உயிர்ப்பசி

துரை மாடி­யி­லி­ருந்து இறங்கி வந்­தார். கூடத்­­தில் சக்­க­ர­நாற்­காலி மூலை­யில் இருந்­தது. வள்­ளி­யைக் காண­வில்லை. மனத்­தில் திக்’கென்­றது. குளி­ய­ல­றை­யில் பார்க்­க­லாம் என்று இரண்­டடி எடுத்து வைத்­தார். பூங்­கா­வ­னம் எதிர்ப்­பட்­டாள்.

“அம்மா எங்கே?...”

“இங்­க­தான் டிவி பாத்­து­கிட்டு இருந்­தாங்க...” இழுத்­தாள்.

“வெளி­யில பாரு!..”

வீட்­டை­விட்டு வெளி­யேறி முற்­றத்­தைக் கடந்து சாலை ஓரத்­தில் நின்று வலது பக்­க­மும் இடது பக்­க­மும் பார்த்­து­விட்டு உள்ளே வந்­தாள்.

“வெளி­யில இல்­லங்க அப்பா. நான் போய்ப் பார்த்­துட்டு வாரேன்.” அவள் அவரை அப்பா என்­று­தான் அழைப்­பாள்.

“இரு. நான் போறேன்.” வலது பக்­கம் திரும்­பிய உடனே இடது பக்­க­மாக நடக்­கத் தொடங்­கி­னார். தரை வீடு­க­ளைத் தாண்­டி­ய­தும் ஓர் அடுக்­கு­மாடி புளோக் நிமிர்ந்து நின்­றது. அதை­யும் கடந்­த­தும் சாலையை ஒட்­டி­னாற்­போல அந்­தச் சிறிய ‘உடற்­ப­யிற்சி மூலை’ அமைந்­தி­ருந்­தது. உடற்­ப­யிற்­சிச் சாத­னங்­கள் பொருத்­தப்­பட்­டி­ருந்த பகு­தி­யில் மட்­டும் அடர் சிவப்பு வண்­ணத்­தில் மெத்­தென்று கால்­ப­தி­யும் பிளாஸ்­டிக் கலந்த ‘ரப்­பர் டைல்ஸ்’ வேயப்­பட்­டி­ருந்­தது. மற்­ற­படி சுற்­றி­லும் சிமென்ட் தரை. ஓரத்­தில் சில இடங்­களில் மேற்­கூரை வேயப்­பட்டு அம­ரு­வ­தற்கு வச­தி­யாக துவா­ரங்­கள் இடம்­பெற்ற இரும்பு இருக்­கை­கள் எதி­ரெ­திரே அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. ஒரு மூலை­யில் வள்­ளி­யும் டோரி­சும் அமர்ந்து பேசிக்­கொண்­டி­ருந்­தார்­கள்.

இருக்­கை­க­ளுக்­கி­டையே ஒரு மீட்­டர் இடை­வெளி இருந்­தது!

அவ­ரைப் பார்த்த­தும் வள்ளி கையை உயர்த்தி அழைத்­தார். அரு­கில் சென்­ற­தும் டோரிஸ் நலம் விசா­ரித்­தாள். தாம் வள்­ளி­யைத் தேடிக்­கொண்டு வந்­த­தைக் கூறி­னார்.

“ஹய்யா, ஜாங்­கான் தக்­குட்லா! சயா அடா...” தான் இருப்­ப­தால் பயப்­பட வேண்­டி­ய­தில்லை என்று மலா­ய் மொழியில் டோரிஸ் சிரித்­துக்கொண்டே கூறி­னாள். துரை பதில் சொல்­ல­வில்லை.

டோரி­சுக்கு எண்­பது வயது இருக்­கும். பக்­கத்து வீட்­டில் வசிக்­கி­றாள். வள்­ளிக்கு எழு­பத்­தைந்து வய­து­தான். ஆனால், டோரி­சை­விடத் தளர்ந்­தி­ருந்­தாள். இரு­வ­ரும் மிக நெருக்­க­மான தோழி­கள். துரை அந்த ‘டெரஸ்’ வீட்டை முப்­பது ஆண்­டு­க­ளுக்கு முன் வாங்­கி­ய­தி­லி­ருந்து பழக்­கம்.

“டூடோலா...!” டோரிஸ் உட்­கா­ரச் சொன்­னாள். துரை தன் மனைவி அமர்ந்­தி­ருந்த இருக்­கை­யில் ஒரு மூலை­யில் அமர்ந்­தார்.

“சொல்­லிட்டு வர்­ற­தில்­லையா?...” மனை­வி­யி­டம் செல்­ல­மா­கக் கேட்­டார்.

“டோரிஸ் வந்தா. நானும் வந்­துட்­டேன்...’ கல்­யாணி தன் செய­லுக்கு நியா­யம் கற்­பித்­தாள்.

“அவ போனா நீயும் போயி­டு­வியா?” வார்த்தை உத­டு­வரை வந்து நின்­றது.

“சரி பேசிட்டு வா. பூங்­கா­வ­னத்தை ஒத­விக்கு அனுப்­பவா?”

“நான் மெதுவா நடந்து வந்­தி­டு­வேன்..” என்று கல்­யாணி சொன்­ன­தும் துரை புறப்­பட்­டார்.

மூன்­றரை மாத­மா­க சிங்­கப்­பூர் ‘கொவிட்-19’ என்று அழைக்­கப்­படும் ‘கொரோனா’ உயிர்க்­கொல்­லிக் கிரு­மித்தொற்­றால் அல்­லோல கல்­லோ­லப்பட்­டது. வானொ­லி­யில், தொலைக்­காட்­சி­யில், செய்­தித்­தாளில் எங்­கும் அந்­தப் பொல்­லாத கொள்ளை நோய்க்கிரு­மி­யைப் பற்­றிய பேச்­சு­தான். அதுகுறித்த பாது­காப்பு எச்­ச­ரி­கை­தான்!

