இயற்கையின் செய்தி!

இயற்கையின் செய்தி!

1 mins read

ஒரு உலகத்தில் உறங்கி

மற்றொன்றில் விழித்திருக்கிறோம்.

அன்பின் நகரம் என்கிற

அடையாளம் தொலைக்கிறது பாரிஸ்!

களையை இழந்து பொலிவின்றி

காட்சி அளிக்கிறது நியூயார்க்!

மயக்கும் கேளிக்கைகளை

மறந்து விட்டது டிஸ்னிலாண்ட்!

சீனப் பெருஞ்சுவர் இனிமேல்

சிறப்பானதொரு கோட்டை சுவரில்லை!

அரவணைப்பும் முத்தங்களும்

ஆயுதங்களாகி அச்சுறுத்துகின்றன.

பெற்றவர்களையும் உற்றவர்களையும்

பார்க்காமலிருப்பதே அன்பிற்கு அர்த்தமாகிறது.

பணமும் அழகும் எப்போதும்

பிராணவாயுவை பெற்றுத்தராதென உணர்கிறோம்.

உலகம் தன் பயணத்தைத் தொடர்கிறது.

மனிதனை மட்டும் அடைத்திருக்கிறது கூண்டுக்குள்

இவையெல்லாம் சொல்வது ஒன்றுதான்.

இயற்கை வெறுத்துப்போய் தந்தது இதைத்தான்

நாமெல்லாம் தேவையற்றவர்கள்.

நிலமும் வானும் நீரும் காற்றும்

நலமாக இருக்கும் நாமில்லாமல்.

விருந்தினர்களாய் வந்தவர்கள்தான்,

வெறுக்க வைக்கும் முதலாளிகளாவது ஏன்?