பஸ் எண் 47

சிறுகதை எழுதியவர்: சிவக்குமார் கே.பி.

பரத்­தின் மனம், அன்று நள்­ளி­ரவு தாண்­டி­யும் தன் குரங்­குத் தன்­மையை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­தது. அவ­னும் புரண்டு புரண்டு பார்த்­துப் பார்த்­தான். மனதை அமை­திப்­ப­டுத்த முயன்­றான். அதை கொஞ்­சம் கெஞ்­சி­னான். ஏன்? அதட்­டிக்­கூட பார்த்­தான். ஆனால் அந்த மனம் என்ற குரங்கு, உறக்க தேவ­தை­யின் பிடி­யில் நள்­ளி­ரவு ஆகி­யும் சிக்­க­வே­யில்லை. பரத்­தோடு அது கண்­ணா­மூச்சி விளை­யா­டிக்­கொண்­டே­யி­ருந்­தது. அப்­படி அலை­பாய கார­ணம், அடுத்து விடி­யப்­போ­கும் நாள், அவன் வேலை­யில் ஒரு முக்­கி­ய­மான நாள் என்று அது அவ­னோடு பேசிக்­கொண்­டே­யி­ருந்­தது.

“நான் கஷ்­டப்­பட்டு போட்ட இந்த ‘ப்ரா­ஜெக்ட் ப்ரோ­போ­சல்’ல ‘மீட்­டிங்க்’ல ஒத்­துக்­கிட்­டாங்­கன்னா அது பெரிய வெற்றி.

“பல வரு­ஷமா காத்­துக்­கிட்­டி­ருந்த ப்ரோ­மோ­ஷன் கிடைக்க, இந்த வெற்­றி­யைக் காட்டி கேட்க வேண்­டி­ய­து­தான்” என்று மனம் தாவி­யது.

‘நாளைக்­குன்னு பார்த்து ‘சிஇஓ’கூட இந்த மீட்­டிங்­கிற்கு சிங்­கப்­பூர் வரார்னு கேள்­விப்­பட்­டேன். அவர் முன்­னாடி பேசி, அசத்­தி­ட­வேண்­டி­ய­து­தான். பரத்! உனக்கு நல்ல நேரம்டா’ என்று மனம் பல திசை­களில் தாவிக்­கொண்­டி­ருந்­த­போது அவ­ன­ருகே ஏதோ கைய­சை­வதை உணர்ந்­தான்.

“காவ்யா...! நீ இன்­னுமா தூங்­கலை? மணி எத்­தனை தெரி­யுமா? நாளைக்கு ஸ்கூ­லுக்கு சீக்­கி­ரம் கிளம்­ப­ணும்..’’ என்று அவன் அவளை அதட்­டி­ய­போது, தன் வலது கை கட்டை விரலை அவ­சர அவ­ச­ர­மாக வாயில் வைத்து சப்ப ஆரம்­பித்­தாள் பரத்­தின் ஏழு வயது மகள் காவ்யா. அப்­படி விரலை சப்­பி­ய­வாறு, மெல்ல அவ­ள­ருகே இருந்த தலை­ய­ணையை அகற்­றி­விட்டு, அவ­னு­டைய காதில் ஏதோ சொல்ல வந்­தாள்.

“அப்பா.. அப்பா..’’ என்று ரக­சி­ய­மாக, “நாளைக்கு ஸ்கூல் ஸ்டேஜ்ல நான் பேசப்­போ­றேன். எல்­லா­ரோட அப்பா அம்­மா­வும் வராங்க. நீங்­களும் வரீங்க தானே?’’ என்­றாள்.

“அப்­பா­வுக்கு, நாளைக்கு ஒரு முக்­கி­ய­மான வேலை இருக்கு. அத­னால, அம்மா மட்­டும்..” என்று அவன் எதார்த்­தத்தைச் சொல்ல ஆரம்­பித்­த­போது, அவ­ளின் உத­டு­கள் பிதுங்­கின.

“சரி சரி... இப்போ அழுது ஊர கூட்­டாதே. நாளைக்கு, நானும் வரேன். இப்போ தூங்கு..’’ என்று அவள் மனம் குளிர சமா­தா­னப்­படுத்­தி­னான். அதைக் கேட்­ட­தும், அவனைப் பார்த்து சற்று சிரித்­த­வாறே, மீண்­டும் காவ்யா தன் கட்டை விரலைச் சப்பி தூங்கச் சென்றாள்.

