தனிமை

தனிமை

1 mins read

நீ வேண்டுமென ஆசைப்பட்டேன்

நீ வந்தவுடன் பயப்படுகிறேன்

உன்னோடு பொழுதைக்கழிக்க

விரும்பினேன்

நீ எனை அணைத்தபோது

நடுங்குகிறேன்

உன்னில்

எனைத் தேடலாமென்கிறார்கள்

உன்னில்

எனை அறியலாமென்றார்கள்

நீ எனை ஞானியாக்கும்

மந்திரமென்றார்கள்

நீயே போதிமரமென்கிறார்கள்

சிறிதளவும் நம்பிக்கையில்லை!

நீ ஓர் மாயப்பேய்

கலைகள் பயின்றேன்

நூல்பல படித்தேன்

பறவைகள்

பூக்கள் ரசித்தேன்

மழை

மின்னல்

கண்டு மகிழ்ந்தேன்

கதிரவன் தோன்றும் பொழுதும் மறையும் பொழுதும்

வானம் கண்டு பூரித்தேன்

இசையில் நனைந்தேன்

உறவை

நட்பைப் புதுப்பித்தேன்

முகப்புத்தக

முகம் புதைத்தேன்

வாட்சப்பில் ஊறினேன்

பேரண்டம் கண்டு வியந்தேன்

இறைப்பற்றில் திளைத்தேன்

உனைத் தொலைக்க

முயற்சி செய்கிறேன்

பல வழிகளில்

கண்ணீரில் மட்டுந்தான்

நீ கரைவாய் என்பதறிவேன்.