ஆண்டாள் இயற்றிய திருப்பாவையின் 30 பாடல்களைச் செவ்விசையில் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளோர்க்கான வாய்ப்பை ஸ்ரீ ராமானுஜர் சங்கம் சிங்கப்பூர் வழங்குகிறது.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் பிஜிபி மண்டபச் சந்திப்பு அறையில் ஆகஸ்ட் 17 முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை ஞாயிறுதோறும் காலை 9 மணி முதல் 10.15 மணி வரை நடைபெறவுள்ளது.
பழம்பெரும் கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அந்தப் பாடல்களுக்கு அமைத்த ராகங்களில் அவை கற்பிக்கப்படும்.
யூனோஸ் வட்டாரத்தில் 5, லோரோங் சாலே இல்லத்தில் இயங்கிவரும் ‘ஸ்வராத்மிகா’ கலைப்பள்ளியின் நிறுவனர் ஸ்ரீப்ரியா விஜய் வகுப்புகளை நடத்துகிறார்.
வகுப்புகள் இலவசம் என்றாலும் கற்றுக்கொள்வோர்க்கு கர்நாடக இசையில் அறிமுகமும் இசையில் நாட்டமும் இருக்கவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே வகுப்புக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளோர் 8599 3914 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

