ஆர். கலாமோஹன், வழக்கறிஞர்
உண்மையா? பொய்யா? உண்மைச் செய்தியா? பொய்ச் செய்தியா? இது தான் இன்று உலகத்தையே வாட்டி வதைக்கும் ஒரு கேள்வி. செய்தித்தாள் மட்டும் நாம் படித்துக் கொண்டிருந்த, வானொலி, தொலைக் காட்சி செய்திகளைக் கேட்டுக் கொண் டிருந்த காலத்தில் இந்தச் சந்தேகம் அவ்வளவாக இல்லை என்று கூறலாம். ஆனால் இன்று அப்படி இல்லை என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் வரும் செய்திகள் நிறுவனங்களில் இருந்து மக்களுக்கு அளிக்கப்படுகிறது. அந்த நிறுவனங்களை எளிதில் அடையாளம் கொள்ள முடியும்.
எனவே அவர்களுக்கு சமூக பொறுப்பு உண்டு, ஆகையால் பொய் யான செய்திகளையும், தகவல்களை யும் அவை அளிப்பதில்லை. அப்படித் தவறுதலாக அளித்துவிட்டால் உடனே அதை திரும்பப் பெற்றுக் கொண்டு ஊடகங்கள் வருத்தம் தெரிவிக்கின் றன. இந்தச் சூழலில் இந்த ஊடகங்கள் பகிரும் செய்திகளை நாம் நம்புகிறோம். இதைக் காலங்காலமாகப் பல நாடுகளில் பின்பற்றி வருகிறார்கள்.
ஊடகங்களின் தன்மையும், அதனை வாசிக்கும், பார்க்கும், பரப்பும் மக்களின் எண்ணிக்கையும், செய்திகள் பரவும் துரி தத்தன்மையும் வெகுவாக அதிகரித்து விட்டன. ஃபேஸ்புக், டுவிட்டர் மூலம் தகவல்கள் பல ஆயிரம் பேருக்குத் தருகிறது. அதில் உண்மையான தகவல்களும் பொய் யான தகவல்களும் பரப்பப்படுகின்றன. இதை எந்த ஒரு நிறுவனமும் பரப்பினால் அதை அடையாளங்கண்டு அதன் மீது பாதிக்கப் பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா பொய்யான தகவல்களைப் பரப்பியது என்று கூறப்படுகிறது. அதை ரஷ்யர்கள் மறுக்கிறார்கள். அதே சமயத்தில் போப் பாண்டவர் பிரான்ஸிஸ் டோனல்ட் டிரம்ப்பை ஆதரிக்கிறார் என்ற பொய்ச் செய்தி உலா வந்தது. அது மட்டுமல்ல, மத்திய புலனாய்வுத் துறை அதிகாரி ஹில்லரி கிளிண்டனைப் பற்றி விசாரித்துக்கொண்டிருந்ததாகவும் அவர் தன்னுடைய அறையில் மாண்டு கிடந்தார் என்றும் செய்தி பரவியது; இதுவும் ஒரு பொய்ச் செய்தி.
எனவே பொய்ச் செய்திகள் பலரையும் பாதிக்கின்றன. நேரத்தோடு கண்டுபிடிக் கப்பட்டு, தடுக்கப்படாவிட்டால் விளையும் சேதங்கள் பெரும் அதிர்வுகளை உண் டாக்கிவிடும்.
உண்மைச் செய்தி எது, பொய்ச் செய்தி எது என்று எப்படிக் கண்டுபிடிப்பது; யார் இந்தப் பொறுப்பை மேற்கொள்வது, அரசாங்கமோ, ஒரு நிறுவனமோ பாதிக்கப் பட்டால் அவர்களுக்கு ஆள்பலமும் பண பலமும் இருக்குமாயின் நடவடிக்கைகள் எடுத்து அதைக் கட்டுக்குள்கொண்டு வர முயற்சி செய்வார்கள். அதில் வெற்றி அடைவார்களா என்பது கேள்விக்குறி தான்.
அந்தப் பொய்ச் செய்தியால் சேதமும், நஷ்டமும் ஏற்பட்டுவிட்டால் அதை எப்படி சரிசெய்ய முடியும். ஈடுகட்ட முடியாத விளைவுகள் ஏற்பட்டிருக்கலாம். அதை எப்படிச் சமாளிப்பது? பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மிகுந்த மனஉளைச்சலோடு இருப்பார்கள்.
எதிர் நடவடிக்கைகள் எடுத்து பொய்ச் செய்திகளை அகற்ற வேண்டும். இதில் பெரும் பொருட்செலவு கள் உண்டாகலாம். அந்த நாட்டின் அல் லது நிறுவனத்தின் அன்றாட நடைமுறை கள் பாதிக்கப்படும்.
