தற்போதைய பணிச் சூழலிலுள்ள திறன்களில் தொழில்நுட்பத் திறன்களுக்கு இணையாகச் சிந்தனைத் திறன்களும் அவசியம் என்று 90 விழுக்காட்டு நிறுவனங்கள் கருதுவதாக என்டியுசி கற்றல் நடுவத்தின் (LearningHub) சிறப்பு அறிக்கை 2024 தெரிவித்துள்ளது.
எந்தத் துறையாக இருந்தாலும் அடிப்படைச் சிந்தனைத் திறனை வளர்த்துக்கொள்வது அவசியம் என நிறுவனத் தலைவர்கள் வலியுறுத்துவதை அது கோடிகாட்டியுள்ளது.
வளர்ந்துவரும் மின்னிலக்கப் பொருளாதாரத்தின் சிக்கல்களை தீர்க்கும் திறன் கொண்ட ஊழியர்களை உருவாக்க, தொழில்நுட்பத் திறன்களுடன் சிந்தனைத் திறன்களும் எவ்வாறு துணை நிற்கின்றன என்பதை இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
ஏறத்தாழ 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள் தங்கள் ஊழியர்களிடம் சிந்தனைத் திறன் இடைவெளி இருப்பதை ஒப்புக்கொண்டாலும், 43 விழுக்காட்டு வணிகத் தலைவர்கள் மட்டுமே அதற்[Ϟ]குரிய பயிற்சிகளுக்குத் தங்கள் ஊழியர்களை அனுப்புவதாகத் தெரியவந்துள்ளது.
சிந்தனைத் திறன் மேம்பாட்டில் முன்னேற்றத்தை அளவிடுவதற்குத் தெளிவான அளவீடுகள் இல்லாதது ஊழியர்[Ϟ]களிடையே அத்திறன்களை வளர்ப்பதில் முக்கியச் சவாலாக உள்ளதாக வணிகத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மொத்தம் 200 வணிகத் தலைவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு பல்வேறு படிநிலைகளுக்கு இடையிலான சிந்தனைத் திறன் பரிமாற்றத்தை ஆய்வு செய்வதுடன் ஊழியர்[Ϟ]களுக்கு வாய்ப்புகளை மேம்படுத்த இவ்வகை பயிற்சியின் அவசியத்தையும் கோடிகாட்டியுள்ளது.
சவால்களுக்கு இடையிலும் வணிகத் தலைவர்களில் பாதிப் பேர் சிக்கல் தீர்ப்பு, உத்திபூர்வச் சிந்தனை, பகுப்பாய்வுச் சிந்தனை உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் ஊழியர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களில் உரிய பயிற்சி அளிக்க இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
எல்லா துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளைச் சரிவரப் பயன்படுத்தி மேம்பாடு[Ϟ]களைக் காணவும் மனிதச் சிந்தனைத் திறன்கள் அவசியம் என்ற கருத்து அதிகரித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
வணிக இலக்குகளை அடைய தொழில்நுட்ப நிபுணத்துவம் மட்டும் போதாது என்பதையும் சிந்தனைத் திறன் வளர்ப்புப் பயிற்சியின்மை நிறுவனங்களைப் பின்தங்க வைக்கும் அபாயம் உள்ளதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.