இப்­போது அப்­பா­வும் மகளும் அவ­ர­வர் நாளையை எதிர்­நோக்கி தூங்க ஆயத்­த­மா­யினர்.

*

“காவ்யா! மணி ஆறு. எழுந்­திரு. சீக்­கி­ரம் பஸ் பிடிக்­க­ணும். இன்­னிக்கி அப்­பா­வுக்­கும் சீக்­கி­ரம் கிளம்­ப­ணும்,’’ என்று தான் கிளம்­பிக்­கொண்­டி­ருக்­கும்­போதே காவ்­யாவை எழுப்­பி­னான் பரத்.

“அப்பா, நான் என்ன பேசப்­போறேன் தெரி­யுமா?’’ என்று கண் முழித்­த­வு­டன் அவள் கேட்ட முதல் கேள்­விக்கு, “எல்­லாம் பஸ்­சில போகும்­போது பேசிக்­க­லாம். இப்போ நீ சேட்டை பண்­ணாம அம்மா சொல்­ல­ற­படி கிளம்பு,’’ என்று அவள் பேச்­சுக்கு முற்­றுப்­புள்ளி வைத்­தான்.

மணி ஏழு. அப்­பா­வும் மகளும் இப்­போது பஸ் எண் 47 வரு­கைக்­காகக் காத்­தி­ருந்­த­னர்.

“சே..., இன்­னிக்­கின்னு பார்த்து இந்த பஸ் கூட படுத்­த­ணுமா? அடக்கடவுளே!’’’ என்று அவன் முணு­மு­ணுத்­ததை காவ்யா கேட்­ட­தும், “என்­னப்பா?’’ என்று அந்த வய­தில் எல்­லாம் அறிய கேட்­கும் ஆவ­லோடு கேட்­டாள்.

“...உம் எல்­லாம் உன்­னா­ல­தான்.. சீக்­கி­ரம் கிளம்­புன்னு சொன்­னேன்ல,’’ என்று சொல்லி அடிக்­கடி மணி­யை­யும் அந்த சாலை­யை­யும் பார்த்­த­வ­னி­டம் அவள் எது­வும் பேச­வில்லை.

ஒரு வழி­யாக பஸ் எண் 47 வந்து அவர்­கள் ஏறி­ய­தும், மீண்­டும் மணியைப் பார்த்­தான் பரத். “பர­வா­யில்லை. இப்­ப­வாச்­சும் வந்­துச்சே!!. இனி ஆடிஅசைஞ்சு ஊர்­வ­லத்துல போகுற மாதிரி போகாம, கொஞ்­சம் சீக்­கி­ரம் போனா நல்லா இருக்­கும். ஒன்­பது மணிக்­குள்ள ஆஃபிஸ் போயி­ட­ணும். அப்போதான் பத்து மணி மீட்­டிங் முன்­னாடி கொஞ்­சம் தயார் பண்­ணிக்­க­லாம்,” என்று அன்­றைய தினத்­தின் எதிர்­பார்ப்­பில் மூழ்­கி­னான்.

பஸ்­சில் உட்­கார்ந்ததுதான் தாமதம், “அப்பா, நான் என்ன பேச போறேன் தெரி­யுமா?’’ என்று காவ்யா பேச ஆரம்­பித்­தாள்.

“உ..ம்’’ என்று மட்­டும் பதி­ல­ளித்த பரத், அவன் கைபே­சியைப் பார்க்க ஆரம்­பித்­து­விட்­டான். அன்று முக்­கி­ய­மான மீட்­டிங் வேறு இருந்­த­தால், அவன் கவ­னம் அனைத்­தும் கைபே­சி­யில்­தான் இருந்­தது.

என்­றைக்­கும் போல், அன்­றைக்­கும் காவ்யா வழி­மு­ழுக்க ஏதோ பேசிக்­கொண்­டே­யி­ருந்­தாள். ஆனால், அன்று சற்று மாறு­த­லாக நிறை­யவே பேசி­னாள் என்று மட்­டும் பரத் உணர்ந்­தான்.

ஒரு பத்து நிமி­டம் கழித்து, தன் கைபே­சி­யி­லி­ருந்து கவ­னத்தை விலக்கி, அவ­ளைப் பார்த்­தான்.

