ப்ளூடூத் கடவுளர்கள்

ப்ளூடூத் கடவுளர்கள்

2 mins read
ef9835e3-3443-469a-b591-b126d3f2b209
படம்: ஊடகம் -

சிறுகதை:

இரா சத்திக்கண்ணன்

என்ன கணேஷ் எப்­படி இருக்க? கணேஷ் வீட்­டிற்­குள் நுழைந்­த­தும் கேட்­டான் சீனு. 'சூப்­பர் டா' சீனு. எவ்­வ­ளவு வரு­ஷ­மாச்சு உன்ன பார்த்து? ஆனந்­தத்­து­டன் கணேஷ் சீனு­விற்கு தன் குடும்­பத்தை அறி­மு­கம் செய்­தான்.

'சூடா காப்பி குடி முதல்ல' கணேஷ் மகிழ்ச்­சி­யு­டன் சொல்ல காப்பி கப்பை கணே­ஷும் சீனு­வும் கையில் எடுத்­துக்­கொண்டு நடக்க ஆரம்­பித்­தார்­கள்.

சீனு, இது­தான் என்­னோட ஒர்க் ஃபிரம் ஹோம் ஆபீஸ். பத்து பெரிய 'எல்­சிடி'கள் அறையை அலங்­க­ரித்­துக்­கொண்­டி­ருந்­தன.

வழு­வ­ழுப்­பான லேப்­டாப் டேபிள் மற்­றும் இத்­தா­லிய லெதர் கொண்ட குஷன் நாற்­காலி அழ­காய் இருந்­தன!

'ஜென்' கோட்­பா­டு­களை கொண்டு வடி­வ­மைக்­கப்­பட்ட அறை­யாக இருக்­கும். 'மினி­ம­லிஸ்ட்' தத்­து­வங்­களும் பின்­னப்­பட்­டி­ருக்­க­லாம்.

கணேஷ் சீனுக்கு வீட்டை சுற்­றிக்­காட்­டத் தொடங்­கி­னான்

இது­தான் லிவிங் ஹால். பெரிய பெரிய வாங்­கோ­வின் ஓவி­யங்­கள் அலங்­க­ரித்­தன.

பெரிய கேரளா குத்­து­வி­ளக்­கு­கள் அழ­குக்­காக ஹாலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. கம்ப்­யூட்­டர் ரூம், மியூ­சிக் மற்­றும் என்­டர்­டைன்­மெண்ட் ரூம் , ஜிம் ரூம் மாடி­யிலே இருக்கு. வா, கொஞ்­ச­நே­ரம் மியூ­சிக் கேட்­க­லா­மென்­றான் கணேஷ். மைக்­கல் ஜாக்­ச­னின் 'பேட்ட இட்'இல்லை 'பீட் இட்' மியூ­சிக் ரூம் முழு­தும் அதிர்­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது. இப்ப பாரு, எம்எஸ்ஸின் மெல்­லிய தேஷ் ராகம்... இரு­பது ஹெர்ட்ஸ்க்­குக்­கும் கீழ் கேட்­கும் ஒலி ...வாவ் என்­ற­வாறு சீனு வியந்து பாராட்­டி­னான்.

ஜிம்­முக்கு போக­லாமா என்­றான் கணேஷ். ஜிம் அறை­யில் உடலை உறு­திப்­ப­டுத்­தும் அத்­தனை செயற்கை அறி­வுள்ள இயந்­திர மனி­தர்­களும் கும்­மா­ள­ம­டித்­துக்­கொண்­டி­ருந்­தார்­கள். சீனு­வால் இன்­னும் தன் கண்­களை நம்­ப­முடி­ய­வில்லை.

ஜிம்­மி­லி­ருந்து சமையலறைக்கு லிப்ட் சவாரி. இத்­தா­லி­யன் அமைப்­பில் சமையலறை. எல்லா சாத­னங்­களும் ஒன்­றோ­டொன்று பேசிக்­கொண்­டி­ருந்­தன.

கணே­ஷும் சீனு­வும் உள்ளே நுழைந்­த­வு­டன் சட்­டென்று பேச்சை நிறுத்­தின, கண்­டிப்­பான ஆசி­ரி­யர் உள்ளே நுழைந்­த­வு­டன் மாண­வர்­கள் பேச்சை நிறுத்­து­வ­தைப்­போல!

சமையலறைக்குப் பக்­கத்­தி­லேயே பூசை­யறை , கேட்­கவே வேண்­டாம்.

'ஜூம் மீட்­டிங்­கில்' ஒரு சாமி­யார் ஆசி ­வ­ழங்­கி­கொண்­டி­ருந்­தார். எல்லாக் கட­வு­ளர்­க­ளின் காதி­லும் இயர் ஃபோன் செட். 'ப்ளூ­டூத் கட­வு­ளர்­களை' கண்­டதில் சீனு­விற்கு எல்லையற்ற மகிழ்ச்சி!

அற்­பு­த­மென்­றான் சீனு.

வா சூரிய அறையைக் காட்­டு­கி­றே­னென்­றான் கணேஷ். அதென்ன சூரிய அறை! வியப்­பு­டன் சீனு. கணேஷ் கத­வைத் ­திறந்­த­வு­டன் பிர­கா­ச­மான சூரிய ஒளி அறை­மு­ழு­தும் நிறைந்திருந்தது. அற்­பு­தம். வான­வில் மட்­டுந்­தான் இல்லை அங்கு இல்லை.

என்­னடா இது கணேஷ் . உன் வீடு இத்­தனை பிரம்­மாண்­டமா இருக்கு! வியந்து பாராட்­டி­னான் சீனு.

சரி கணேஷ், உன் அப்பா அம்மா எங்கே என்­றான்? சீனு பதில் சொல்­லத் தயங்­கி­னான் கணேஷ்!

சூரிய அறை­யில் இருள் பர­வு­வதை மெல்ல உணர்ந்­தான் சீனு.

வாழ்த்­து­கள் சொல்லி விடை­பெற்­றான் சீனு!