கண்ணீர்க் கடலில்...

கண்ணீர்க் கடலில்...

1 mins read

- பூவிலங்கையான்

கண்ணீரோடு

விடைபெறுகிறேன்.

உன் கண்கொள்ளாக்

காட்சி மீண்டும்

கிடைக்காதாயெனும்

ஏக்கத்தோடு.

நீயெனை தாலாட்டினாய்

சீராட்டினாய்

பாராட்டினாய்

சோரூற்றினாய்

மெருகேற்றினாய்.

வற்றிய என் வாழ்வின்

வேர்களுக்கு நீரூற்றினாய்.

ஏழ்மை துரத்தினாய்.

தாழ்மை திருத்தினாய்.

வாய்மை பெருக்கினாய்.

வறுமை கொளுத்தினாய்.

விட்டுவிட்டுப் போகிறேன்

நெஞ்சமெல்லாம்

உன் நினைப்பை சுமந்து.

சிங்கைத் தாயே..

உன்னிடமிருந்து

வேலை இழந்து

செல்கிறேன்.

விழிகளிரண்டும்

கண்ணீர் கடலில் மிதந்து...