- இரா சத்திக்கண்ணன்
அவனின் குறுஞ்செய்திகளை அடிக்கடி படிக்கிறேன்
அவனின் புகைப்படத்தை அடிக்கடி பார்த்துக்கொள்கிறேன்
அவனின் பேச்சுக்களை மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கிறேன் அவனின் வெகுளித்தனமான தருணங்களை எண்ணி எண்ணிச் சிரிக்கிறேன்
அவனின் தொலைபேசி எண்ணை திறன்பேசியிலிருந்து அழிப்பது கடினம் தான்
இறந்த என் நண்பனின் தொலைபேசி எண் பத்திரமாக இருக்கட்டும்

