பறவைக் காய்ச்சலுக்கு எதிராக தமிழகத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கை

பறவைக் காய்ச்சலுக்கு எதிராக தமிழகத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கை

கோப்புப்படம்: Twitter/@சுப்ரியா சாகு

23 Mar 2026 - 6:12 pm

2 mins read

சென்னை: சென்னையின் சில பகுதிகளில் காகங்கள் இறந்து கிடந்தது குறித்து கால்நடை ஆய்வு நிலையம் ஆய்வு மேற்கொண்டது. அதில், எச்1என்1 எனப்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் அந்தக் காகங்கள் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து, சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு தமிழகத்துக்கு வலியுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகச் சுகாதாரத்துறை பறவைக்காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்குத் தொற்றுப் பரவுவதற்கு வாய்ப்புள்ளது எனவும் அவற்றின் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில் இந்த நோய் பரவக்கூடும் என்றும் கால்நடை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதிக்​கப்​பட்ட பறவை​யிடம் இருந்​தோ, மனிதரிடம் இருந்தோ மற்​றவர்​களுக்​கு, `வெஸ்ட் நைல் வைரஸ்’ பாதிப்பை கொசுக்​கள் கடத்​தும் என்​ப​தால், நோய்ப் பரவல் வாய்ப்பு அதி​கம் உள்​ளது.

அதனால், காய்ச்​சல், தலை​வலி, தசைப்​பிடிப்​பு, இரு​மல், மூச்சு திணறல் போன்​றவை ஏற்​பட்​டால் உடனடி​யாக மருத்​து​வரை அணுகி சிகி​ச்சை பெறு​மாறு தமிழகச் சுகா​தா​ரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதற்​கிடை​யில், சென்​னையைத் தொடர்ந்​து, திரு​வள்​ளூர், திரு​வண்​ணா​மலை, கடலூர் உள்​ளிட்ட பல மாவட்​டங்​களி​லும், புதுச்​சேரி​யிலும் காகங்​கள் உயி​ரிழந்​தன. கிண்டி உயி​ரியல் பூங்​கா​வில் பறவை​கள் உயி​ரிழந்​த​தால், பூங்கா மூடப்​பட்​டது.

இது குறித்து தமிழக பொதுச் சுகா​தா​ரத்​ துறை அதி​காரி​கள் கூறுகை​யில், “தமிழகத்​தில் பறவைக் காய்ச்​சலால் காகங்​கள் உயி​ரிழந்​தா​லும், மனிதர்​கள் பாதிப்படையவில்லை. காகங்​கள் உயி​ரிழப்​பது தொடர்ந்து வரு​வ​தால், பொது​மக்​கள் எச்​சரிக்​கை​யுடன் இருக்க வேண்​டும்.

“பறவைக் காய்ச்​சலால் கோழிகள் பாதிக்​கப்பட அதிக வாய்ப்​புள்​ளது. எனவே, கோழி இறைச்​சியை நன்கு வேக வைத்து சாப்​பிட வேண்​டும். தமிழகம் முழு​வதும் நோய்த் தடுப்பு நடவடிக்​கைகளை சுகா​தா​ரத் ​துறை எடுத்து வரு​கிறது. எனவே, பொதுமக்​கள்​ அச்​சமடைய வேண்​டாம்,​” என்று அது தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் இறந்தாலும், மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இதுவரையிலும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், மக்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைக் காய்ச்சலால் 40க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்ததால், தீவிரத் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பறவைக் காய்ச்சல் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கிண்டி சிறுவர் பூங்காவில் வேடந்தாங்கல், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. குறிப்பாக கரண்டிவாயன், வண்ண நாரை, வெள்ளை அரிவாள்மூக்கன், சாம்பல் வங்காள கழுகு உள்ளிட்ட 10 வகையான 200க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்