என்றோ ஒரு நாள் பூகிஸ் செல்லும்போது அங்கு சாலை வழியில் நிறைந்திருக்கும் தாந்திரிக கடைகளைக் கண்டால் இளையர்கள் பலர் அங்கு கூடுவதைப் பார்க்கலாம்.
ஒரு சிலர் கைகளில் ராசிக் கற்கள் இருக்கும், ஒரு சிலர் அத்தகைய கடைகளில் வழங்கப்படும் தேநீரை சுவைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், இங்கு அனைவரும் பாரம்பரிய நிறுவனங்கள் இனி வழங்காத ஒன்றைத் தேடுகிறார்கள். அதுதான் அவர்கள் கூறும் அர்த்தமுள்ள உணர்வு.
இணையத்தளங்கள் முழுவதும் இளம் தலைமுறையினர் டாரோட், ஜோதிடம், ஒலி குளியல், வெளிப்பாட்டு முறைகள் போன்ற ஆன்மிக நடைமுறைகளுக்குத் திரும்புகின்றனர்.
மாய மந்திரங்கள் போலின்றி இந்தச் சடங்குகள் அவர்களின் வாழ்க்கையில் அதிகம் நுழைந்துள்ளன. ஜோதிடம் தொடர்பான காணொளிகள், இன்ஸ்டகிராமில் விற்கப்படும் ராசிக் கற்கள் ஆகியவை இளையர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட ஜோதிடத்தை வழங்கி வருகின்றன.
எதிர்காலத்தைக் கணிப்பதற்கு அப்பாற்பட்டு இளையர்கள் பலருக்கு இது அவர்களை தன்னைத் தானே அறிந்துகொள்ளும் நோக்கம் கொண்டுள்ளது.
“டாரோட் எனது உணர்வுகளை புரிந்துகொள்ள வழியமைக்கிறது. எந்த முடிவாக இருந்தாலும் நான் எனது டாரோட் அட்டைகளைப் பார்க்காமல் எடுக்க மாட்டேன்,” என்றார் பயனர் அனுபவ வடிவமைப்பாளர் மாயா, 26.
இதன்மூலம் மனநலனுக்கான விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இத்தகைய சிகிச்சை முறைகள் பிரபலமாகும்போது மருத்துவ ரீதியான தேர்வுக்குப் பதிலாக ஆன்மிகப் பயிற்சிகள் இளையர்கள் மத்தியில் சிறந்த தேர்வாக அமைகின்றன.
பெரும்பாலும் குழப்பமானதாக உணரப்படும் இந்த உலகில் இத்தகைய சடங்குகள் ஒரு நல்ல கட்டமைப்பை வழங்குவதாக இளையர்கள் கருதுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
தினசரி அட்டையைப் பார்ப்பது அல்லது பிறப்பு விளக்கப்படத்தைப் படிப்பது போன்றவை ஒருவருக்கு யதார்த்தத்தை வழங்குவதாக நம்பப்படுகிறது.
ஆனால், இவை அனைத்திலும் ஒரு அமைதியான கிளர்ச்சியும் உள்ளது. பல இளையர்கள் இளம் வயதிலேயே குடும்பம் பின்பற்றும் சமயத்தை வழிபட்டு வந்துள்ளனர்.
இந்தப் புதிய போக்கு பயனர் கொள்கையால் உந்தப்பட்டு உண்மையானதைவிட அழகியல் மிக்கது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஆன்மிகம் இப்போது $4 பில்லியன் மதிப்புள்ள தொழிலாக மாறியுள்ளது.
ஆனால், இதில் ஈடுபடுபவர்கள் இதனால் நன்மை ஏற்படும்போது அதற்குச் செலவிடுவதில் எவ்விதத் தவறும் இல்லை என்கின்றனர்.
சிகிச்சையாக இருந்தாலும் புதிய போக்காக இருந்தாலும் ஒன்று மட்டும் தெளிவாக உள்ளது, ‘ஜென் சி’ வயதினருக்கு ஆன்மிகம் வெவ்வேறு வடிவங்களில் தென்படுகிறது.

