இலவசம்

இராம.தியாகராஜன்

காலம் எடுக்கும் வேகம்

கால்களை ஓய்வெடுக்க

விடுவதில்லை,

கலப்பையைப் பிடித்தவன்

கணினியில் கலக்குகிறான்,

கிளி ஜோசியம் பார்ப்பவன் மட்டும்

சும்மாவா இருப்பான்!.

சமூக ஊடகத்தைத்

தனக்கு சாதகமாக்கிக்

கொள்கிறான்.

நண்பர்களுக்கோர் நற்செய்தி!

படித்து முடித்ததும்

பத்து நண்பர்களுக்கு

பகிர்ந்தனுப்பவும்.

இரவு பன்னிரெண்டு மணிக்குள்

உங்களுக்கான நற்செய்தி

வாசல்கதவைத் தட்டும்.

வைஃபய் இலவசம்,

வாட்ஸ்அப் இலவசம்,

வதந்திகளும் இலவசம்.