தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஃபேமஸ் ஏமஸ்’ நிறுவனர் காலமானார்

1 mins read
6c6aa28d-58bf-465d-a6e7-3485d35a69ec
 ‘ஃபேமஸ் ஏமஸ்’ நிறுவனர் வாலஸ் ஏமஸ் - படம் ராய்ட்டர்ஸ்

உலகப் பிரபல பிஸ்கெட் நிறுவனமான ‘ஃபேமஸ் ஏமஸ்’ நிறுவனர் வாலஸ் ஏமஸ், தமது 88 வயதில் காலமானார்.

முதுமை மறதி நோயால் ஏற்பட்ட சிக்கல்களால் திரு ஏமஸ், சொந்த வீட்டில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) உயிர் நீத்ததாக அவரது இரண்டு பிள்ளைகள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

பொட்டலமிடப்படும் பிஸ்கெட்டுகளைப் புதுமையாகத் தயாரித்து சந்தையில் புரட்சியை ஏற்படுத்தியது ‘ஃபேமஸ் ஏமஸ்’.

வேர்க்கடலை வெண்ணையுடனான சாக்லெட் பிஸ்கெட்டுகள், ‘பேக்கான்’ விதைகள் கொண்ட சாக்லெட் பிஸ்கெட்டுகள், ‘பட்டர்ஸ்காட்ச்’ பிஸ்கெட்டுகள் என விதவிதமான நாவுறும் சுவைகளைக் கொண்ட பிஸ்கெட்டுகளை இந்நிறுவனம், 1980கள் முதல் விற்று வந்தது.

1936ல் ஃபுளோரிடா மாநிலத்தில் திரு ஏமஸ், எளிய குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை மின்சார பயனீட்டு நிறுவன ஊழியராகவும் தாயார் பணிப்பெண்ணாகவும வேலை செய்தனர்.

பல்வேறு துறைகளில் வேலை செய்த பின்னர் இறுதியில் நண்பர்களிடம் 25,000 டாலர் கடன் வாங்கி ‘ஃபேமஸ் ஏமஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினார் திரு ஏமஸ். துடிப்புமிக்கவர், என்றும் புன்னகையுடன் இருப்பவர் என்றும் திரு ஏமஸை தெரிந்தவர்கள் அவரைப் பாராட்டுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்