தேக்காவில் தேன்மழை

தேக்காவில் தேன்மழை

1 mins read
36593af1-08e9-4271-ae55-8e291ead713f
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

- அமீதாம்மாள்

ஒளியூட்டு விழா தீப ஒளியூட்டு விழா இன்றுமுதல் தேக்காவில் பகலைத் தொடர்வது இன்னொரு பகலே தொடங்கும் நிகழ்வுக்கு அதிபர் வருகிறார் இன்று பெய்தால் இடையூறாம் நாளை பெய்வோம் திரும்புகிறது மழை... நாளை பூத்து என்ன பயன்? அவசரம் அவசரமாய் அவிழும் மலர்கள்... இயல் இசை நாடகமாய் இருநூற்றாண்டின் இனிய நினைவுகள் வண்ண மயில்கள் வானவில் துண்டுகள் பஞ்சவர்ணக் கிளிகள் கொஞ்சுதமிழ்க் குயில்கள். இந்தியானா கப்பலில் எம் தமிழ் மக்கள் குதூகலம் கொண்டாட்டம். இதோ தொடங்கி வைக்கிறார் அதிபர் 5..4..3..2..1 மின்னுகிறது மில்லியன் கணக்கில் மின்சாரப் பூக்கள் வானத்தில் விரிகிறது மின்னல் தூரிகையின் மத்தாப்புத் தூறல்கள் தொடங்கிவிட்டது தீபாவளி 2019.