அவர்­க­ளின் நேர் பின் சீட்­டில் உட்­கார்ந்­தி­ருந்த ஒரு வய­தா­ன­வ­ரி­டம் அவள் ஏதோ கைய­சைத்து பேசிக்­கொண்­டி­ருந்­தாள். அவ­ரும் அவள் பேசி­யதை நிதா­ன­மா­கக் கேட்­டுக்­கொண்டு அவள் சிரிக்­கும்­போ­து­கூட சேர்ந்து சிரித்­துக்­கொண்­டி­ருந்­தார்.

“ஓ! இந்த தாத்­தாவா! ஆமாம், இவ­ருக்­கென்ன? ஒரு கவ­லை­யும் இல்லை” என்று நினைத்­தான் பரத்.

தினம் அந்த பஸ்­சில் அந்த தாத்தா வரு­வதை அவன் பார்த்­தி­ருந்­த­தால், காவ்யா அவ­ரோடு பேசு­வதை அவன் தடுக்­க­வில்லை.

பஸ் இப்­போது அவள் பள்­ளி­யின் முன் நின்­றது. அவ­சர அவ­ச­ர­மாக அவர்­கள் இறங்­கி­ய­போது, “குட்­லக்’’ என்று அந்த தாத்தா காவ்­யா­வைப் பார்த்து கைய­சைத்­தார்.

பள்­ளிக்­குள்ளே அவளை விட்டு­விட்டு பரத் கிளம்­பத் தயா­ரா­ன­போது, “அப்பா, 12 மணி, சரியா?’’ என்று சொன்­ன­வ­ளி­டம், அவ­னுக்கு ஏனோ இப்­போது பொய் சொல்ல மனம் வர­வில்லை.

“பயப்­ப­டாம பேச­ணும் காவ்யா’’ என்று தன் வருகை பற்றி ஏதும் சொல்­லா­மல் அவன் கிளம்­பி­ய­போது, அந்த ஏழு வயது மனம், பல எதிர்­பார்ப்­பு­க­ளோடு அவ­னுக்­குக் கைய­சைத்­தது.

மணி ஒன்­பது. ஆஃபீஸிற்­குள் வந்­த­வ­னுக்கு சற்று ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது. எப்­போ­தும் சற்று தாம­த­மாக வரும் அவனுடைய சூப்பர்வைசர் ஷங்­கர், அன்று ஏனோ, அவன் வரு­வதற்கு முன்­னரே வந்­தி­ருந்­தார்.

பரத் அவன் இருக்­கை­யில் உட்­கார்ந்­த­து­தான் தாம­தம், அவ­ரின் குரல் ‘பரத்’ என்று அழைத்­தது.

“இந்த ப்ரோ­போ­சல் பற்றி எனக்கு சில கேள்­வி­கள் இருக்கு’’ என்று அவ­னி­டம் அடுத்த ஒரு மணி நேரத்­துக்கு அவர் அடுக்­க­டுக்­காக கேள்வி கேட்­டார். அப்­படி கேட்­ட­வ­ரி­டம், அவன் சேக­ரித்து, ஆராய்ந்த எல்லா விஷ­யங்­க­ளை­யும் எடுத்­து­ரைத்­தான்.

“சார். மணி பத்து. ‘சிஇஓ’ கூட இந்த மீட்­டிங்­கிற்கு வரார்னு கேள்­விப்­பட்­டேன். நாம போக­லாமா?’’ என்று ஆவ­லோடு கேட்­டான் பரத்.

“அந்த மீட்­டிங்கை இன்­னிக்கி மதி­யம் தள்ளி வச்சுட்­டாங்க. இன்­னும் எப்­போன்னு சரியா சொல்லலை,” என்று ஷங்­கர் சொல்­லி­விட்டு, ‘நீ உன் இடத்­தி­லேயே இரு. எனக்கு இன்­னொரு மீட்­டிங் இப்போ போக­ணும்,’’ என்று அவர் அறையை விட்டுக் கிளம்­பி­னார்.

தன் இருக்­கைக்கு மீண்­டும் திரும்பி வந்­த­வனை, “ஹே பரத். ஆல் செட்?’’ என்று கேட்­டான், அவ­னோடு வேலை பார்க்­கும் கெளதம்.

“ஆமாம் கெள­தம்... கொஞ்­சம் பய­மா­வும் இருக்கு. இந்த ப்ரோ­போ­சல் மீட்­டிங்­கில் ஒத்­துக்­கிட்­டாங்­கன்னா நல்லா இருக்­கும். பெரிய பாஸ் வேற சிங்­கப்­பூர் வந்­தி­ருக்­கார்னு கேள்­விப்­பட்­டேன்,’’ என்­றான் பரத்.

