சிறுகதை: தாயைப்பெற்ற மகள்

குத்­துக்­கா­லிட்டு, எவ­ரை­யும் மதிக்­கா­மல் உட்­கார்ந்­தி­ருந்­த­வ­ளி­டம் சுற்­றி­யி­ருந்­த­வர்­கள், ஏதோ முழு மூச்­சாய் இரா­ணுவ இர­க­சி­யத்­தைக் கேட்­பது போல கூர்­மை­யாய் கவ­னம் அனைத்­தை­யும் அவள் மீதே செலுத்­தி­னர்.

அவ­ளது முகம் கடு­க­டுப்­பில் இரத்த ஓட்­டம் முழு­வீச்­சில் முகத்­தில் பாய்ந்து முகம் சிவப்­பாய் இருந்­தது. யாரையோ தகாத வார்த்­தை­க­ளால் ஏசிக்­கொண்­டி­ருந்­தாள். இது எதை­யும் கண்டுகொள்­ளா­மல் நட­மா­டும் கவி­தை­க­ளென பள்­ளிப் பிள்­ளை­கள் ஹோ.. என்ற சத்­தத்­து­டன் வெளியே வந்­தது, மடைதிறந்த வெள்­ளம் போல இருந்­தது.

ஏதோ பூச்­சந்­தை­யில் நுழைந்­த­தைப் போல ஒரு தோற்­றம். வெவ்­வேறு வகை­யான பூக்­கள். மலர்ந்த பூக்­கள் நடந்­தன!

வீட்டு வேலை­களை முடித்து பள்­ளிப் பிள்­ளை­கள் போகும் வழி­யில் புளோக்­கின் கீழ்த்­த­ளத்­தில் அமர்ந்து அனைத்துப் பிள்­ளை­க­ளை­யும் பார்த்­துக் கொண்­டே­யி­ருப்­பேன். ஆனால் யாரி­ட­மும் பேசி­ய­தில்லை. பேச வேண்­டிய அவ­சி­யம் இருக்­க­வில்லை, கவ­னிப்பே போது­மா­ன­தாக இருந்­தது.

பேச்­சுக்கு அப்­பாற்­பட்ட மௌனம் எனக்­குப் பிடித்­தி­ருந்­தது.

பல சோகங்­க­ளுக்கு வடி­கா­லா­க­வும், புதுப்புது எண்­ணங்­கள் பிறக்­கும் போதி மர­மா­க­வும் அந்த இடம் இருந்­தது.

வழக்­கம்போல் நான் உட்காரும் இடத்­தில் ஒரு பள்ளி மாணவி அமர்ந்­தி­ருந்­தாள். அது என் இடம் எனச் சொல்லவேண்­டும் என்று மனம் சொன்­னா­லும், அன்று மன­தின் பேச்­சைக் கேட்­கத் தயா­ரா­யில்லை.

என்ன நடக்­கிறது என பார்க்­கும் ஆவ­லில் கொஞ்­சம் தள்ளி உட்­கார்ந்து புத்­த­கத்தை விரித்து வைத்­துக்­கொண்­டேன்.

பன்­னி­ரண்டு வய­தைத் தொட்­டி­ருப்­பாள், ஆனால் அவள் உடல் வயதைக் கூட்டிக் காட்­டி­யது.

முகத்­தில் ஏதோ ஏக்­க­மும் விரக்­தி­யும் குடி­கொண்டு எல்­லா­வற்­றை­யும் அச்­ச­மில்­லா­மல் எதிர்­கொண்­டாள்.

ஒருத்தி மட்­டும் அவள் கூட்­டத்­தில் தப்­பித்­த­வ­ளைப் போல சாந்­த­மான இலட்­ச­ணங்­க­ளு­டன், அந்த அசிங்க சொற்­க­ளுக்குப் பழக்­கப்­படா­த­வ­ளாய் முகத்தைச் சுழித்து பின் அக்­கம் பக்­கம் பார்த்து “சரி விடு பவ்யா,” என்­றாள்.

எனக்கு யார்டா இவ­ளுக்கு கொஞ்­ச­மும் பொருத்­த­மில்­லாத பெயரை வைத்­தி­ருக்­கி­றார்­கள் எனத்­தோன்­றி­யது.