சீனா­வின் ‘வூகான்’ நக­ரில் கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் தொடங்­கிய கிரு­மித்தொற்று உலகை உலுக்­கிக்கொண்­டி­ருந்­தது. வெள­வால் மூல­மா­க­வும் பாம்­பின் மூல­மா­க­வும் கிரு­மித்தொற்று தொடங்­கி­ய­தா­கப் பேச்சு அடி­பட்­டா­லும் வெள­வால்­தான் கார­ணம் என்று பின்­னா­ளில் சில ஊட­கங்­கள் உறு­தி­யா­கத் தெரி­வித்­தன! அது உண்­மை­யாக இருந்­தால் நல்­ல­து­தான்!

ஏறக்­கு­றைய கடந்த மூன்­றரை மாத­மா­கக் காலை­யில் எழுந்­த­தும் ‘பிபிசி’, ‘சிஎன்­என்’ தொலைக்­காட்­சி­யைப் பார்ப்­ப­தும் செய்­தி­யைக் கேட்­ப­தும் காலை ஒன்­ப­தரை மணிக்­குச் ‘சன்’ செய்­தி­யைப் பார்ப்­ப­தும் இரவு 8.30 மணிக்­கும் வசந்­தம் செய்­தி­க­ளைப் பார்த்து விவ­ரங்­களை அறி­வ­தும் தலை­யாய வேலை­யாய்ப் போய்­விட்­டது துரை என்ற அண்­ணாத்­து­ரைக்கு.

சில வேளைகளில் காலை­யில் சன் நியூஸ் பார்க்க அவர் அரு­கில் வள்ளி ஆவ­லு­டன் வந்துவிடு­வார். வள்­ளியை அதி­கா­லை­யில் அவர் எழுப்ப மாட்­டார். தானாக எழுந்து வரட்­டும் என்று இருந்து விடு­வார். தமி­ழில் செய்தி வாசிப்பு இடம்­பெற்­றா­லும் அவ­ளுக்கு பெரும்­ப­கு­திச் செய்­தியை அவர்­தான் விளக்­கிச் சொல்ல வேண்­டும். செய்தி வாசிப்­ப­வர்­களில் சிலர் அசுர வேகத்­தில் வாசிப்­பார்­கள்! முற்­றுப்­புள்ளி, கால்­புள்ளி இடம்­பெ­றும் இடங்­களில் இடை­வெளி விடு­வ­தற்கு மாத்­திரை அளவு தமிழ் இலக்­க­ணத்­தில் சொல்­லப்­பட்­டி­ருக்­கிறது என்­பது அவர்­க­ளுக்­குத் தெரி­யுமா என்­பதே ஐயம்­தான்! ஒரு பத்­தியை விடு­விடு என்று படித்­து­விட்­டுத்­தான் கொஞ்­சம் மூச்­சு­வி­டு­வார்­கள்! அவர்­கள் என்ன சாதிக்க விரும்­பு­கி­றார்­கள் என்­பது அவர்­க­ளுக்­குத்­தான் வெளிச்­சம் என்று பல வேளை­களில் துரை வருத்­தப்­ப­டு­வ­துண்டு!

மலாய்­மொ­ழியை இரண்­டாம்­மொழி­யா­கப் படித்­த­வர் வள்ளி. சிங்­கப்­பூர்ப் பேச்­சுத் தமி­ழுக்­குப் பழக்­கப் பட்­ட­வர். தமிழ் ராஜா ராணிப் படங்­க­ளி­லும் புரா­ணப்­ப­டங்­க­ளி­லும் இடம்­பெ­றும் செந்­த­மிழ் உரை­நடை சுத்­த­மாக வள்­ளிக்­குப் புரி­யாது; அத­னால் அப்­ப­டங்­கள் பிடிக்­காது.

ஆரம்­பத்­தில், சிங்­கப்­பூ­ரில் மிகக் குறைந்த அள­வில் இடம்­பெற்ற கிரு­மித்தொற்றை அறிந்­த­தும் வள்­ளிக்கு ஏகப்­பட்ட பெருமை! “சிங்­கப்­பூர்ல நம்­பளை எல்­லாம் ‘கவர்­மண்ட்’ நல்லா ‘ஜாகா’ பண்­ண­றாங்க! மத்த நாடு­க­ளைப் பாருங்க, சிங்­கப்­பூ­ரை­யும் பாருங்க!...” என்று பெருமை பேசி­னார். ஆனால், நாள் ஆக ஆக அத­னால் பாதிப்­புக்­குள்­ளா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை இரண்­டா­யி­ரத்­துக்கு உயர்ந்­த­தும் பத்­துப்­பேர் இந்­நோ­யால் இறந்து போனதை அறிந்­த­தும் வள்ளி அதிர்ச்­சி­ய­டை­யத் தொடங்­கி­னார். அதற்­கேற்­ப சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்தொற்­றுப் பர­வல் அதி­க­ரித்­துக்கொண்டே சென்­றது.

பள்­ளி­கள், கல்­விக்­கூ­டங்­கள், பல்­க­லைக்­க­ழகங்­கள் யாவும் மே மாதம் நான்­காம் தேதி­வரை மூடப்­பட்­டன. பிள்­ளை­கள் வீட்­டி­லி­ருந்தே இணை­யத்­தில் நிகழ்­நி­லை­வ­ழியே படிக்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. திடீ­ரென்று தோன்­றிய எதிர்­பா­ராத சவா­லைச் சமா­ளிக்க ஆசி­ரி­யர்­கள் அரும்­பா­டு­பட்­ட­னர். ‘ஜூம்’, ‘எஸ்­எல்­எஸ்’, ‘ஸ்கைப்’ போன்ற இணை­யச் செய­லி­க­ளைப் பயன்­ப­டுத்தி ஆசி­ரி­யர்­கள் பாடங்­களை நடத்­தி­னர். அங்­கிங்­கெ­னா­த­படி எல்லா நிலைக் கல்வி நிலை­யங்­க­ளி­லும் இம்­முறை இடம்­பெற்­றது.