“நானும் கேள்­விப்­பட்­டேன். இந்த மீட்­டிங் வாய்ப்பு உனக்கு முக்­கி­யம். ஆல் தி பெஸ்ட்,’’ என்று அவ­னுக்கு ஊக்­க­ம­ளிக்­கும் வகை­யில் பேசி­விட்டு, “சரி, நான் ஒரு வாடிக்­கை­யா­ள­ரைப் பார்த்­துட்டு லஞ்ச் முடிஞ்சு வரேன்,’’ என்று சொல்லி அங்­கி­ருந்து நகர்ந்­தான் கெள­தம்.

சற்று நேரம் தன் கணி­னி­யின் முன் உட்­கார்ந்­தி­ருந்த பரத்­திற்கு அன்­றைய மீட்­டிங் பற்­றிய நினை­வு­கள்­தான் ஓடிக்­கொண்­டே­யி­ருந்­தன. ‘இந்த ‘ப்ரா­ஜெக்ட்’ நான் கொடுத்த ‘ப்ரோ­போ­சல்’படி பண்­ணினா, கம்­பெ­னிக்கு நல்ல லாபம் கிடைக்­கும்’ என்று மனம் அசை­போட்­டது.

ஆனால், நேரம் ஆக ஆக பரத்­திற்கு இருப்­புக்­கொள்­ள­வில்லை. ஷங்­க­ருக்கு மீட்­டிங் நேரம் கேட்டு தக­வல் அனுப்­பி­னான். எந்­தப் பதி­லும் இல்லை.

மணி இப்­போது மதி­யம் இரண்டை தாண்­டி­விட்­டது. ஷங்­க­ரி­ட­மி­ருந்து இன்­னும் எந்­தப் பதி­லும் வரா­த­தால், செக­ரட்­ட­ரி­யி­டம் விவ­ரம் அறி­யச் சென்­றான். அவ­ளி­டத்­தி­லும் எந்­தத் தக­வலும் இல்லை.

“ஹே பரத், மீட்­டிங் முடிஞ்­சுதா? ‘ப்ரோ­போ­சல்’ பத்தி என்ன சொன்­னார்?’’ என்று கேட்­டான் ஆஃபீசிற்­குள் திரும்பி வந்த கெள­தம்.

“இல்­லப்பா... இன்­னும் மீட்­டிங் எப்­போன்னு தக­வலே இல்லை. ஷங்­க­ரும் அவர் மீட்­டிங்­கி­லி­ருந்து திரும்பி வரலை. எனக்­கென்­னவோ இந்த மீட்­டிங் இன்­னிக்கி நடக்­காதுன்னு நினைக்­கி­றன்,’’ என்று சற்றே ஆதங்­கத்­தோடு சொன்­னான் பரத்.

“இதெல்­லாம் வழக்கமா நடக்குறதுதான் பரத். ஆமாம் கேட்­க­ணும்னு நினைச்­சேன். நீ சாப்­பிட்­டியா?’’ என்று கேட்­ட­வ­னி­டம், இல்லை என்று தலை­ய­சைத்­தான்.

“அடப்­பாவி. சுவர் இருந்­தா­தா­னேடா சித்­தி­ரம் வரைய முடி­யும். நாளைக்கு நமக்கு ஏதாச்­சும் ஆச்­சுன்னா, இந்த ஷங்­கரா வந்து நம்­மள பார்த்­துப்­பான்?’’ என்று சற்று நையாண்­டித்­த­னத்­தோடு கேட்­டு­விட்டு, இப்­போது கொஞ்­சம் அக்­க­றை­யோடு அவனை வெளியே செல்ல அழைத்­தான்.

“பரத், மணி இப்போ நாலு. பேசாம என்­னோட வந்து ஏதா­வது சாப்­பிடு. நானும் காபி குடிக்கப் போறேன்,’’ என்ற கௌத­மின் அழைப்­பிற்கு, பரத் மறுப்­புத் தெரி­விக்­க­வில்லை.

கௌத­மோடு வெளியே சென்று­விட்டு திரும்பி வந்­த­வ­னுக்கு இன்­னும் அந்த முக்­கி­ய­மான மீட்­டிங் பற்றி எந்த தக­வ­லும் வர­வில்லை.