யாழி... நீ வாயை மூடு என சமா­தா­னம் பேச வந்­த­வளை கண்­ணி­மைக்­கும் நேரத்­தில் எட்டி ‘பளார்’ என யாரும் எதிர்­பார்க்­காத வினா­டி­யில் கன்­னத்­தில் கொடுத்த அடி­யில் யாழி கலங்கி அதீத அவ­மா­னத்­தில் தலை­கு­னிந்து பையை எடுத்­துக்­கொண்டு விருட்­டெ­னப் போய்­விட்­டாள்.

அவ­ளைத் தொடர்ந்து மற்­ற­வர்­களும் ஒவ்­வொ­ரு­வ­ராக வெளி­யே­றி­ய­வு­டன், அவள் மெல்ல தன் அழ­கிய விழி­களை உருட்டி சுற்­றும் முற்­றும் பார்த்­தாள்.

அழ­கிய சுருள் கேசம் பரா­ம­ரிப்­பில்­லா­மல் வறண்டு போய் பறந்­தது. அதை அலட்­சி­ய­மாக கோதி பின்னே தள்­ளி­னாள். நானோ ஏதா­வது சொல்­வாளோ என ஆர்­வ­மா­கப் பார்த்­த­வாறே, என் புத்­த­கத்­தின் அடுத்த பக்­கத்­தைப் பயத்தை மறைத்­துக்­கொண்டு சரக்­கென திருப்­பி­னேன். ஆழ்ந்து படிப்­ப­தைப் போல நடித்த என்னை அரு­கில் வந்து முறைத்­துப் பார்த்­தாள்.

நான் எதோ தேர்­வுக்­குப் படித்து சோர்வு அடைந்­த­வ­ளைப் போல மெல்ல எழ முயன்­ற­வளை, ‘ஆண்டி’ என அழைத்த அவள் குரல் நிறுத்­தி­யது. என்ன என்­ப­தைப் போல நின்ற என்­னி­டம் இன்­னும் நெருங்கி வந்­த­வள்’ பசிக்­குது காசு இருக்கா நாளைக்கு தரு­கி­றேன்’ என்­றாள்.

எனக்கு தாயுள்­ளம் தழு­த­ழுக்க காசு இல்லை, வீட்­டுக்கு வர்­றியா சாப்­பாடு இருக்கு என்­ற­தும் ‘ஐம் நாட் எ பெகர்..’ என, கோப­மாக விருட்­டென பையை மாட்­டிக்­கொண்டு கோப­மா­கப் போன­வளை... பார்த்து சிரிப்­பும் ஆச்­சர்­ய­மும் கலந்து என்­னடா பொண்ணு இவ, என அவள் பின்­னால் மன­திற்­குள் நிறைய பேசிக்­கொண்­டேன். ஆனால் என் மனம் அவ­ளின் மேல் ஈடு­பாடு கொண்­டது.

என்­னால என்­ன­வென்று புரிய முடி­யா­மல், அவ­ளைப் பற்­றிய யோச­னையை மட்­டும் சுமந்து வீடு வந்­தேன்.

பின்­னொ­ரு­நாள் நீண்ட பள்ளி விடு­மு­றைக்­குப்­பின் ஹாக்­கர் சென்­டர்­லில் தேநீர் குடிக்க நேர்ந்த போது ‘பஜா­ரி’­யாக மாறி அங்­கி­ருந்த பெரிய தொட்­டி­யில் கல்­லெ­டுத்து வீசி­னாள் அது ‘சடக்’ என்ற சத்­தத்­து­டன் தெறித்துச் சிதறியது, கண்டுகொள்ள அவ­ளுக்கு ஏது நேரம், யாரோ ஒரு பையனை விரட்­டிக்கொண்டு ஆவே­ச­மாக ஓடி­ய­வளை ஹாக்­கர் சென்­டர் பரோட்டா கடை­யில் வருத்­த­கோ­ழித் துண்­டு­க­ளுக்கு நடுவே ஒரு தலை நடப்­ப­தற்கு சாட்­சி­யாக எட்­டிப் பார்த்து­விட்டு பின்பு அதே வேகத்­தில் உள்ளே சென்று விட்­டது.

