தியானம்

1 mins read

உன்னை உனக்குள் இழந்து பார்

தனியே அறையில் அமர்ந்து பார்

கண்களை மூடி இருந்து பார்

காரிருள் கண்டு நுழைந்து பார்

இனம் புரியா இன்பம்

தங்கு தடையின்றிப் பொங்கும்

ஐம்புலனும் ஒருங்கிணைந்தால்

அமைதி நிலை உருவாகும்

ஆன்மாவிடம் சரணடைந்தால்

ஆவதெல்லாம் பொன்னாகும்

அந்தி சந்தி வேளையிலே

ஆற்றல்களைத் திரட்டிப்பார்

ஆதவனைப் பணிந்து நின்றால்

அன்பு உன்னை ஆட்கொள்ளும்

கழிவுகளை வெளியேற்று

கவலையின்றிப் பணியாற்று

உறுதிகொண்ட நெஞ்சம்

உயர்நிலையில் மிஞ்சும்

வாழ்க்கை என்றும் வசந்தம்