவிடும் நோக்கத்தில் மலேசிய கலைஞர்களையும் தம் காணொளிகளில் ஈடுபடுத்துகின்றனர்.

“நாங்கள் புகழுக்காகவோ மக்களின் ‘லைக்ஸ்’காகவோ இதைச் செய்யவில்லை. பிறருக்கு நம்பிக்கையூட்டுவதே எங்கள் நோக்கம்,” என்கிறார் சுரேஷ்.

குறிப்புச் சொற்கள்