டிக்டாக் தளம் தனது தரவு சேகரிப்பு ஆற்றலை விரிவுபடுத்தி வருகிறது. டிக்டாக் அதன் செயலியில் ஒருவர் செய்யும் அனைத்தையும் கண்காணிக்கிறது.
ஆனால், டிக்டாக்குடன் எந்தத் தொடர்பும் இல்லாத இணையத்தின் மற்ற பகுதிகளிலும் அந்த நிறுவனம் ஒருவரை எப்படிப் பின்தொடர்கிறது என்பதுதான் அதிகம் வெளித்தெரியாத விஷயமாகும்.
ஒருவர் அந்தச் செயலியை ஒருபோதும் பயன்படுத்தாவிட்டாலும் கூட அவரை பற்றிய உணர்திறன் வாய்ந்த, தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை டிக்டாக் சேகரிக்கிறது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் தொடர்புடைய சில நிறுவனங்களுக்கு டிக்டாக்கின் அமெரிக்கச் செயல்பாடுகள் விற்கப்பட்ட சில வாரங்களிலேயே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அரசாங்கத்தின் தரவுக் கோரிக்கைகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து தன்னிடம் வெளிப்படையான வழிகாட்டுதல்கள் இருப்பதாக டிக்டாக் கூறினாலும், இந்த ஒப்பந்தம் சில மனித உரிமை நிபுணர்கள், பயனர்களிடையே புதிய தனியுரிமைக் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சில எளிய வழிகள் மூலம் தகவல்களை டிக்டாக்கின் கைகளில் சிக்காமல் பாதுகாக்க முடியும்.
ஒருவரின் இணையச் செயல்பாட்டைக் கண்காணிக்க நிறுவனங்கள் பயன்படுத்தும் கண்காணிப்புக் கருவியான டிக்டாக்கின் ‘பிக்சலில்’ செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்களை இந்தப் பிரச்சனை மையமாகக் கொண்டுள்ளது.
கண்காணிப்பு பிக்சல்கள் புதிதன்று. கூகுள், மெட்டா, நூற்றுக்கணக்கான பிற நிறுவனங்கள் இணையம் முழுவதும் மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ரகசியமாகக் கண்காணிக்கப் பல ஆண்டுகளாக இவற்றைப் பயன்படுத்தி வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
உதாரணத்திற்கு, மேலும் அதிக தரவுகளைச் சேகரிக்க உதவுவதற்காக நிறுவனங்கள் தங்களது இணையதளங்களில் பிக்சல்களைப் பொருத்த டிக்டாக் ஊக்குவிக்கிறது.
இது அடிப்படையில் டிக்டாக்கின் பொறுப்பு அல்ல என்று டிக்டாக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகிறார்.
இணையதளங்கள் தனியுரிமைச் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தங்களது தரவு நடைமுறைகள் குறித்து பயனர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஒருவர் பயன்படுத்தக்கூடிய சில தனியுரிமைக் கட்டுப்பாடுகளையும் டிக்டாக் கொண்டுள்ளது.
செயலியில் உள்ள ஒரு அமைப்பைப் பயன்படுத்தி பிக்சல்கள் மூலம் டிக்டாக் சேகரிக்கும் தரவை பயனர்கள் அகற்ற முடியும்.
கணக்கு இல்லாதவர்கள் தங்களைப் பற்றி டிக்டாக் வைத்திருக்கும் எந்தவொரு தரவையும் நீக்குமாறு டிக்டாக்கிடம் கேட்கலாம்.
தரவை பாதுகாக்க ஒருவர் தனிப்பட்ட இணைய உலாவியை பயன்படுத்தலாம். உலாவியை மாற்றுவது சிரமமாக இருந்தால் இந்தக் கண்காணிப்பான்களைத் தடுக்கும் ஒரு உலாவி நீட்டிப்பை பயன்படுத்தலாம்.
சிறந்த தனியுரிமைச் சட்டங்களே இதற்கான உண்மையான தீர்வாகும். இது ஒரு தளத்துடன் மட்டும் தொடர்புடைய பிரச்சனை அல்ல.
இது ஒரு பரந்த விளம்பர தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு சார்ந்த பிரச்சனையாகும். இதற்கு இறுதியில் வலுவான கட்டுப்பாடுகள் மூலமாகவே தீர்வு காணப்பட வேண்டும்.