மிக அவ­சி­யம் இருந்­தா­லொ­ழிய மக்­கள் வெளியே செல்­லக்கூடாது என்று மக்­கள் அறிவுறுத்தப்­பட்­ட­னர். சிங்­கப்­பூ­ரில் ஊர­டங்கு இல்லை என்­றா­லும் என்ன நடக்­குமோ ஏது நடக்­குமோ என்று அச்­ச­முற்ற பொது­மக்­கள் கடை­க­ளி­லும் பேரங்­கா­டி­க­ளி­லும் பொருள்­களை வாங்­கிக் குவித்­த­னர்.

“என்­னங்க இது? சிங்­கப்­பூர்­லயா இப்­படி நடக்­குது..?” அதிர்ச்­சி­யோடு வள்ளி தன் கண­வ­ரி­டம் கேட்­டாள்.

“ஆமா! சுனாமி வந்­திச்­சில்லே, அது மாதிரி இது­வும் ஒரு சுனா­மி­தான்! சங்­க­டம்­தான், கஷ்­டம்­தான்,” என துரை வருத்­தத்­தோடு கூறி­னார்.

“ஏங்க இப்­படி?” வள்ளி புரி­யா­மல் குழப்­பத்­து­டன் கேட்­டாள்.

“பேரி­டர் எப்­போது வரும்னு சொல்ல முடி­யாது வள்ளி.”

“இதுக்­கு சிங்­கப்­பூர்ல கூடவா மருந்து இல்லே!” வள்ளி உண்­மை­யா­கவே கேட்­டாள். சிங்­கப்­பூர் என்­றால் அவ்­வ­ளவு பெருமை வள்­ளிக்கு!

“சிங்­கப்­பூர்ல மட்­டு­மில்ல. அறி­வி­யல்ல உச்­சத்­தில இருக்­குற ஐரோப்­பா­வி­லே­யும் அமெ­ரிக்­கா­வி­லும்­கூட மருந்து இல்ல..”

“அமெ­ரிக்­கா­வி­லே­யுமா?..”

“ஆமா. அமெ­ரிக்­கா­வில, இந்த வியாதி வந்­த­வங்க எண்­ணிக்கை மில்லியனைத் தாண்டிருச்சு! நெருக்கி நூறாயிரம் பேருக்குமேல அமெ­ரிக்­கா­வில இந்­தக் கிரு­மி­யா­ல பாதிக்­கப்­பட்டு செத்­துப் போயிட்­டாங்க! மத்த வியா­திக்­குக் கொடுக்­கிற மருந்­தைக் கொஞ்­சம் மாத்­திக் கொடுத்து சாகி­ற­வங்க எண்­ணிக்­கை­யைக் கொறைக்­கப் பார்க்­கி­றாங்க!”

“ஐயோ, மூத்த பையன் மாறன் அங்­க­தானே இருக்­கி­றான்?”

“கலி­ஃபோர்­னி­யா­வில அவ்­வ­ளவு மோச­மில்லே. கிளி­னிக்கை மூடிட்டு வீட்­டு­ல­தான் இருக்­கி­றா­னாம்! இமெயில் போட்டுருக்கான்”

“சிட்­னி­யில...?”

“அங்கே பர­வா­யில்ல! உல­கம் முழு­வ­தி­லும் இந்­தக் கதி­தான் வள்ளி!..”

முதல் நாள்­தான் மூத்­த­வன் மாற­னும் இளை­ய­வன் கும­ர­னும் கைபேசி­யில் பேசி­னார்­கள். தாங்­களும் மனைவி பிள்­ளை­களும் சுக­மாக இருப்­ப­தா­கச் சொன்­னார்­கள். அவர்­கள் இரு­வ­ரை­யும் வெளியே போகா­மல் பத்­தி­ர­மாக இருக்­கச் சொல்­லித் திரும்­பத்திரும்­பத் வேண்­டிக் கொண்­டார்­கள். ‘வர வர இவ­ளுக்கு ஞாபக மறதி மோச­மா­கிக் கொண்டே போகிறது’ என்று துரை தனக்­குள் வருத்­தத்­து­டன் சொல்­லிக் கொண்­டார்.