சரி, வேறு ஒரு நாள் அது நடக்­கும் என்று அன்று காலை முதல் அவன் தள்­ளி­வைத்த வேலை அனைத்­தை­யும் செய்ய ஆரம்­பித்­தான். அதில் மூழ்­கி­ய­வ­னுக்கு நேரம் போனதே தெரி­ய­வில்லை.

“பரத், நீ இன்­னுமா கிளம்­பல?. மணி எட்டு டா!! இதுக்­கு­மேல மீட்­டிங் நடக்­கும்னு காத்­துட்­டி­ருக்­கியா?’’ என்று கெள­தம் கிளம்­பி­ய­போதுதான், மணி­யைப் பார்த்­தான் பரத். அந்த நீண்ட நாளின் களைப்பு, இப்­போது சற்றே அவன் மேல் படர தொடங்­கி­யது.

வீட்­டிற்கு வந்த பிறகு தான் அவ­னுக்கு மீண்­டும் காவ்­யா­வின் நினைப்பே வந்­தது.

“அவ தூங்­கிட்டா பரத். நீ அவளை ஸ்டேஜ்ல பார்க்க வருவன்னு சொல்லி ரொம்ப எதிர்­பார்த்தா. கொஞ்ச நேரம் அழு­துட்­டு­கூட இருந்தா. அப்­பு­றம், அம்மா நான் இருக்­கேன்னு சொல்லி எப்­ப­டியோ சமா­ளிச்­சுட்­டேன்,’’ என்று அவன் மனைவி சொன்­ன­தைக் கேட்­ட­தும் அவ­னுக்­குச் சற்றே வருத்­த­மாக இருந்­தது.

“பர­வா­யில்லை பரத். உனக்கு முக்­கி­ய­மான மீட்­டிங்னு சொன்­னியே. எப்­ப­டிப் போச்சு?’’ என்று அவள் மேலும் தொடர்ந்­த­போது பரத்­தின் கைபேசி அழைத்­தது.

“என்ன கெள­தம்?’’ என்று சற்று மெது­வாக பேசி­னான் பரத்.

“முதல்ல போய் உன் ஈ மெயில் பாரு. அந்த ‘சிஇஓ’ மீட்­டிங் முடிஞ்சி சிங்­கப்­பூர் விட்டு இன்­னிக்கி சாயந்­த­ரம் கிளம்­பி­யாச்சு,’’ என்று அவன் சொன்­னது எது­வும் பரத்­திற்கு விளங்­க­வில்லை. கௌத­மின் தொடர்பைத் துண்­டித்­து­விட்டு, அவ­ச­ர­மாக அவன் ஆபீஸ் ஈமெயில் பார்த்­தான்.

‘சிஇஓ’ விட­மி­ருந்து அந்த ப்ரோ­போ­சல் பற்றி, ஒரு ஈமெ­யில் வந்­தி­ருந்­தது. அதில் அவன் ஷங்­கரை, அந்த ப்ரோ­போ­சல் போட்­ட­தற்­காக பாராட்­டி­யி­ருந்­தார்.

ஷங்­கர் அந்த ‘சிஇஓ’ கூட தனி­யாக லஞ்ச் ஏற்­பாடு செய்து, அவர் நேரத்தை வீண­டிக்­கா­மல் அந்த நேரத்­தில்­கூட ப்ரோ­போ­சல் பற்றி விளக்­கி­ய­தை­யும், அது அவர்­கள் கம்­பெ­னிக்கு நிறைய லாபம் கொடுக்­கும் என்­கிற நம்­பிக்­கை­யை­யும் எழு­தி­யி­ருந்­தார்.

ஷங்­கர் போன்ற திற­மை­யா­ன­வர்­கள், மேலும் கம்­பெ­னிக்கு வேண்­டும் என்று அந்த ஈமெ­யில் முடிந்­தது.

“என்ன பரத்? வந்­த­தும் வரா­த­துமா ஆபீஸ் மெயில் பார்க்­க­ணுமா?’’ என்று அவன் மனைவி அவன் நினை­வு­க­ளைக் கலைத்­தாள்.

