கொரோனா

கொரோனா

1 mins read

உக்கிரத் தொற்றின் உச்சமே

ஊடுருவலில் தேர்ந்த கிருமியே!

வெள்ளையணுக்களின்

தடுப்பாற்றலுக்கு

வேட்டுவைக்க வந்த சகுனியே!

எங்களின் நுரையீரலுக்குள்

நுழைய எத்தனிக்கும்

எல்லை தாண்டிய பயங்கரவாதியே!

மனிதகுலத்தையழிக்க வந்த

கொடிய நுண்தொற்றே!

எங்கள் விஞ்ஞான வளர்ச்சியிலே

விரும்பத்தகாத விருந்தாளியே!

நாகரீகத்தின் நாயகர்கள் நாங்கள்

நச்சுயிரி நீ எம்மாத்திரம்..

அடிமைச்சங்கிலியிட்டாயென்று

ஆணவம் கொள்ளாதே

அன்புச்சங்கிலியிலே

பிணைந்துள்ளோம்

சிங்கையிலே

வாயடைத்து தனிமையுற்றோம்

உண்மையே

ஒன்றுபட்டே வெல்வோம்

உன்னையே!

கொடூர தொற்றே!

கொக்கரிக்காதே

உன்னை கூண்டோடொழித்தே

குலவையிடுவோம்!

நினைவில் வை

உன்னையும் கடப்போம்

நாங்கள்

"மகத்தான மானுடர்கள்".