அவ­ரது பார்­வை­யில் அது ஒன்­றும் பெரிய காரி­ய­மில்லை, பழ­கிய காரி­யம் போல ஒரு ஏள­னம் தெரி­யவே, நான் மெல்ல பரோட்­டாக் கடையை நெருங்­கி­னேன்.

ஊரில் நேரத்­திற்குப் பேருந்து வருமா? எனக்கேட்க பெட்­டிக் கடை­யில் ஏதா­வது வாங்­கி­ய­வாறே பேச்­சுக்­கொ­டுத்து கேட்டு பய­ணப்­பட்­ட­வள். இது ஒரு எழு­தப்­ப­டாத நாக­ரி­கம். அதைப் பயன்­ப­டுத்­திப் பார்க்­க­லாம் எனத்­து­ணிந்­தேன்.

“அண்ணே முட்டை பரோட்டா என ஆரம்­பித்து... விசா­ரித்­தேன். பன்­னி­ரண்டு மணி­யு­டன் முடிந்­தது” என்­றார். அவர் நான் சோறு வாங்க வந்­தி­ருப்­பேன் என எதிர்­பார்த்­தி­ருப்­பார் போல. என் முகத்தை வேண்டா வெறுப்­பாய் பார்த்­தும் பார்க்­கா­த­வாறு பதில் சொல்­லி­விட்டு திரும்­பிக் கொண்­டார். எதற்­கும் தேவைப்­படும் என்று ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு நகர்ந்­தேன்.

தோல்­வி­யைத் தழுவி, ஆனா­லும் மீசை­யில் மண் ஒட்­டா­மல் திரும்­பி­னேன். அவ­ளு­டைய பழுப்பு நிறக்­கண், அந்­த­முடி, அவள் பாய்ந்து பாய்ந்து ஓடி­யது எல்­லாமே எனக்கு பழைய ஞாபக வீணையை மீட்­டி­ன. அதி­லி­ருந்து வெளி­வ­ரவே விருப்­பம் கொண்­டேன். சட்­டென அந்த இடத்தை விட்டு எழுந்து, வேறு இடத்தை மாற்­றி­னால் ஞாப­கம் சற்று ஓய்வு எடுத்து பார்­வைக்கு அடுத்த சூழல் தெரி­யும், ஆகவே நான் தைரி­ய­சாலி எனக்­காட்ட இடம் மாறி­னேன் அவ­ளைப்­பற்றி அறிய முற்­பட்­டேன்.

யாரி­டம் கேட்­பது எப்­படிக் கேட்­பது என புரி­யா­மல் மனம் கவர்ந்த எழுத்­தா­ள­ரின் புதிய புத்­த­க­மொன்று வீட்­டில் இருந்­தால் எவ்­வாறு எப்­படி படித்­து­வி­டத் துடிப்­போமோ அதைப் போல சொல்ல முடியா ஆர்­வ­முற்­றேன்.

பள்­ளிச்சீரு­டையை வைத்து அரு­கில் இருந்த உயர்­நிலைப்பள்ளி என்­பதை மட்­டுமே என்­னால் தெரிந்துகொள்ள முடிந்­தது.

ஒரு செயலை செய்ய ஆரம்­பிக்­கும்­போதுதான் தயக்­க­மாக இருக்­கும். ஆர்­வப்­பட்டு விட்­டால் கை வந்து சேர்ந்­து­வி­டும். மக்­களை உற்­று­நோக்­கு­வ­தில் எனக்கு ஆர்­வம் அதி­கம். அத­னால் பள்­ளிக்கு அரு­கில் உள்ள உள்ள பேருந்து நிறுத்­தத்­தில் அமர்ந்­தேன்.

அங்கே வய­தான பாட்டி ஒரு­வ­ரும் பணிப்­பெண் ஒரு­வ­ரும் அமர்ந்­தி­ருந்­த­னர்.

முத­லில் மக­ளாக இருக்­குமோ என நினைத்­தேன். பிறகு பணிப்­பெண் இப்­போ­து­தான் வந்து இறங்­கி­யி­ருக்­கி­றார் என்­பது அவர் மலங்க மலங்க சுற்றி சுற்­றிப் பார்த்த வித­மும், என்­மு­கத்தை உற்­றுப்­பார்த்­துப் பேச விழைந்த, சினேக சிரிப்­பும் உணர்த்­தி­யது.