துரை­யும் வள்­ளி­யும்­தான் அந்த ஈர­டுக்­குத் தரை­வீட்­டில் இருக்­கி­றார்­கள். உத­விக்கு பூங்­கா­வ­னம் இருக்­கி­றாள். தமிழ்­நாட்­டி­லி­ருந்து வந்த பெண். பட்­டுக்­கோட்டை வட்­டா­ரத்­தைச்சேர்ந்த ஆவிக்­கோட்டை அவள் சொந்த ஊர். மிக­வும் அக்­க­றை­யோடு அவர்­க­ளைப் பார்த்­துக் கொள்­வாள். தமிழ் படித்­த­வ­ளாக இருந்­த­தால் ‘யு டியூப்’பில் கொரோனா பற்­றிய பல தக­வல்­க­ளைப் பார்த்து வள்­ளி­யி­டம் சொல்­லு­வாள். காணொ­ளி­யை­யும் வள்­ளி­யி­டம் காட்­டு­வாள். அவர்­க­ளுக்கு வேண்­டிய உணவு வகை­க­ளைப் பக்­கு­வ­மா­கத் தயா­ரித்­துக் கொடுப்­பாள். வள்ளி வேண்­டா­மென்­றா­லும் பிடி­வா­த­மா­கச் சக்­க­ர­நாற்­கா­லி­யில் உட்­கார வைத்து மாலை­யில் அந்­தத் தனி­யார் பேட்­டை­யைச் சுற்றி வரு­வாள். கொஞ்ச நாட்­க­ளாக வள்­ளி­யால் நிதா­ன­மாக நடக்க முடி­ய­வில்லை. அத­னால், மருத்­து­வ­ரின் ஆலோ­ச­னைப்­படி சக்­க­ர­நாற்­காலி ஏற்­பாடு செய்­தி­ருந்­தார் துரை. சில வேளை­களில் ஊன்று­கோலுடன் வள்ளி மெது­வாக நடந்­தும் போவாள். அப்­படி நடந்துசெல்ல அவ­ளுக்­குப் பிடிக்­கும். துரை ஒன்­றும் சொல்­ல­மாட்­டார். துணைக்­குப் பூங்­கா­வ­னத்தை அனுப்பி வைப்­பார்.

பூங்­கா­வ­னம் எவ்­வ­ள­வு­தான் அன்­போ­டும் அக்­க­றை­யா­டும் பார்த்­துக் கொண்­டா­லும் பெற்ற பிள்­ளை­கள் பக்­கத்­தில் இருப்­பது போலா­குமா? இரு­வ­ரும் வெளி­நாட்­டுக்­குப் படிக்­கப் போனார்­கள். மாறன் மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் படித்­துக் கொண்­டி­ருக்­கும்­போதே ஓர் அழ­கான அமெ­ரிக்­கப் பெண்­ணைக் காத­லித்­துத் திரு­ம­ணம் செய்து கொண்­டான். ‘லிப­ரல் ஆர்ட்ஸ்’ பயில ஆஸ்­தி­ரே­லியா சென்ற கும­ரன் ஒரு பர்­மி­யப் பெண்­ணைத் திரு­ம­ணம் செய்துகொண்­டான். இரண்டு திரு­ம­ணங்­க­ளை­யும் வள்­ளி­யும் துரை­யும் மகிழ்ச்­சி­யோடு நடத்தி வைத்­தார்­கள். இரு­வ­ருக்­கும் ஆணொன்­றும் பெண் ஒன்­று­மாக இரண்­டி­ரண்டு குழந்­தை­கள். பேரப்­பிள்­ளை­க­ளைப் பக்­கத்­தி­லேயே வைத்­துக்கொள்ள முடி­ய­வில்­லையே என்ற கவ­லை­தான்! என்ன செய்­வது? வாரந் தவ­றா­மல் ‘ஸ்கைப்’பில் பேசிக் கவ­லை­யைத் தீர்த்­துக் கொண்­டார்­கள். மாற­னின் மகள் எலி­ச­பெத் அழகோ அழகு, கொள்ளை அழகு!

அவர்­கள் வசித்த பகு­தி­யில் இருந்த காப்­பிக் கடை­களில் நாற்­காலி மேசை எல்­லாம் அகற்­றப்­பட்­டுக் காலி­யாக இருந்­தன. உண­வுக் கடை­க­ளி­லும் அப்­ப­டித்­தான். கடை­க­ளைத் திறந்து வைத்­தி­ருந்­தி­ருந்­தார்­கள். பொருள் வேண்­டு­வோர் வாங்­கிச் செல்­லலாம். அங்­கேயே உண­வ­ருந்­தவோ காபி குடிக்­கவோ முடி­யாது. நாடு முழு­வ­தும் இதே நிலை­தான்!

‘அல்­ஜு­னிட்’ பூங்­கா­வில் மனி­தர்­க­ளைக் காண முடி­ய­வில்லை. வாளிப்­பான உடல் அமைப்­போடு கூட்­டம் கூட்­ட­மாக நடைப் பயிற்­சி­யும் உடற்­ப­யிற்­சி­யும் செய்ய வரும் நேப்­பா­ளப் பெண்­களை அரி­தா­கவே காண முடிந்­தது. ஓர் ஓரத்­தில் அமைந்­தி­ருந்த உடற்­ப­யிற்சி மூலையை ஆரஞ்சு நிறத்­தா­லான துளை­கள் உடைய ‘பிளாஸ்­டிக் பாய்­கள்’ கொண்டு மறைத்­தி­ருந்­தார்­கள். அப்­ப­கு­தி­யைச் சுற்­றிச் சிவப்பு, வெள்ளை நிறத்­தில் அமைந்த நாடா­வால் சுற்­றிக் கட்டி இருந்­தார்­கள். யாரும் அக்­க­ரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்­தக் கூடாது என்­ப­தற்கு அந்த ஏற்­பாடு! அந்­தப் பூங்கா வெறிச்­சோடிக்­கி­டந்­தது. பொது­வாக ஒரு நிலை­குத்­திய நிலை!

“நீ அடிக்­கடி வெளியே போகாதே வள்ளி. வீட்­டுக்­குள்­ளேயே இருக்­க­ணும்னு சொல்லி இருக்­கி­றாங்­கள்ளே..!” துரை மெது­வாக ஆரம்­பித்­தார்.

“நம்ப பக்­கத்­தி­ல­தான் ஒன்­னும் இல்­லையே!..” வள்­ளி­யின் குர­லில் நம்­பிக்கை ஓங்­கி­யி­ருந்­தது.

“இப்­ப­வெல்­லாம் காத்துல கொரோனா கிருமி பர­வு­துன்னு சொல்­றாங்க! வெளி­யில போனா முகக்­க­வ­சம் போட­னும். நம்­பள மாதிரி வய­சா­ன­வங்க கண்­டிப்பா போட­னும்!..”

