பழநொதிற் பார்வை

1 mins read

அவள் நீராடிச் செல்கையில்

பிடரி வளைத்து - என்னில்

முறுவல் தைத்து - பின்

இயல்பு திரும்பி தொலைந்திட...

உணர்கிறேன்!

மரூலாக் கனிகளை

கவளங்கள் பல தின்று நடந்த

வாரணம் செய்த

வனப் பாதையென...

ஆம்!

என் முகத்தில் ஈரம் தெளித்து

நெளிந்தாடிச் சென்ற - அவளின்

கருஞ்சுருள் கூந்தற் சாரலென்பது...

என் மனதில் பெய்திட்ட

ஆனந்தக் கள் கார்காலம்

- ஆலை கமலன்