தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத்தின் மாணவர் பயிலரங்கு, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம்

தமிழ்மொழி விழா 2026

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத்தின் மாணவர் பயிலரங்கு, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம்

படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

26 Mar 2026 - 5:30 am

2 mins read

தமிழ்மொழி விழாவையொட்டி தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது. மூன்று அங்கங்களாக இந்நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மார்ச் 14ஆம் தேதி மாணவர் பயிலரங்கம், மார்ச் 28ஆம் தேதி பேச்சுப்போட்டி, ஏப்ரல் 18ஆம் தேதி மாணவர்கள் இணைந்த பட்டிமன்றம் ஆகியவை அந்த நிகழ்ச்சிகள்.

முதல் அங்கமான பயிலரங்கம் மார்ச் 14ஆம் தேதி, தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 5ஆம் தளத்திலுள்ள பாசிபிலிட்டி அறையில் நடைபெற்றது.

கலைத்துறையில் பல விருதுகளை வென்ற கலைஞர் வடிவழகனும், ஆங்கிலோ-சீனத் தன்னாட்சித் தொடக்கக் கல்லூரியின் தமிழ், மலாய் மொழித் துறைத் தலைவர் முனைவர் முகம்மது சரீஃப்பும் மாணவர்களுக்கு மேடைப்பேச்சு பற்றிய குறிப்புகளையும் திறன்களை வளர்த்துக்கொள்ளும் உத்திகளையும் வழங்கினர்.

 பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்கள்.
பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்கள். - படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

இந்தப் பயிலரங்கத்தில் கலந்துகொள்ள மாணவர்களுக்கான சுற்றறிக்கை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது.

உயர்நிலை 1, 2 முதல் பிரிவு. உயர்நிலை 3, 4, 5 இரண்டாம் பிரிவு. தொழிற்கல்வி, பல்கலைக்கழக மாணவர்கள் மூன்றாம் பிரிவு.

அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து ஏறத்தாழ 90 பேர் பயிலரங்கில் கலந்துகொண்டார்கள்.

இவர்கள் மார்ச் 28ல் தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 16ஆம் தளத்தில் உள்ள ‘த பாட்’ அரங்கில் நடைபெறவுள்ள பேச்சுப் போட்டியிலும் பங்குபெறுவார்கள்.

பேச்சுப் போட்டியில் வெல்லும் மாணவர்கள் நால்வர், ஏப்ரல் 18ஆம் தேதி கலைஞர் வடிவழகன் தலைமையில் நடைபெறவிருக்கும் பட்டிமன்றத்தில் பேசுவார்கள்.

பட்டிமன்றம் உட்லண்ட்ஸ் நூலக அரங்கில் நடைபெறும்.

போட்டிகள் குறித்த மேல்விவரங்களுக்கு கழகத் துணைத் தலைவர் முனைவர் நிஸாரை 85034204 என்ற தொலைபேசி எண்ணிலும் துணைச் செயலர் ஆனந்தனை 96436427 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்