“அதெல்­லாம் ஒன்­னும் வரா­துங்க.”

“அது எப்­பிடி சொல்றே வள்ளி! இப்ப ஊரு இருக்­கிற நெல­மை­யில, எல்­லாம் நல்லா நடக்­கும்னு நீ எப்­பிடி நம்­புறே? நான் சொல்­ற­தைக் கேளு. டோரி­சைப் பாக்­கு­ற­தை­யும் பேசு­ற­தை­யும் கொறைச்­சிக்க. அது­தான் நல்­லது.” துரை­யின் குர­லில் கண்­டிப்பு தொனித்­தது.

“என்­னங்க நீங்க! டோரி­சைப் பார்க்­கா­தேன்னு சொல்­றீங்க? அவ நல்­லா­தானே இருக்­கிறா..?” கொஞ்­சம் சூடா கேட்­டாள் வள்ளி.

“எப்­போ­தும் நல்லா இருக்க முடி­யா­துல...” துரை அழுத்­த­மா­கக் கூறி­னார்.

வள்­ளி­யின் முகத்­தில் வியப்பு! ‘என்ன இந்த மனு­சன்! டோரி­சைப் போயி இப்­பிடி! அல்­லாம்மா..’ வள்­ளிக்­குக் கேட்க சகிக்­க­வில்லை! எழுந்து சமை­ய­ல­றைக்­குப் போனாள்.

வீட்­டி­லேயே இருக்க வேண்­டும் என்ற அர­சாங்­கத்­தின் வேண்­டு­கோளில் இருந்த தீவி­ரத்­தன்மை வள்­ளிக்­குப் புரி­ய­வில்­லையே என்­ப­தில் துரைக்கு ஏகப்­பட்ட வருத்­தம்!

தன் வீட்­டி­லி­ருந்து மதில் சுவ­ரில் எட்­டிப் பார்த்து டோரி­சோடு சற்று நேரம் பேசு­வது வள்­ளிக்­குப் பிடித்­த­மான ஒன்று. கடந்த ஒரு வார­மாக டோரி­சைப் பார்க்க எட்டி எட்­டிப் பார்க்­கி­றார். அவ­ளைப் பார்க்க முடி­ய­வில்லை! என்­ன­வாக இருக்­கும் என்று துரை­யி­டம் கேட்­டார். அவ­ரும் அப்­பொ­ழு­து­தான் முதல் தட­வை­யாக அதைப் பற்றி நினைத்­துப் பார்த்­தார். அண்­மை­யில் டோரி­சைப் பார்த்­த­தாக நினை­வில்லை. பக்­கத்து வீட்­டில் டோலி­சும் அவள் மகன் வில்­லி­ய­மும்­தான் இருக்­கி­றார்­கள். வில்­லி­ய­முக்கு அவர் இளைய மகன் கும­ரன் வய­து­தான். துரை அங்­கு குடி வந்த ஓராண்­டி­லேயே வில்­லி­ய­மின் தந்தை வேறொரு பெண்­ணு­டன் ஏற்­பட்ட தொடர்­பால் விவா­க­ரத்து வாங்­கிக் கொண்டு போய்­விட்­டார். வில்­லி­ய­மை­யும் கண்­ணில் காண முடி­ய­வில்லை!

பிற்­ப­கல் 2 மணி இருக்­கும். வீட்­டின் அழைப்பு மணி அல­றி­யது!

துரை வாசல் அரு­கில் நின்று கொண்டு தானி­யங்­கிக் கத­வைத் திறந்­தார். திமுதிமு­வென நான்­கைந்து­பேர் நுழைந்­த­னர். துரைக்கு ஒன்­றும் புரி­ய­வில்லை! வள்­ளி­யும் எழுந்து வந்­தார்.

“என்­னங்க...?” தன் கண­வ­னி­டம் மெது­வா­கக் கேட்­டார். தெரி­ய­வில்லை என்று துரை உதட்­டைப் பிதுக்­கி­னார்.

“நாங்­கள் சுகா­தார அமைச்­சி­லி­ருந்து வந்­தி­ருக்­கி­றோம்...” என்று சொல்­லிக்­கொண்டே கழுத்­தில் தொங்­கிய அடை­யாள அட்­டையை ஒரு­வர் காண்­பித்­தார். ரிச்­சர்ட் லீ என்ற பெயர் அவர் புகைப்­ப­டத்­திற்­குக் கீழே தெரிந்­தது. மற்­ற­வர்­கள் கழுத்­தி­லும் அது போன்ற அட்­டை­கள் தொங்­கின.

“என்ன விஷ­யம்?...” துரை தயக்­கத்­து­டன் கேட்­டார்.

“உங்­கள் பக்­கத்து வீட்­டில் இருக்­கி­றாரே டோரிஸ், அவர் கொவிட்-19ஆல் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டி­ருக்­கி­றார்!..” இடது பக்­கத்து வீட்­டைக் காட்டி ரிச்­சர்ட் விவ­ரித்­துக் கொண்­டி­ருக்­கும்­போதே வள்ளி “ஹா...” என்று அல­றி­னார்.

“சச்சூ!.. பேசாம இரு!.. சொல்­லுங்க!...”

“அத­னால, அவ­ரோட தொடர்­பில இருந்­த­வங்­கள விசா­ரிக்க வந்­தி­ருக்­கி­றோம்!...” என்று ஆங்­கி­லத்­தில் சொல்­லிக்­கொண்டே வள்­ளி­யி­டம் பல கேள்­வி­கள் கேட்­டார்­கள்.

