தமிழ் முரசின் படைப்பிலக்கியத் திட்டம்

தமிழ் முரசின் படைப்பிலக்கியத் திட்டம்

2 mins read
e29fc690-f99d-46ca-88a2-58f3f945a569
கவிதைப் பயிலரங்கை வழி நடத்தவிருக்கும் பேராசிரியர் திரு சு வேணுகோபால் -
multi-img1 of 2

வளரும் இலக்கிய தலைமுறையின ருக்கு கூடுதலான இலக்கிய அறிமுகத்தை வழங்கும் நோக்கத்தில் தேசிய கலைகள் மன்றத்துடன் இணைந்து படைப்பிலக்கியத் திட்டம் ஒன்றைத் தமிழ் முரசு தொடங்கியுள்ளது.

இத்திட்டம் புதிய, வளரும் எழுத்தாளர்கள் தங்களது படைப் பாற்றலை வளர்க்கவும் உதவும். அவர்களது படைப்புகளுக்கு களம் அமைத்துத் தரும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மே, ஜூலை மாதங்களில் சிறுகதை, கவிதைப் பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வகைமையில் எழுத் தாற்றலை மேம்படுத்தும் நோக்கத் தில் இந்தப் பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தமிழ்ப் படைப்பிலக்கியத் துறை யில் அனுபவம் பெற்ற பிரபல மான படைப்பாளர்கள் இந்தப் பயிலரங்கு களை வழிநடத்துவார்கள்.

பயிலரங்குகள்

முதல் பயிலரங்கு மே மாதம் 4ஆம் தேதி நடைபெறுகிறது. நவீன கவிதை எழுதுவது குறித்த இந்தப் பயிலரங்கை எழுத் தாளரும் கல்வியாளருமான பேராசிரியர் சு.வேணுகோபால் வழிநடத்துவார்.

இரண்டாவது பயிலரங்கு மே மாதம் 11ஆம் தேதி நடைபெறும்.

இந்தப் பயிலரங்கில் அறிவியல் புனை கதைகள், வரலாற்றுக் கதைகள் எழுதுவது குறித்து எழுத்தாளர் டாக்டர் சுனில் கிருஷ்ணன் விளக்குவார். சிறுகதை, கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ள 16 வயதுக்கு மேற் பட்ட சிங்கப்பூரர்களும் நிரந்தவாசி களும் இந்தப் பயிலரங்குகளில் பங்கேற்கலாம்.

கட்டணம்: மாணவருக்கு: $10.00, பெரியவருக்கு: $15.00

மே 4, மே 11 இரு சனிக்கிழமை களிலும் காலை 9.45 முதல் மாலை 5.30 மணி வரை பயிலரங்கு நடைபெறும். காலை, மதிய உணவுகள் உண்டு.

கவிதைப் பயிலரங்கில் பங்கேற் பவர்கள் மூன்று முதல் ஆறு கவிதைகளை அனுப்ப வேண்டும். சிறுகதை பயிலரங்கில் ஆர்வமுள்ள வர்கள் தாங்கள் எழுதிய சிறுகதை அல்லது சிறுகதைக்கான குறிப்பை அனுப்பலாம். ஒருவர் இரு பயிலரங்குகளிலும் பங்கேற்கலாம். எனினும் இரண்டுக்கும் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டும்.

வழிநடத்துபவர்கள் பங்கேற் போரின் படைப்புகள் குறித்து பேசுவதுடன் அவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதற்கும் வழிகாட்டுவார்கள்.

பயிலரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் பெயர், முகவரி, அடையாள அட்டை எண், தொடர்பு விவரங்களுடன் tamilmurasu@sph.com.sgஎன்ற மின்னஞ்சல் முகவரியில் 10.4.2019 தேதிக்கு முன்னர் பதிவு செய்யவும். உங்கள் படைப்புகளையும் மறவாமல் அனுப்பி வைக்கவும்.