எங்கே மருத்­து­வ­ம­னைக்கா? என்­றேன். சிநே­கத்­து­டன் பாட்டி ஆமாம் என்­றார். ஊரா என்­றார் ஆமாம் என்ற தலை­ய­சைப்­பு­டன்.

பாவ்யா அவ்­வ­ழியே என்று மில்­லா­மல் இவளா அவள் என அமை­தியே வடி­வாய்க் கடந்து சென்­றாள்.

பணிப்­பெண் “அம்மா பவி போறா” பாட்­டி­யின் ஒளி­மங்கி, நிறைய காட்­சி­க­ளைப் பார்த்­துப் பார்த்து சலித்து, வெளி­யில் சுறுக்­கங்­க­ளா­க­வும் உள்ளே காட்­சி­கள் விட்­டுச்சென்ற அழுக்­கு­க­ளின் எச்­ச­ங்களைச் சுமந்த, பஞ்­சை­யான கண்­கள் சற்றுப் பெரி­ய­தாகி பிர­கா­ச­மாகி புள்ள பக்­கத்­தில் போகும் போது சொல்­ல­மாட்ட,” என அதட்­டி­னார்.

அவ­ளின் அம்மா ஒற்­றைப் பெற்­றோர். அப்­பப்போ வெளி­யூர்­க­ளுக்­குச்செல்­லும் வேலை ஆத­லால் இவளைக் கவ­னிக்க ஆளில்லை.

வய­தான தனது பாட்­டி­யி­டம் விட்­டுச் சென்­றி­ருக்­கி­றார். பாட்­டி­யைப் பார்த்­துக்­கொள்ள பணிப்­பெண் என சகல வச­தி­க­ளு­டன் தான் விட்­டுச் சென்­றி­ருக்­கி­றார்.

அவள் அம்­மா­வுக்­கும் பாவம் சின்ன வயது தானே என்ற பணிப்­பெண்ணை பாட்­டி­யம்மா ஒரு முறை முறைத்­தார்.

என்­ன­தான் உல­கம் மாறி­விட்­டா­லும் பெண்­க­ளுக்கு ஒரு சட்­டம் தான்.

ஆயி­ரம் பார­தி­கள் வந்­தா­லும் கவி­தை­தான் எழுதமுடி­யும் மன­தில் தங்­கிய நாற்ற எண்­ணத்தை மாற்ற முடி­யாது.

*

சரி நாம கதைக்கு வரு­வோம். தேடல் தொடர்ந்­தது என்­னவோ அவ­ளுக்கு ஏதா­வது செய்­ய­ணுமுன்னு மன­தில் ஓடிக்­கொண்டே இருந்­தது.

பள்­ளி­விட்டு வள்­ளி­நா­யகி வந்து­வி­டு­வாள் என்ற நினைவு முன்­தள்ள சமைக்­க­வில்லை என்று ஞாப­கத்­தில் உரைக்க வீட்டை நோக்கி நடக்­க­வில்லை ஓடி­வந்­தேன்.

வள்­ளியை சாப்­பி­ட­வைத்து பாடம் சொல்­லிக்­கொ­டுத்து நிமிர்­கை­யில், கண­வர் வரும் நேர­மா­னது. அவர், மகிழ்ச்சியாக கடிதம் ஒன்றை என்னிடம் கொடுத்து அமலா பார் இதை என்­றார்.

எப்­போ­தும் எனக்கு வந்த கடி­தங்­களை அவர் பிரிக்­கவே மாட்­டார். என்ன என்­றும் கேட்­ப­தில்லை. அதுவே வழக்­கம். சமூக மற்­றும் குடும்ப நல அமைப்­பில் இருந்து வந்த கடி­தம் அது. அலு­வ­ல­கத்­திற்கு வரச்­சொல்லி இருந்­த­தைப் பார்த்­த­தும் என்­ன­வாக இருக்­கும்.... என யோசித்­த­வாறு வேலை­யைத்­தொ­டர்ந்­தேன்.

மடி­யில் தூங்க வேண்­டும் என வள்ளி காத்­தி­ருந்து தனது பெரிய கரடி பொம்­மை­யு­டன் தூங்­கிப்­போனாள்.