“கடை­சி­யாக டோரிசை எங்கு சந்­தித்­தீர்­கள்? எப்­போது சந்­தித்­தீர்­கள்? அதன் பிறகு, நீங்­கள் எங்கு போனீர்­கள்? யார் யாரு­டன் பேசி­னீர்­கள்?” என்று வள்­ளி­யி­டம் பற்­பல கேள்­வி­க­ளைக் கேட்­டார்­கள். இறு­தி­யில், “பதி­னான்கு நாட்­கள் வள்ளி வீட்­டில் தனி­ய­றை­யில் இருக்க வேண்­டும்; அது குளி­யல் அறை­யு­டன் கூடிய அறை­யாக இருந்­தால் மேல்! மற்­ற­வர்­க­ளு­டன் தேவை இருந்­தால் மட்­டும் அறை­யில் இருந்­த­வாறே பேச­லாம்; கொஞ்­சம் கத­வைத் திறந்து உணவு தர­லாம்; அவர் முற்­றா­கத் தனி­மைப்­ப­டுத்­தப்­பட வேண்­டும். மூன்று மணி நேரத்­திற்கு ஒரு முறை உடல் வெப்ப அள­வைத் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும். தேவை ஏற்­பட்­டால் சுகா­தார அதி­கா­ரி­கள் தொடர்­பு­கொண்டு விசா­ரிப்­பார்­கள். வெளியே வரக் கூடாது; மீறி வெளியே வரு­வது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டால் பத்­தா­யி­ரம் வெள்ளி வரை அப­ரா­தம் விதிக்­கப்­படும்,” என்­றும் எச்­ச­ரிக்கை விடுத்­தார்­கள். அவர்­கள் விளக்கி முடிக்­கும்­போது வள்­ளிக்கு மயக்­கமே வந்­து­விட்­டது. அவர்­கள் வலது பக்­கத்­தில் இருந்த திரு லிம் வீட்­டில் விசா­ர­ணைக்­குச் சென்­றார்­கள்.

அதிர்ச்­சி­யு­டன் உள்ளே வந்து வள்ளி நாற்­கா­லி­யில் சரிந்­தாள். கல­வ­ரத்­து­டன் தன் கண­வ­ரின் முகத்­தைப் பார்த்­தாள். சமை­ய­ல­றைக் கத­வோ­ரத்­தில் பூங்­கா­வ­னம் மிரள மிரள விழித்­த­படி நின்று கொண்­டி­ருந்­தாள்.

“இந்­தக் கிரு­மித்­தொற்று ஒடனே தெரி­யாது. பதி­னைஞ்சு நாளைக்­குப் பிற­கு­தான் கண்­டு­பி­டிக்க முடி­யும். நீ பயப்­ப­டாதே! நம்ப நல்­ல­துக்­குத்­தான் இந்த ஏற்­பாடு எல்­லாம். ஒரு முன்­னேற்­பா­டுன்னு வச்­சுக்­க­யேன்...” துரை­யின் குரல் கம்­மி­யது.

“ரொம்ப மோச­மான கிருமி. இல்­லேன்னா, இது­வ­ரைக்­கும் அமெ­ரிக்­கா­வி­லே­யும் ஐரோப்­ப­வி­லே­யும் ஐயா­யி­ரம் பத்­தா­யி­ரம் இரு­ப­தி­னா­யி­ரம்னு ஜனங்க கொத்­துக்­கொத்தா சாவாங்­களா?” துரை வருத்­தத்­தில் உறைந்­து­போ­னார்.

“ஊர்ல எப்­படி இருக்கு..?” என வள்ளி கேட்­டார். அவர் ஊர் என்று குறிப்­பிட்டது தமிழ்­நாட்டை என்­பது துரைக்கு நன்­றா­கத் தெரி­யும்.

“அங்க பர­வா­யில்ல. தமிழ்­நாட்­டில அவ்வளவு மோசமில்ல,” என்று துரை சொன்­னார். குர­லில் பழைய தெம்பு இல்லை. அதைக் கேட்­ட­தும் வள்­ளிக்­குக் கொஞ்­சம் நிம்­மதி ஏற்­பட்­டது.

‘நான் தொடக்­கத்­தில் இருந்தே சொன்­னேன். யாருக்கு என்ன இருக்­கு­துன்னு சொல்ல முடி­யாது. நாம­தான் கவ­னமா இருக்­க­ணும். நம்ம வயசு அப்­படி! ஒடம்­பில நமக்கு ஏற்­கெ­னவே ஏகப்­பட்ட கோளாறு இருக்கு! சொன்­ன­தைக் கேட்­டா­தானே!’ துரை தனக்­குள் வருத்­தப்­பட்­டா­லும் அடுத்த இரண்டு மணி நேரத்­தில் மேல்­மா­டி­யில் உள்ள படுக்­கை­யறை வள்­ளிக்கு ஒதுக்­கப்­பட்டு, வள்ளி தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டார்!

வள்ளி தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு ஐந்து நாள்­கள்­கூட ஆக­வில்லை! டோரிஸ் மருத்­து­வ­ம­னை­யில் இறந்து போனாள். வள்­ளி­யின் மனத்­தில் திகில் நிறைந்த போராட்­டம்! கல­வரம்! அச்­சம்! வெளி­யில வர­வும் முடி­ய­ல. அறைக்­குள்­ளேயே அடங்­கிக் கிடப்­பது வள்­ளிக்­குப் புது அனு­ப­வம்! ஒரு சிறைக்­குள் இருப்­பது­போல் இருந்­தது. டோரி­சின் பிரிவை எண்ணி குமு­றிக்­கொண்டு வந்த அழு­கையை வள்­ளி­யால் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை! ‘வள்­ளிக்­குப் பயம் பற்­றிக்­கொண்­டது. ஆறு­தல் சொல்­லக்­கூட இந்த நேரத்­தில அவர் இருக்க முடி­ய­வில்­லையே!’ என்று வள்ளி அழாத நாளில்லை!

