மகிழ்ந்தாட ஒரு மனம்!

மகிழ்ந்தாட ஒரு மனம்!

1 mins read

பகலென்றறிந்ததும்

என்னிரு கண்களை

தடுத்துப் பிழைக்கிறேன்

இருளென்றறிந்தும்

என்னிரு கைகளை

எடுத்து நுழைக்கிறேன்

தேடித் துழாவுகையில்

கோடி அகப்படுது

கைகளில்!

கோபம்;

துன்பம்;

துரோகம்;

வலி;

கிலி...

அவையெல்லாம்

எனதெதிரிகளிடமிருந்து

பிடுங்கிப்

புதைத்தவை தான்.

தொலைத்த

மகிழ்ச்சியை

தேடிக்

கொண்டிருக்கிறேன்

தினந்தோறும்

கைகளுக்குள்

சிக்கவிடாமல்

கண்ணாமூச்சி

ஆடுகிறது

காலம்!

- அன்பு(டன்)