மீண்டு எழுவோம்

மீண்டு எழுவோம்

1 mins read

வந்து மறைந்து தாக்கிடுதே

வாழ்வை சிதைத்து குலைத்திடுதே

நொந்து நெளிய வைக்கிறதே

நொடியில் மரணம் வாய்த்திடுதே

வெந்து போன மனத்தினிலே

வேலைப் பாய்ச்சும் நோயிதுவோ?

சந்து பொந்தில் இந்நோயோ

சற்றும் வராமல் விரட்டிடுவோம்!

மீண்டு நாங்கள் எழுந்திடுவோம்

மீளாத் துயரை கடந்திடுவோம்

நீண்டுச் செல்லும் பாதிப்பை

நீர்த்துப் போகச் செய்திடுவோம்

தீண்டும் உறவு பிரியாமல்

திரும்பிப் பார்க்க வழிகண்டு

சீண்டும் கொடிய நோயிதனை

சிதைத்து குலைத்து

விரட்டிடுவோம்

உண்டு இல்லை என்றாக்கி

உரிய நுட்பம் கையாண்டும்

கண்டு கொள்ளா மானிடரை

களத்தில் இறக்கி விடைகாண

தொண்டு உள்ளம் படைத்தோரை

துவண்டி டாமல் அரவணைத்தே

அண்டு கின்ற பெரும்நோயை

அகிலம் விட்டே விரட்டிடுவோம்!