‘வரு­சப் பொறப்பு (சித்­தி­ரைப் புத்­தாண்டு) நெருங்­கிக் கொண்­டி­ருக்கு! தேக்­கா­வுக்­குப் போக­ணும்; சூடம், சாம்­பி­ராணி, ஊது­வத்தி, பூ, பழம் எல்­லாம் புதுசா வாங்­க­ணும்! பாய­சம் வைக்­க­ணும், ‘வெஜி­ட­பிள்’ பிரி­யாணி ஆக்­க­ணும்! எவ்­வ­ளவு வேலை இருக்கு! இந்த நேரத்­தில என்னை ‘ரூம்’ல போட்டு அடச்சி வச்­சிட்­டாங்­களே!’ வள்­ளி­யின் ஆதங்­கம் அள­விட முடி­யா­த­தாய் இருந்­தது.

பத்­து­நாள் கழிந்த பின்­னர், நள்­ளி­ர­வில் வள்­ளிக்­குக் கடு­மை­யான காய்ச்­சல் ஏற்­பட்­டது. தாங்க முடி­ய­வில்லை.

கத­வைத் திறந்து கொண்டு “என்­னங்க, என்­னங்க.. எங்க இருக்­கி­றீங்க?..” என்று அல­றி­னாள். பக்­கத்து அறை­யில் படுத்­தி­ருந்த துரை எழுந்து ஓடி­வந்­தார். பூங்­கா­வ­ன­மும் வந்­து­விட்­டாள்.

“ஒடம்பு ரொம்ப காயு­துங்க..! தாங்­க­மு­டி­யல. குளி­ரில ஒடம்பு நடுங்­குது!” வள்ளி முண­கி­னாள். அவள் உடல் வெடவெடவென நடுங்­கிக் கொண்­டி­ருந்­தது. நெற்­றி­யைத் தொட்­டுப்­பார்த்த துரைக்­குச் சுரீர் என்­றி­ருந்­தது. உடம்பு அன­லாய்க் கொதித்­தது! அடுத்த அரை­மணி நேரத்­தில் பொது மருத்­து­வ­ம­னையில் வள்­ளி­யைச் சேர்த்த பிற­கு­தான் அவ­ருக்கு மூச்­சு­விட முடிந்­தது. ஆனால், மருத்­து­வ­மனை உள்ளே வள்ளி மூச்­சு­வி­டத் திண­றிக்­கொண்­டி­ருந்­தாள். உடனே அவ­ச­ர சிகிச்­சைப் பிரி­விற்­குக் கொண்டு போய்­விட்­டார்­கள்.

துரை­யால் வள்­ளி­யைப் பார்க்க முடி­ய­வில்லை. நீண்ட நேரம் காத்­தி­ருந்­தார். சுமார் ஒரு மணி நேரத்­திற்­குப் பிற­கு­தான் கண்­ணாடி வழியே வள்­ளி­யைப் பார்க்க முடிந்­தது. முகத்­தில் ‘வெண்­டி­லேட்­டர்’! ஏகப்­பட்ட ஒயர்­கள்! தடிப்­பான வெள்ளை ­நி­றப் போர்வை. வள்ளி படுத்­தி­ருப்­பது தெரி­ய­வில்லை. படுக்­கை­தான் தெரிந்­தது. இப்­படி ஒரு நிலை ஏற்­ப­டு­மென்று துரை எதிர்­பார்க்­க­வே­யில்லை. அவ­ரும் எண்­பது வயதை நெருங்­கிக்­கொண்­டி­ருந்­தார். திடீ­ரென்று ஏற்­பட்ட அதிர்ச்சி! முது­மைத் தளர்ச்சி! துரை­யால் கண்­ணாடி அரு­கில் நிற்க முடி­ய­வில்லை. மெது­வாக வெளி­யேறி பூங்­கா­வ­னத்தை உள்ளே போகச் சொல்­லி­விட்டு அரு­கில் இருந்த இருக்­கை­யில் அமர்ந்­தார். அப்­பொ­ழு­து­தான் வெளி­யூ­ரில் இருக்­கும் பிள்­ளை­க­ளுக்­குத் தக­வல் சொல்­ல­வில்­லையே என்ற நினைப்பு வந்­தது.

செய்­தியை அறிந்­த­தும் மாறன் ஸ்கைப்­பி­லேயே ஓல­மிட்டு அழு­தான். அவ­னால், அழு­கை­யைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை. அப்­பா­வி­டம் என்ன பேசு­வ­தென்­றும் தெரி­ய­வில்லை! அவ­ருக்கு எப்­படி ஆறு­தல் கூறு­வ­தென்­றும் புரி­ய­வில்லை. அந்த அள­விற்கு அவன் உடைந்து போயி­ருந்­தான். கும­ர­னால் செய்­தி­யைக் கேட்­டுத் தாங்க முடி­ய­வில்லை! மற்­ற­வர்­க­ளை­விட அவன்­தான் வள்­ளி­யி­டம் மிக நெருக்­கம்!

“அம்­மாவை எப்­ப­டி­யா­வது குண­மாக்கி வீட்­டுக்­குக் கொண்டு வந்­தி­ருங்­கப்பா!..” என்று விக்கி விக்கி அழு­து­கொண்டே கும­ரன் கூறி­ய­தைக்­கேட்டு துரை­யும் குலுங்­கிக் குலுங்கி அழு­தார். உடன்­பி­றப்­பு­கள் இரு­வ­ரும் இந்த நேரத்­தில் சிங்­கப்­பூ­ருக்கு உடனே பறந்து வரத்­தான் விரும்­பி­னார்­கள்! ஆனால், எல்லா விமா­னப் பய­ணங்­களும் நிறுத்­தப்­பட்­டு­விட்­ட­னவே!

