தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான ‘தமிழின் இளமை’ நிகழ்ச்சி

1 mins read
232ca8b1-f5b9-4eaf-a41f-f4fc42e51773
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.  - படம்: பிக்சாபே

தமிழ்மொழி விழா 2025ன் ஓர் அங்கமாக அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம், ‘தமிழின் இளமை’ எனும் தலைப்பில் உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்கள் ஆய்வு செய்து படைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் காலை 9:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் சிறப்புப் பேச்சாளர்களாகத் தமிழ் ஆர்வலர் சபா முத்து நடராஜன், கவிஞரும் எழுத்தாளருமான தங்கம் மூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இவ்வாண்டு பல உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரிகளிலிருந்து ஏறத்தாழ 100 மாணவர்கள் ‘தமிழின் இளமை’ எனும் தலைப்பில் தங்களின் ஆய்வுகளை ஏப்ரல் 6ஆம் தேதி படைத்தனர்.

போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் விழாவின்போதும் தங்களது ஆய்வினைப் படைப்பர்.

அனைவருக்கும் நண்பகல் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்