யாருக்குச் சொந்தம்

யாருக்குச் சொந்தம்

1 mins read

அங்காடித் தெருவில்

அனாதையாகக் கிடக்கிறது

ஐம்பது வெள்ளி

பார்த்தான் ஒருவன்

பறந்து எடுத்தான் வேறொருவன்

'என் காசு' என்றான் பார்த்தவன்

'இல்லை அது என் காசு'

என்றான் எடுத்தவன்

அடாவடிப் பேச்சு

அடிதடியில் முடியலாம்

'ஆளுக்குப் பாதியே

நியாயம்' என்றான் இன்னொருவன்

'முடியாது நீ

முடிந்ததைப் பார்'

எடுத்தவன் ஓடுகிறான்

பார்த்தவன் விரட்டுகிறான்.

'அம்மா... அம்மா...

திட்டாதீங்கம்மா...

இனிமே கவனமா இருப்பேம்மா...

பணத்தைத்

தொலைத்த சிறுவனுக்கோ

வீட்டில் அம்மாவின்

நீண்ட அறிவுரை!

அமீதாம்மாள்