பட்­டப் படிப்பு! சொந்­தத் தொழில்! ஆயி­ரம் ஆயி­ர­மா­கச் சம்­பாத்­தி­யம்! என்ன பயன்? வய­தான பெற்­றோர் துக்­கத்­தில் இருக்­கும்­போது அவர்­க­ளின் பக்­கத்­தில் இருக்க முடி­ய­வில்­லையே! இரத்த உறவு இருந்­தும் அது உதவி செய்ய இய­லா­தி­ருக்­கும்­போது அந்த உறவு இல்­லா­த­தற்கு நிகர்­தானே!

மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட ஐந்­தாம் நாள் வள்­ளி­யின் ஆவி பிரிந்­தது!

‘கொள்ளை நோய் கொரோனா’ என்ற அடை­மொ­ழிக்­கேற்ப வள்­ளியை அது கொள்ளை கொண்­டு­போய்­விட்­டது! வள்­ளியை வழி­ய­னுப்பி­வைக்க துரை­யும் பூங்­கா­வ­ன­மும் மண்­டாய் தக­னச்­சா­லைக்கு சென்­றி­ருந்­தார்­கள். சவக்­கி­டங்­கி­லி­ருந்து வள்­ளியை நேராக மண்­டாய்க்­குக் கொண்­டு­போக துரை இணக்­கம் தெரி­வித்­தி­ருந்­தார். அவர்­கள் இரு­வ­ரைத்­த­விர, அங்கு வந்­தி­ருந்­த­வர்­கள் பத்­துப் பேர் இருக்­கும் என்று பூங்­கா­வ­னம் கூறி­னாள். அவர்­கள் யார் யார் என்று விசா­ரிக்­கத் துரைக்­குத் தோன்­ற­வில்லை; அதற்கு உட­லில் தெம்­பும் இல்லை!

உல­கெங்­கும் கொரோனா என்ற பேரிடி தாக்­கிக்­கொண்­டி­ருந்­த­போது, தன் வீட்­டி­லும் அந்த இடி விழும் என்று துரை எதிர்­பார்க்­க­வில்­லை­தான். வள்­ளிக்கு துரை கண­வர் மட்­டு­மில்லை. நல்ல நண்­பர், நல்ல சேவ­கர், நல்ல வேலைக்­கா­ரர்.

வள்­ளிக்கு மலாய் உணவு உண்­ப­தில் மிகுந்த விருப்­பம். சிங்­கப்­பூ­ரில் உள்ள எல்லா புகழ்­பெற்ற மலாய் உண­வ­கங்­க­ளுக்­கும் சலிக்­கா­மல் அழைத்­துச் சென்­றுள்­ளார். சந்தை, பேரங்­காடி, தேக்கா, கேலாங் கடைத்­தொ­குதி என்று வள்ளி விரும்­பும் இடங்­க­ளுக்­கெல்­லாம் முகம் சுளிக்­கா­மல் அழைத்­துச் சென்­றி­ருக்­கி­றார்.

வெங்­கா­யம் ஒரு கடை­யி­லும் கரு­வாடு வேறொரு கடை­யி­லும் ஊர்ப்­பூண்டு இன்­னொரு கடை­யி­லு­மா­கப் பார்த்­துப் பார்த்­துப் பொருள் வாங்­கு­வது வள்­ளி­யின் வழக்­கம். மறு­வார்த்தை பேசா­மல் வள்ளி சொல்­லும் கடை­க­ளுக்­கெல்­லாம் இன்­மு­கத்­தோடு அழைத்­துச்­செல்­வார்.

வள்ளி உள்­ளூ­ரில் பிறந்­த­வ­ராக இருந்­தா­லும் தமிழ்­நாட்­டிற்­குப் போவ­தில் அலா­திப் பிரி­யம் அவ­ருக்கு! வரு­டத்­திற்கு இரண்டு முறை­யா­வது ‘டி நகர்’ போய் வந்­தால்­தான் வள்­ளிக்கு நிம்­மதி ஏற்­படும். துரை தவ­றா­மல் அழைத்­துச் செல்­வார்.

இப்­போது வீட்­டில் தனி­யாக அவர் மட்­டும்!

எங்­கே­யும் போக அவ­ருக்கு விருப்­ப­மில்லை. பணி­யி­லி­ருந்து ஓய்வு­பெற்ற பிறகு, வள்­ளி­யைப் பார்த்­துக்­கொள்­வ­தில், தான் நேரத்­தைச் செல­வி­டு­வ­தாக இது­வரை அவர் எண்ணி இருந்­தார்.

உண்­மை­யில் அந்­தச் சிறு சிறு வேலை­கள்­தான் தன்னை இயங்க வைத்­தி­ருக்­கின்­றன! வள்­ளி­தான் தன்னை இயக்கி வந்­தி­ருக்­கி­றார் என்று இப்­போது அவ­ரால் புரிந்­து­கொள்ள முடி­கிறது!

‘வள்ளி இல்­லா­மல் இனி எப்­ப­டிக் காலம் தள்­ளப்­போ­கி­றேன்!’ துரைக்கு மலைப்­பாக இருந்­தது!

“பூங்­கா­வ­னம்...!”

“அப்பா, இதோ வந்­திட்­டேன்..!” பூங்­கா­வ­னம் பர­ப­ரப்­பாக ஓடி வந்­தாள்.

“தொண்டை கர­க­ரப்பா இருக்கு. கொஞ்­சம் சூடா வெந்­நீர் கொண்டா.!..”

“கர­க­ரப்பா இருக்கா...?”

- முற்­றும் -

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!