கவிமாலை அமைப்பின் மார்ச் மாதச் சந்திப்பு வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்திலுள்ள பாசிபிலிட்டி அறையில் மாலை 6 மணிக்கு நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் கவிஞர் பிரம்மகுமாரின் ‘கால மலரின் கவிதைத்தேன்’ நூல் வெளியீடு இடம்பெறவிருக்கிறது. முனைவர் ராஜீ சீனிவாசன் வாழ்த்துரை வழங்கவுள்ளார்.
‘பெண்’ எனும் தலைப்பில் இம்மாதப் போட்டிக் கவிதைகள் வாசித்தல், கவிதை விமர்சனம், பரிசளிப்பு ஆகிய வழக்கமான அங்கங்களும் இடம்பெறும்.
அனுமதி இலவசம்.

