சிங்கப்பூரின் சவால்களை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்தும் ஆய்வரங்க மாநாடு

சிங்கப்பூரின் சவால்களை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்தும் ஆய்வரங்க மாநாடு

1 mins read
84cb0388-17fa-43af-a4aa-2e35aee92d62
‘சிங்கப்பூரின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான ஆற்றல்கள்’ எனும் தலைப்பில், 12 அரங்குகளோடும் பிரபலங்கள் பங்குபெறும் ஒரு சிறப்பு அமர்வோடும் நடைபெறும் ஆய்வரங்க மாநாடு. - படம்: சிங்கப்பூர்த் தமிழ் ,இளையர் மன்றம்

ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 21ஆம் தேதியன்று, காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் ஏற்பாட்டில் ஒரு நேர்முக ஆய்வரங்க மாநாடு நடைபெறவுள்ளது.

தமிழ்மொழி விழா நிகழ்ச்சியாக நடைபெறும் இம்மாநாடு, ‘சிங்கப்பூரின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான ஆற்றல்கள்’ எனும் தலைப்பைக் கொண்டுள்ளது.

சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் ஜூரோங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் வு மெங் உரையாற்றுவார்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரனும் சிறப்புரையாற்றுவார்.

மொத்தம் 12 அரங்குகளில் 47 கட்டுரையாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைப் படைப்பார்கள்.

அவற்றில் ஆறு அரங்குகள் காலை 11 முதல் பகல் 12.30 மணி வரையிலும், மற்ற ஆறு அரங்குகள் பிற்பகல் 1.30 முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் நடைபெறும்.

சிறந்த 20 கட்டுரைகளுக்கு நிகழ்ச்சியின் முடிவில் பாராட்டுகளும் வழங்கப்படும்.

பிற்பகல் 3.15 முதல் 4.45 மணி வரை மீடியாகார்ப் கலைஞர்கள் ரவி குணா, அப்துல் காதர், ரித்திக் பாண்டியன் மற்றும் தவனேசன் கலந்துரையாடுவர்.

“சிங்கப்பூர் ஒளி/ஒலி அலைகளில் அன்றாடம் செல்வாக்கு மிக்கவர்கள் கண்ணோட்டம்” என்பதே அவர்களது அமர்வின் தலைப்பு.

சிங்கப்பூர் மக்கள் அனைவரும் மாநாட்டைக் கண்டு களிக்கலாம். அனுமதி இலவசம்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவோர் http://tinyurl.com/stycaudconf2024 என்ற இணையத்தளம் வழி பதிவு செய்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்