உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) மாலை மணி 5.30 முதல் 8.30 வரை இடம்பெறும் நிகழ்ச்சியில் க.நெடுஞ்செழியன் எழுதிய ‘கிழக்குக் கடற்கரைப் பூங்கா’, ‘கட்டுமானம்’ என்ற இரு நூல்கள் வெளியிடப்படவுள்ளன. தமிழறிஞர் முனைவர் சுப. திண்ணப்பன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கவுள்ளார். கல்வியாளரும் எழுத்தாளருமான பொன். சுந்தரராசு தொடக்கவுரை ஆற்றுவார். தமிழறிஞரும் வழக்கறிஞருமான த. இராமலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர்) ஏற்பாடு செய்துள்ளது. தொடர்புக்கு: ம.கருணாநிதி - 92386749, க.நெடுஞ்செழியன் - 92398494
க.நெடுஞ்செழியன் நூல்கள் வெளியீடு
1 mins read
க.நெடுஞ்செழியன் எழுதிய ‘கிழக்குக் கடற்கரைப் பூங்கா’, ‘கட்டுமானம்’ என்ற இரு நூல்கள் வெளியிடப்படவுள்ளன. - படம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம்

