ஊடகம்

ஊடகம்

1 mins read

ஆடவர் பெண்டிர் தத்தம்

அகங்கை யேந்தும் பேசி

பாடலும் நடனம் செய்தி

படத்தொடுக் களிக்க தொ-கா

மூடவே தேவை இல்லை

முழுநாள் ஒலிக்கும் பெட்டி

ஊடகம் இவையென் றாரே

உலகினை மடிவைத் தாரே!

பல்இன மொழிகள் கேட்க

பண்பியல் கலைசீர் பார்க்க

கொல்புலி அரிமா ஓநாய்

கொடியவன் விலங்கு புட்கள்

புல்செடி மரம்கா ஆறு

பொலிவினைக் காண நாளும்

சொல்லொடு காட்சி காட்டும்

ஊடகம் பயன்நூ றென்பேன்!

வித்தைபார் கணினி! வேண்டும்

விளத்தங்கள் காட்டும் "கூகல்"

எத்தனைத் துணையாய்ப் பாரில்

இயங்குநல் ஊட கத்தால்

இத்தரை மாந்தர் பெற்ற

ஏந்துகள் எண்ணில் கோடி

முத்திரை அஞ்சல் ஒட்டும்

முடங்கலும் முடங்கிப் போச்சே!