இம்மாதம் 11ஆம் தேதி ஜோகூர் மாநில பட்டத்து இளவரசர் ஒரு பேரங்காடி யில் பொருள் வாங்குபவர்களுக்கு தலா 3,000 மலேசிய ரிங்கிட்டை வழங்கி, அன்று மட்டும் 1 மில்லியன் மலேசிய ரிங் கிட்டை இனாமாக வழங்கியிருக்கிறார் என்பது மக்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி யாக இருந்தது. இது ஓர் உண்மைச் சம்பவம், உண்மைச் செய்தி.
அந்த உண்மைச் செய்தி எவ்வளவு இன்பத்தை அளித்ததோ, அதை அடிப்ப டையாக வைத்து பொய்ச் செய்தி காட்டுத் தீயைப் போல் பரவி துன்பத்தை அளிக் கிறது. மற்றொரு பேரங்காடியிலும், ஜோகூர் பட்டத்து இளவரசர் மக்கள் வாங்கும் பொருட்களுக்கு இனாமாக பணம் கட்டு கிறார் என்ற செய்தி பரவியது.
இந்தச் செய்தி பரவியதும் கூட்டம் கூட்டமாக மக்கள் அந்தப் பேரங்காடிக்குப் படையெடுத்து பொருட்களை வண்டியில் வைத்து தயார்நிலையில் இருந்திருக்கின்ற னர். செய்தி உண்மையில்லை என்று தெரிந்தவுடன் எடுத்த பொருட்களை அங் கேயே போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
இதனால் அந்தப் பேரங்காடிக்கு இயல் பான தொழில் செய்ய முடியாமல் போய் விட்டது. அதே சமயத்தில் பேரங்காடிக்குச் சென்ற மக்களுக்கு ஏமாற்றம். பொய்ச் செய்தி பரப்பியது யார் என்று போலிசார் புலன்விசாரணை செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் என்ன? சமூகப் பொறுப்புணர்ச்சி இல்லாமை. சமூ கப் பொறுப்புணர்ச்சி எப்படி உண்டாகும் அல்லது எப்படி உருவாக்குவது? பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பொய்ச் செய்திகளின் பாதிப்புகளை எடுத் துச் சொல்லி, அதைப் பேசக்கூடாது, எழு தக்கூடாது, பரப்பக்கூடாது என்று வலி யுறுத்த வேண்டும்.
கருத்தரங்குகள், பேச்சுப்போட்டிகள், பட்டிமன்றங்கள், பதாகைகள் போன்றவற் றில் இதன் விளைவுகளைச் சுட்டிக் காட்ட லாம். வானொலி, தொலைக்காட்சிப் படைப்பா ளர்கள் இதைப் பற்றிப் பேசலாம். நன்மை, தீமைகளை ஆராயலாம். ஆபத்துகள் விளைவிக்கும் என்று தெரிவிக்கலாம்.
இதையெல்லாம்விட ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைக்கப்பெறும் செய்தி களைக் கண்மூடித்தனமாக மற்றவர் களுக்கு அனுப்பாமல் இருந்தாலே பாத கங்கள் பல குறையும். மற்றவர்களுக்குப் பாடமாகச் சொல் லிக் கொடுக்க முடியாது! அறிவுரை யாகச் சொல்லலாம். ஆனால் அதைச் செவி கொடுத்து கேட்பார்களா என்பது அவரவர் விருப்பு வெறுப்பைப் பொறுத் தது. இந்தப் பொறுப்புணர்ச்சி அவசியம் என்று நமக்குப் புரிவதால், இதை நேர் முகமாக இல்லாவிட்டாலும் பிறவழி களில் பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
1996ல் சிங்கப்பூரின் மூத்த அர சியல் தலைவரான அமரர் டாக்டர் டோ சின் சாய், ஒரு வாகன விபத்தில் 17 வயது மாணவனை மோதிய பிறகு அந்த இடத்தைவிட்டு தப்பித்துச் சென்றுவிட்டார் என்று செய்தி வந்தது. ஆனால் அது பொய்ச் செய்தி என்று பிறகு கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நாளிதழ் இழப்பீடு வழங்கி மன்னிப்பும் கேட்டது. கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப் பதே மெய் என்ற முதுமொழிக்கு இணங்கச் செயல்பட்டால் நாம் அனை வருமே பொய்ச் செய்திகளைப் பரப்பா மல் இருக்க முடியும். அதனால் விளை யும் தீமைகளைத் தடுக்க முடியும்.