மறு­நாள் கிறிஸ்­து­மஸ் அலங்­கா­ரங்­களைக் காண ஆர்ச்­சர்ட் ரோடுக்­குச் சென்றோம். அங்கு வண்ண வண்ண விளக்கு அலங்காரங்களைப் பார்த்து வள்­ளி­யு­டன் சேர்ந்து நானும் குழந்­தை­யாகி பர­வ­ச­ம­டைந்­தேன்.

பிறகு ‘தேவதை உடை’ வாங்க அங்­கி­ருந்த கடை ஒன்­றில் தேடி­னோம். விலை மிக­வும் அதி­க­மா­கவே இருந்­தது. அதோடு வள்ளி கேட்ட மாதிரி உடை அங்கு கிடைக்­க­வில்லை. நமக்கு தேக்கா தான் சரி, என தேக்­கா­வுக்கு விரைந்­தோம்.

வள்ளி மிக­வும் சோர்­வாகி அம்மா தூக்­கம் வருது என்­ற­வாறு உறங்­கி­விட்­டாள்.

சரி வீட்­டுக்­குப் போக­லாம் என்ற எனது முடிவை வழக்­கம் போல கண­வர் ஏற்­க­வில்லை.

“காலை­யில் அழு­வாள். உன்­னால் சமா­ளிக்க முடி­யாது வாங்­கீட்­டுப் போக­லாம்,” என்­ற­வர் அவளை அனைத்துத் தூக்­கிக் கொண்­டார்.

அவ­ளுக்­குப் பிடித்த கடல் ஊதா வண்­ணம் கிடைத்­தது. ஆனால் மற்­றவை.. அதன் அலங்­கா­ரம் அவ­ளுக்­குப் பிடிக்­குமா என எனக்குச் சந்­தே­க­மாக இருந்­தது.

இதைப்­பு­ரிந்த என்­ன­வர் ‘காலை­யில் அவ­ளி­டம் காட்டு, பிடிக்­க­வில்லை என்­றால் மாற்­றி­வி­ட­லாம். இல்­லா­விட்­டால் வேறு ஒன்று வாங்கிவிட­லாம்,” எனச் சொல்­லவே நான் கொஞ்­சம் நிம்­ம­திப் பெரு­மூச்சு­விட்­டேன். பிறகு வண்டி போன வேகத்­திற்கு என் மனம் பின்னே சென்­றது.

வள்­ளி­யின் அம்மா என்ன செய்­தார் எனத்­தெ­ரி­யாது. தற்­போ­தைய தண்­ட­னைக் கைதி, அப்பா குடும்­பத்தை விட்­டுப் போய்­விட்­டார்.

ஒரு பெண்­ணின் சிர­மத்­திற்­குப் பின்னே ஒரு ஆணின் பொறுப்­பின்மை இருக்­கும். அதற்கு இந்­தக் குடும்­ப­மும் விதி­வி­லக்­கல்ல.

தனியே வள்­ளி­யைப் பார்த்­துக் கொள்ள ஆளில்­லா­மல் சிர­மத்தை எதிர்­நோக்­கி­ய­போது நானும் கௌரியை சுனா­மிக்கு பலி கொடுத்து, இட­மாற்­றத்­திற்கு சிங்­கப்­பூர் வந்­த­தும் ஏதா­வது செய்­ய­வேண்­டும், சும்மா இருந்­தால் பைத்­தி­யம்­தான் பிடிக்­கும் என்று முயற்சி செய்ய, அந்த உந்­து­தல் சமூக குடும்­ப­நல அமைப்­பின் முன் நிறுத்­தி­யது.

இது­போன்று தாய் தந்தையரை இழந்து தவிக்கும் குழந்­தை­க­ளுக்கு நம்­மா­லான ஒரு உதவி என ஆரம்­பித்­தேன்.

ஆறு மாதக் குழந்­தை­யாக வள்­ளி­யைப் பெற்­றுக்கொண்டு இன்று அவள் தொடக்­க­நிலை இரண்டு படிக்­கி­றாள்.

அடிக்­கடி எனக்­குள் ஒரு மனப்­போ­ராட்­டம் உண்டு, வள்ளி என்­றைக்கு இருந்­தா­லும் அவள் அம்­மா­வி­டம் போய்விடு­வாள். என் அறிவை தயார் செய்து விட்­டேன். மனம் தான் நம்ப மறுத்து பேராசை கொண்­டுள்­ளது.

