தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பானிய பாணியில் கதைசொல்லும் ஆசிரியை

2 mins read
31ac7be6-1078-4dde-a0e7-c0fb432ae3cf
உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் ஆகஸ்ட் 30 நடந்த ‘ஒன்எம்டிஎல்’ கருத்தரங்கில் ஜப்பானிய கதைசொல்லும் உத்தியைப் பயன்படுத்திய பிசிஎஃப் ஸ்பார்குல்டோட்ஸ் பாலர் பள்ளி ஆசிரியை சித்ரா. - படம்: ரவி சிங்காரம்

பிசிஎஃப் பாலர்பள்ளி @ காக்கி புக்கிட் புளோக் 519ல் கற்பிக்கும் இருமொழி ஆசிரியை சித்ரா ராஜா, 56, புத்தாக்கமான கதைசொல்லும் முறைகள்மூலம் தன் பாடங்களைச் சுவாரசியமாக்குகிறார்.

‘கமி‌ஷிபாய்’ எனும் ஜப்பானிய கதைசொல்லும் உத்தியைப் பயன்படுத்தி, அவர் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடந்த ‘ஒன்எம்டிஎல்’ கருத்தரங்கில் புதிய கதைநூல் ஒன்றைப் பாலருக்குப் படைத்தார்.

‘கமிஷிபாய்’ என்பது ஜப்பானிய மொழியில் ‘காகிதத் தியேட்டர்’ எனப் பொருள்படும். “அக்காலத்தில், ஜப்பானில், கதைக்கான படங்களை வரைந்து கதைப்பெட்டியில் வைத்து மிதிவண்டியில் கிராமத்தைச் சுற்றிவருவார்கள். அப்போது சிறுவர்கள் ஒன்றுகூடிக் கதையைக் கேட்பர்,” என்றார் திருவாட்டி சித்ரா.

உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நடந்த ‘ஒன்எம்டிஎல்’ கருத்தரங்கில் ஜப்பானிய கதைசொல்லும் உத்தியைப் பயன்படுத்திய பிசிஎஃப் ஸ்பார்குல்டோட்ஸ் பாலர் பள்ளி ஆசிரியை சித்ரா.
உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நடந்த ‘ஒன்எம்டிஎல்’ கருத்தரங்கில் ஜப்பானிய கதைசொல்லும் உத்தியைப் பயன்படுத்திய பிசிஎஃப் ஸ்பார்குல்டோட்ஸ் பாலர் பள்ளி ஆசிரியை சித்ரா. - படம்: ரவி சிங்காரம்

அந்தக் கதை நூலைப் படைப்பதற்காக 15 படங்களைத் தாமாக வரைந்து படைத்தார் ஆசிரியை சித்ரா. தேசிய தின விடுமுறையில் முழுக்க முழுக்க இந்தப் பணியில்தான் ஈடுபட்டிருந்தார்.

மாணவர்கள் ரயில்போல நடித்தது கதைசொல்லும் அனுபவத்துக்கு மெருகேற்றியது. சீன, மலாய் மாணவர்களும் இருந்ததால் ஆங்கிலத்தையும் கலந்து படைத்தார் ஆசிரியை சித்ரா.

‘டுடூஸ் லாஸ்ட் மி‌‌ஷன்’ எனும் கதைநூலைப் படைப்பதற்காக ஆசிரியை சித்ரா கையால் வரைந்த படங்கள் சிலவற்று.
‘டுடூஸ் லாஸ்ட் மி‌‌ஷன்’ எனும் கதைநூலைப் படைப்பதற்காக ஆசிரியை சித்ரா கையால் வரைந்த படங்கள் சிலவற்று. - படம்: ரவி சிங்காரம்

ஆகஸ்ட் 2ஆம் தேதி ‘தாத்தா எழுதிய கடிதம்’ எனும் கதையையும் எஸ்ஜி60 நடவடிக்கையாக ஆசிரியை சித்ரா படைத்திருந்தார். தேசிய நூலகத்துடன் இணைந்து கைவினை, மொழி நடவடிக்கைகளும் வழங்கியுள்ளார்.

தமிழ் மாணவர்களுக்காக ஆசிரியை சித்ரா நடத்திய நடவடிக்கை ஒன்று.
தமிழ் மாணவர்களுக்காக ஆசிரியை சித்ரா நடத்திய நடவடிக்கை ஒன்று. - படம்: பிசிஎஃப் ஸ்பார்குல்டோட்ஸ்

“இப்போது சிறுவர்களுக்குப் பெற்றோர் அதிக வளங்கள் கொடுப்பதால் புதிய வி‌‌ஷயங்களைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது. வெவ்வேறு உத்திகள்மூலம் அவர்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும். உதாரணத்துக்கு, படித்த கதையை வைத்துப் படங்கள் வரையச் சொல்வேன். மொழி விளையாட்டுகள் விளையாடுவோம்,” என்றார் ஆசிரியை சித்ரா.

சீனப் புத்தாண்டு பற்றி தமிழ் வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியை சித்ரா.
சீனப் புத்தாண்டு பற்றி தமிழ் வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியை சித்ரா. - படம்: பிசிஎஃப் ஸ்பார்குல்டோட்ஸ்

“நான் பள்ளியில் இல்லாத நேரத்தில்கூட என் மனம் பள்ளியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும்,” எனக் கூறினார் ஆசிரியை சித்ரா.

நான் பள்ளியில் இல்லாத சமயங்களிலும் என் இதயம் பள்ளியில்தான் இருக்கும்.
ஆசிரியை சித்ரா

ஆசிரியை சித்ரா 1996ஆம் ஆண்டு முதல் பாலர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

அவர் கணிதத்தில் பட்டம் பெற்றவர். எனினும், தன் நான்கு வயது மகளைக் கவனித்துக்கொள்வதற்கு ஏதுவான வேலையைத் தேடியபோது பகுதிநேர பாலர் பள்ளி ஆசிரியர் பணியைத் தேர்வு செய்தார்.

முதலில் தனியார் துறையில் கற்பித்துவந்த திருவாட்டி சித்ரா, 2010ல் பிசிஎஃப் ஸ்பார்குல்டோட்ஸ் @ காக்கி புக்கிட் புளோக் 519 பாலர் பள்ளியில் முழுநேர ஆசிரியராகச் சேர்ந்தார். அப்போது பகுதிநேரமாக ஆரம்பக்கல்வி பட்டயப்படிப்பையும் அவர் மேற்கொண்டார்.

ஆசிரியர் துறையில் நுழைய விரும்புவோருக்கு அவர் கூறும் அறிவுரை என்னவென்றால், உங்கள் முழு மனதுடன் சொல்லிக் கொடுங்கள் என்பதே ஆகும்.

தன் பள்ளியில் தீபாவளிக் கொண்டாட்டங்களில் ஆசிரியை சித்ரா.
தன் பள்ளியில் தீபாவளிக் கொண்டாட்டங்களில் ஆசிரியை சித்ரா. - படம்: பிசிஎஃப் ஸ்பார்குல்டோட்ஸ்
குறிப்புச் சொற்கள்