“இன்­னிக்கி காவ்யா என்ன பேசினா தெரி­யுமா? அவ­ளுக்கு கதை சொல்­லப் பிடிக்­கு­மாம். ஆனா பஸ்­சில போகும்­போது, தன்­னோட அப்பா கைபே­சில எப்­ப­வும் ஆபீஸ் வேலையே பார்க்­க­ற­து­னால, அவ பஸ்­சில ஏதோ ஒரு தாத்தாக்கிட்ட பேசு­வா­ளாம். இன்­னிக்கி அவ பேசி­மு­டிக்­கும்­போது ‘ஐ லைக் பஸ் 47’ சொன்­ன­தும், எல்­லா­ரும் சிரிச்­சுட்­டாங்களாம்.’’

“சரி, நீயும் ஆபீஸ் வேலை­யில மூழ்­கி­யி­ருக்­க­ற­து­னால, நாளை­யி­லி­ருந்து காவ்­யாவை அவ ஸ்கூல் பஸ்­சில போக ஏற்­பாடு பண்­ணிட்­டேன். அவ­ளுக்­கும் அதில ரொம்ப சந்­தோ­ஷம். அடுத்த வாட்டி பேசும்­போது ‘ஐ லைக் ஸ்கூல் பஸ்’னு பேசு­வேன்னு அவ சொன்­ன­தும், எனக்கு குழந்­தைங்க எப்­படி சட்­டுனு மாறி­ட­றாங்கன்னு நினைச்சு ஆச்­சர்­யமா இருந்­துச்சு,’’ என்று அவன் மனைவி அன்­றைய தினத்தை முடித்­தாள்.

பரத் தூங்­கிக்­கொண்­டி­ருந்த காவ்­யாவைப் பார்த்­தான். தன் வலது கை கட்டை விரலை நன்கு சப்­பி­ய­வாறு, அமை­தி­யாக தூங்­கிக்­கொண்­டி­ருந்­தாள்.

அடுத்த நாள் காலை. பரத் அந்த 47 பஸ்­சில் தனி­யாக இருந்­தான். அவ­ன­ருகே இருந்த இருக்கை காலி­யாக இருந்­த­தால், அந்தத் தாத்தா அவ­ன­ருகே வந்து அமர்ந்­தார்.

“என்ன? உங்க பொண்ணு வர­லையா?’’ என்று அவர் கேட்­ட­தும், “இல்லை, அவ இன்­னி­லேர்ந்து ஸ்கூல் பஸ்­சில போறா’’ என்று பதி­ல­ளித்­தான் பரத்.

“...ம் பசங்க நம்ம கையை விட்­டுட்டு என்­னிக்கி தனியா ஒரு சிக்­னல் தாண்­ட­றாங்­களோ, அன்­னிக்கிதான் அவங்க நம்ம விட்டு பிரிஞ்சு போற முதல் அடி எடுத்து­வைக்­க­றாங்க. அப்­பு­றம் ப்ரண்ட்ஸ் தான் அவங்க உல­கம். அத­னால, அந்த நாள் வர­வ­ரைக்­கும், நம்­ம­ளால எவ்­வ­ளவு நேரம் அவங்­க­ளோட செல­வ­ழிக்க முடி­யுமோ, அவ்­வ­ளவு நேரம் செல­வ­ழிக்­க­ணும்,’’ என்று ஆரம்­பித்­தார்.

“நான் இப்போ வீட்­டில தனியா தான் இருக்­கேன். என் பசங்­க­ளுக்­கும் கலி­யா­ணம் ஆகி அவங்க குடும்­பம்னு போயிட்­டாங்க. சரி, வீட்­டில சும்மா உட்­கார்­ற­துக்குப் பதிலா தினம் காலை­யில இந்த பஸ்­சில கடைசி ஸ்டாப் வரை போயிட்டு வரு­வேன். நிறைய பள்­ளிக்­கூட பசங்க வரு­வாங்க. அவங்­க­ளோட பேச்சுக் கொடுக்­கும்­போது, மன­சும் லேசா­யி­டும். உண்­மை­யச் சொல்­ல­ணும்னா, ‘ஐ லைக் பஸ் 47’ என்று முடித்­தார்.

வேலைதான் வாழ்க்கையா அல்லது வேலை வாழ்க்கையில் ஒரு பகுதியா என்று தெரியாமல் குழம்பி நிற்கும் பலரில், நம் கதையின் நாயகன் பரத்தும் ஒருவன்.

பஸ் எண் 47, இப்போது காவ்யாவின் பள்ளிக்கூட ஸ்டாப்பை தாண்டிச்சென்றது.

*

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!