60ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிங்கப்பூர்ப் பொதுமக்கள் சங்கம்

1 mins read
ff7b9ecc-8f13-40a2-851e-3bc752b21071
-

சிங்கப்பூர் பொதுமக்கள் சங்கத்தின் (Civilians Association (Singapore)) 60ஆம் ஆண்டு நிறைவுவிழா சனிக்கிழமை (டிசம்பர் 28) மாலை 5.30 மணி முதல் 8.30 மணிவரை ஹில் வியூ ரைசில் உள்ள ஹில் வியூ சமூக மன்றத்தின் இரண்டாம் தளத்தில் நடைபெறவுள்ளது.

கலாசார, சமூகம், இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருக்கிறார்.

நிகழ்ச்சியில் யூசுப் ராவுத்தர் ரஜித்தின் ‘ஒரு விளையாட்டு அணியின் மனிதநேயப் பயணம்’, முனைவர் ராஜிசீனிவாசனின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Humane Journey of a Soccer Team’ என்ற இரு நூல்களும் வெளியீடு காணவுள்ளன. நூலோடு அனைவருக்கும் CAS 60 நினைவுப் பதக்கமும் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் 9001 6400 என்ற எண் வழியாகப் பதிவுசெய்துகொள்ளலாம்.