வள்­ளி­யால் நாங்­களும் கிருஸ்­து­வத்தை உணர முற்­பட்­டோம். பின்பு அது­வா­கவே மாறி­யி­ருந்­தோம்.

கிறிஸ்­து­மஸ் தினம் வந்­தது எனக்கு குடில் வைக்­கத்தெரி­யாது என் தோழி திரு­மதி ராணி வீட்­டில் கூட்­டிக்­கொண்­டு­போய் காட்­டிய போது, அம்மா எங்­கள் பள்­ளி­யி­லும் இதேபோல வைப்­பாங்க என பர­வ­சப்­பட்­டாள்.

ராணி வீட்­டில் விருந்து தட­பு­ட­லாய் நடக்­கும். நாங்­களும் குடும்­ப­மாக கலந்­து­கொள்­வது வழக்­கம். வள்­ளி­யைப் பார்த்­த­தும் ராணி ஓடி­வந்து அள்­ளி­யெ­டுத்­துக் கொஞ்­சி­னாள் ‘தேவதை போலவே இருக்­கம்மா,’ என்­ற­வு­டன் என் மகள் அழ­காய் வெட்­கப்­பட்­டாள்.

நான் என் இத­யத்­தில் படம் பிடித்துவைத்­துக்­கொண்­டேன். நண்­பர்­கள் சந்­திப்பு அங்­கே­தான்.

எல்­லோ­ரும் வேலை நிமித்­தம் பர­ப­ரப்­பாக இயங்­கி­னா­லும் விருந்­து­கள் ஒன்றே இணைப்­புப்­பா­லம். அதைத் தவற விடு­வ­தே­யில்லை.

குடும்­பம் மற்­றும் சமூக நல அமைப்­புக்­குப் போக வேண்­டிய நாள் வந்­தது.

வெளி­யில் உட்­கார நேர்ந்­த­போது உள்­ளுக்­குள் ஏதோ அடி­வ­யிற்­றைப் பிசைய என்­னவோ தொண்­டைக்­கும் வயிற்­றுக்­கும் போராட்­ட­மாக இருக்க தண்­ணீர் குடிக்க தற்­கா­லிக தீர்­வாக அமைந்­தது. ஏதேதோ கற்­பனை எண்­ணங்­கள் மனதை உலுக்­கின. அதற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கும்­வி­த­மாக என்­னைக் கடந்து ஒரு உரு­வம் சென்­றது. கண்­களில் கண்­ணீர் திரை­யிட்­டா­லும் அதை­யும் மீறி அந்த உரு­வம் பழ­கிய முக­மாக.. ஐயோ பவ்யா.. என் கவ­லை­கள் மறந்து என்ன நடக்­கிறது என ஆர்­வ­மா­னேன். அவள் அம்மா என நினைக்­கி­றேன் அக்கா போல அவ­ளு­டைய சாய­லில் இருந்­தாள். சிக்­கென உடுத்­தி­யி­ருந்­தாள். கண்­களும் கேச­மும் பவி­யைப்­போல.., வேறு ஒரு பெண்­ம­ணி­யும் சமூக நல அமைப்­பின் ஊழி­ய­ரும் பேசிக்­கொண்டு இருந்­தார்­கள். பவி அழ­காக சிரித்­துக்­கொண்டு தலையை அசைத்­துக்­கொண்டு இருந்­தாள். அவ­ளைப் பார்ப்­ப­தற்கே எனக்கு மகிழ்ச்­சி­யாக இருந்­தது.

நீண்ட நேர­மாய் என்­னைக் கவ­னித்த எனது அலு­வ­லர் சிரித்­துக்­கொண்டே வெல்­கம் மி­சஸ் அமலா என்ற குரல் கேட்டு என் கவ­னம் திசை திரும்­பி­யது.

வணக்­கம் சொல்­லி­விட்டு வள்ளி அம்மா அடுத்­த­வா­ரம் தண்­ட­னைக்­காலம் முடிந்து வெளி­யில் வரு­கி­றார் என ஒரு பெரிய அணு­குண்­டைத் தூக்கி என் தலை­யில் போட்­டார். என் மனம் குமு­றி­யது. கண்­களில் கண்­ணீ­ராய் வெளி­யா­னது.

