சிங்கப்பூரில் உள்ள கவிஞர்களும் கவிதை ஆர்வலர்களும் மாதந்தோறும் சந்திக்கும் கவிமாலையின் 293ஆவது சந்திப்பு நிகழ்ச்சி இம்மாதம் 26ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தேசிய நூலகக் கட்டடத்தின் 5ஆம் தளத்திலுள்ள பாசிபிலிட்டி அறையில் நடைபெறவிருக்கிறது.
புலவர் முத்துகிருஷ்ணன் கலந்துகொண்டு ‘மதுரையில் எரிந்த சுடர்’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.
அத்துடன் சிறப்பு அங்கமாக கவிஞர் கோ. இளங்கோவன் தலைமையில் கவிமாலைக் கவிஞர்கள் செவியின்ப சங்கீதா, ஜெயராம், தீபக், சரஸ்வேல், வெற்றிச்செல்வன், சண்முகசுந்தரம், பா.சதீஸ் முத்து கோபால், அம்பிகா, வெண்ணிலா, சித்ரா தணிகைவேல் ஆகியோர் இணைந்து படைக்கும் தீபாவளி சிறப்புக் கவிதை அரங்கமும் உண்டு.
நிகழ்ச்சியை தர்ஷிதா வழிநடத்த, ‘பெளர்ணமிப் புன்னகை’ எனும் தலைப்பில் இம்மாதப் போட்டிக் கவிதைகள் வாசித்தல், படித்ததில் பிடித்தது மற்றும் பரிசளிப்பு ஆகிய வழக்கமான கவிமாலை அங்கமும் இடம்பெறவிருக்கிறது.
கவிதையின் அழகியலை விரும்பும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது கவிமாலை. இந்த நிகழ்விற்கு அனுமதி இலவசம். தொடர்புக்கு: 9060 4464.

