கவிமாலையில் ‘பனிபடரும் நினைவு’

1 mins read
f1a18984-8bd5-45bd-9aab-38297faf28ed
-

சிங்கப்பூர்க் கவிமாலை அமைப்பின் 295ஆவது சந்திப்பு நிகழ்ச்சி டிசம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்திலுள்ள பாசிபிலிட்டி அறையில் நடக்கவிருக்கிறது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டுச் சிறப்பு நிகழ்வாக இடம்பெறும் இந்நிகழ்ச்சியில் ‘பனிபடரும் நினைவு’ எனும் தலைப்பில் இம்மாதப் போட்டிக் கவிதைகள் வாசித்தல், கவிதை விமர்சனம், பரிசளிப்புடன் வழக்கமான கவிமாலை அங்கமும் இடம்பெறும்.

அனுமதி இலவசம். தொடர்பிற்கு - 9144 5461.