புவியைக் காக்கும் கிரீன்லாந்து

புவியைக் காக்கும் கிரீன்லாந்து

1 mins read
aae5d362-82c0-43e6-a581-8341039f7b15
கிரீன்லாந்து மக்கள்தொகை 56,000 மட்டுமே. - படம்: தமிழக ஊடகம்

உலகின் மிகப்பெரிய தீவாக அடையாளம் காணப்பட்டுள்ளது கிரீன்லாந்து.

இங்கு மக்கள்தொகை 56,000 பேர் மட்டுமே. தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தையும்விட பெரிய நிலப்பரப்பில் 56,000 பேர் வசிப்பதை கற்பனை செய்ய முடிந்தால் அதுதான் கிரீன்லாந்து. ஆனால் இதற்கு ஒரு முக்கிய காரணம், கிரீன்லாந்து முழுவதும் பரவியிருக்கும் பனிப்பாறை. இந்தப் பனிப்படலம் கிரீன்லாந்தின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு. சராசரியாக இந்த பனிப்பாறை 1.6 கிலோமீட்டர் தடிமன் இருந்தாலும், அது சில இடங்களில் 3 கிலோமீட்டர் வரை இருக்கும்.

இந்தப் பனிப்படலம் முழுவதும் நல்ல குடிநீரால் ஆனதுதான். ஆனால் இது மட்டும் உருகினால், உலகமே அழிந்துவிடும் என்கிறார்கள். அதில் அந்த அளவுக்குத் தண்ணீர் உள்ளது.

அதாவது ஒட்டுமொத்தமாக உலகக் கடல் மட்டம் 25 அடி வரை உயரும் அளவு நீர் கிரீன்லாந்து பனிப்பாறையில் தேங்கியுள்ளது என்று சொல்லப்படுகிறது.

கிரீன்லாந்தின் பனிப்படலம் மீது சூரியஒளி படும்போது, பனிப்படலத்தின் வெள்ளை மேற்பரப்பு ஒரு கண்ணாடி போல் செயல்பட்டு, சூரிய ஒளியை பிரதிபலித்து விண்வெளிக்குத் திருப்பி அனுப்புகிறது.

இதனால், பூமியின் தட்பவெப்பம் கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இல்லை என்றால், பூமி மேலும் அதிக வெப்பமாக இருந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்