மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசுக்குச் சிறுகதை நூல்களை அனுப்பலாம்

மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசுக்குச் சிறுகதை நூல்களை அனுப்பலாம்

1 mins read
800f4982-0249-45cf-a8de-2de3346985b3
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டுமுதல் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டியை நடத்தி வருகிறது. - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்திவரும் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டிக்கான சிறுகதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன.

சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம் என நான்கு துறைகளுக்குச் சுழல்முறையில் பரிசு வழங்கப்பட்டு வருவதால் இவ்வாண்டு சிறுகதை நூலுக்குப் பரிசு வழங்கப்படும்.

அதனால் 2022, 2023, 2024, 2025 ஆகிய நான்கு ஆண்டுகளில் முதல் பதிப்பாகப் பதிப்பிக்கப்பட்ட சிறுகதை நூல்களின் நான்கு படிகளை அனுப்பி வைக்கலாம். சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.

சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலிருந்து மூன்று நடுவர்கள் சிறந்த நூலைத் தேர்ந்தெடுக்க உதவுவார்கள். அந்த நூலுக்கு 3,000 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும். போட்டிக்கான விதிகளும் விண்ணப்பப் படிவமும் www.singaporetamilwriters.com எனும் எழுத்தாளர் கழகத்தின் இணையத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நூல்களை அனுப்பி வைப்பதற்கான இறுதி நாள் 31.03.2026.

நூல்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பலாம் அல்லது நேரிலும் கொடுக்கலாம்: திருவாட்டி பிரேமா மகாலிங்கம், ஆர்யா கிரியேஷன்ஸ், 24, அப்பர் டிக்சன் சாலை, சிங்கப்பூர் - 207483.

‘ஆனந்த பவன்’ அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு நாளை ஒட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பரிசளிப்பு விழா நடைபெறும்.

மேல்விவரங்களுக்கு: எஸ். முத்துமாணிக்கம் - 9675 3215, செயலாளர் பிரேமா மகாலிங்கம் - 9169 6996.