டெளன்டவுன் ஈஸ்ட்டில் இவ்வாண்டு நடைபெறும் சுவாரசியமான நடவடிக்கைகளில் ஒன்றாக, புதையல் தேடல் ஜனவரி 18, பிப்ரவரி 8ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. நண்பகல் 12 மணி முதல் தேடல் தொடங்கும்.
டெளன்டவுன் ஈஸ்ட் கடைத்தொகுதியில் ஐந்து பாளங்கள் (ingot) மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கண்டுபிடித்தாலும் மொத்தம் $500 அல்லது $1,000 மதிப்பிலான டெளன்டவுன் ஈஸ்ட் பற்றுச்சீட்டுகள் கிடைக்கும்.
பாளங்களின் இருப்பிடங்கள் குறித்த தடயங்களை @downtowneast டிக்டாக் பக்கம்வழி பெறலாம்.
பாளத்தைக் கண்டுபிடித்ததும், @downtowneast டிக்டாக் பக்கத்துடன் இணைந்து ஒரு ‘டூவெட்’ காணொளியை உங்கள் சொந்த டிக்டாக் பக்கத்தில் பதிவேற்றவேண்டும். பின்பு பாளத்தை ‘இ!அவென்யு’ இரண்டாம் தளத் தகவலிடத்திற்கு எடுத்துச் சென்று பரிசைப் பெறலாம்.
இந்தத் தேடலில் பங்கேற்க, https://bit.ly/DEMoneyHunt25 இணையப்பக்கத்தில் பதிவுசெய்யவேண்டும்.
மேலும், சீனப் புத்தாண்டை முன்னிட்டு, டெளன்டவுன் ஈஸ்ட்டில் பல அன்பளிப்புகளையும் எதிர்பார்க்கலாம்.
ஜனவரி 2 முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை, டெளன்டவுன் ஈஸ்ட்டில் என்டியுசி உறுப்பினர்களும் பொதுமக்களும் என்டியுசி ஃபேர்பிரைஸ் ரசீதுகளையோ மற்ற ரசீதுகளையோ காண்பித்து குறுகியகால பாண்டா கரடி சிவப்புப் பண உறைகள், பாண்டா உணவுத் தட்டுகளைப் பெறலாம்.
சீனப் புத்தாண்டன்று (ஜனவரி 29, 30) வாடிக்கையாளர்கள் டௌன்டவுன் ஈஸ்ட்டில் இலவசமாக கார்களை நிறுத்தலாம்.
தொடர்புடைய செய்திகள்
இரவை இன்பமாகக் கழிக்க, டெளன்டவுன் ஈஸ்ட்டிலுள்ள பல உணவகங்களுக்கும் சென்று பாண்டா சார்ந்த உணவுகளை ருசிக்கலாம். ‘பாண்டாவின் மாம்பழ இன்பம்’, பாண்டா மேக்கரான்கள், மூங்கில் போத்தலில் ‘மில்க் டீ’ போன்ற உள்ளூர், ஆசிய, அனைத்துலக உணவுகளை உண்டு மகிழலாம்.