சமா­ளித்து வார்த்­தை­கள் எது­வு­மில்லை பேச. முறைப்­படி செய்ய வேண்­டிய தாட்­களில் கையெ­ழுத்­துப் போட்டு முடித்­துக் கொண்டு வந்­தேன்.

அப்­பா­வு­டன் வள்ளி விளை­யா­டிக் கொண்­டி­ருந்­தாள். அழு­கை­யின் உச்­சத்­தி­லி­ருந்த என்னை என்­ன­வர் தேற்­றி­னார்.

அவரே சமைத்து எங்­க­ளைச் சாப்­பிட வைத்து பின் “பெற்­ற­வ­ளுக்­குத்தாம்மா பிள்ளை சொந்­தம். நாம­ளும் கவலை மறந்­தோம். அவ­ளுக்­கும் நல்ல வீடு அம்மா, அப்பா கிடைச்­சுது. அவ்­வ­ளவு தான்,” என அவர் பேசி­யது அப்­போ­தைக்கு ஏற்­றுக்கொண்­டா­லும், வள்­ளி­யின் அம்மா வரும் நாள் வந்­தது.

வள்ளியின் அம்மா திரு­மதி டேவிட்­டின் கண்­களை நேருக்கு நேர் சந்­திக்க என்­னால் முடிய வில்லை.

எனக்கு ஒரு குற்ற உணர்ச்சி. அவ­ரின் வாழ்க்­கையே வள்­ளி­தான். நான் என் சுய நல­மாய் எண்­ணு­கி­றேனோ என்று... மனதைத் தேற்­றிக்­கொண்­டேன்.

அவரோ என்­னைக் கட்­டித்­தழுவி அக்கா என் பிள்ளை தேவ­னின் அருள் பெற்ற பிள்ளை.

இல்­லா­விட்­டால் உங்­க­ளைப் போல ஒரு வீட்­டில் வள­ரும் வாய்ப்பு கிடைத்­தி­ருக்­குமா? என உணர்ச்சி வசப்­பட்­டார்.

திரு­மதி டேவிட்­டின் முகம் மிகத்­தெ­ளி­வாக இருந்­தது. அவர் அழு­தி­ருப்­பார் எனத்­தெ­ரிந்­தது.

வெளியே தயக்­கத்­து­டன் நின்­ற­வரை உள்ளே வரச்­சொல்லி அழைக்க, வள்­ளிக்கு யார் எனத்­தெ­ரி­யா­மல் “யார்ம்மா புது ஆண்டி” எனத் திக்­கித்­தி­ணறி கேட்­டாள்.

எனக்கு தூக்கி வாரிப்­போட்­டது இல்­லடா.. என ஆரம்­பிக்க இடை­யில் புகுந்த திரு­மதி டேவிட், அம்மா உன்­னி­டம் சொல்­ல­வே­யில்­லை­யாடா தங்­கம், நான் தான் உன் அத்தை என்­றார்.

எனக்கு ஒன்­றும் புரி­யாத குழப்­பத்­தில், என்­னங்க குழந்­தை­யி­டம் போய்.. என இழுக்க, அக்கா என்­னி­டம் குழந்தை இவ்­வ­ளவு வச­தி­யு­டன் வாழுமா?

“உங்­க­ளி­டம் இருப்­ப­து­தான் சரி. பெற்­ற­வள் எல்­லாம் தாயாக முடி­யாது” என்று சொல்லி வள்­ளி­யின் ஒளிப்­ப­டத் தொகுப்பை எடுத்­துக்­கொண்டு “முறைப்­படி என்ன செய்ய வேண்­டுமோ நான் ஏற்­பாடு செய்­கி­றேன்,” என்ற படி விடைபெற்றுச் சென்­று­விட்­டார்.

நான் அவர் போன திசை­யையே ஆனந்­தக் கண்­ணீ­ரு­டன்... என் மனக்­கண் முன் திரு­மதி டேவிட்டை மிக உய­ரத்­தில் பார்த்தேன்.

அதி­ரூ­பன் ஏசு என்னை அன்­பென்ற மழை­யில் நனைத்தது போல இருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!