அவன் அப்படித்தான்

அன்று காலை மீட்­டிங் முடிந்து, வெளியே வந்த ராமி­டம், அவன் மேல­தி­காரி பாஸ்­கர் அவ­னி­டம் பேசி­யதுதான் மன­தில் ஒலித்­துக்­கொண்­டி­ருந்­தது.

'ராம், சுருக்­கமா சொல்­ல­ணும்னா, அவன் ஒரு வணங்­கா­முடி. போன ஒரு வரு­ஷத்­துல, நாலு ப்ரொஜெக்ட் மாறி­யி­ருக்­கான். அவன் வேலை பண்­ணின எல்லா ப்ரொஜெக்ட்­ல­யும் மேனே­ஜ­ரோட, இல்­லாட்டி டீம்ல இருக்­கற மத்­த­வங்­க­ளோட ஏதா­வது ஒரு பிரச்­சினை. ஆனா, எப்­ப­டியோ தெரி­யலை, நம்ம கம்­பெ­னில புதுசா சேர்ரவங்­க­ளுக்­காக வைக்­கிற பரீட்­சையில இது­வ­ரைக்­கும் யாருமே வாங்­காத நூறு விழுக்காடு வாங்­கிட்­டான்னு, அவனை இன்­னும் ஒரு ப்ரொ­ஜெக்ட்ல பயிற்­சி­ய­ளிக்க கம்­பெனி ஹெச்ஆர் மூலம் எனக்கு பிர­ஷர். அதான், அவனை உன்­னோட ப்ரொ­ஜெக்ட்ல இப்போ சேர்த்­துட்­டேன். ஆனா நீ ஒண்­ணும் கவ­லைப்­ப­டாதே. நானே அவனை நேர்ல சந்­திச்சு மேல இருக்­க­ற­வங்க சொல்­ல­ற­படி கேட்டு வேலை பண்ண சொல்­லி­யி­ருக்­கேன். இல்­லாட்டி, இது­தான் அவ­னுக்கு இந்த கம்­பெ­னில கடைசி வேலைனு சொல்­லிட்­டேன்'.

பாஸ்­கர் அப்­படி சொன்­ன­தோடு நிற்­கா­மல், மேலும் ஒன்று சொன்­னது­தான் ராமின் மனதை வாட்­டி­யது.

'நீ ரொம்ப நல்­ல­வன் ராம். ஆனா இந்த மாதிரி வணங்­கா­முடி பசங்­க­கிட்ட ரொம்ப நல்­ல­வனா இருக்­காதே. அவனை ராத்­திரி பகல்னு பார்க்­காம வேலை வாங்கு. ஆல் தி பெஸ்ட்' என்று அவர் சொன்­னதை நினைத்து, சிரிப்­பதா அழு­வதா என்று தெரி­யா­மல் தன் இருக்­கை­யில் வந்து அமர்ந்­தான்.

அமர்ந்த கையோடு, நம் கதை­யின் நாய­கன், அதான் அந்த வணங்­கா­மு­டியை 'லஞ்ச்' முடிந்து தன்னை வந்து பார்க்­கு­மாறு மெயில் அனுப்­பி­னான்.

'ஹாய் ராம்' என்று மதி­யம் ராமின் அறைக்­குள் வந்­தான் அந்த வணங்­கா­முடி. பொது­வாக அந்த கம்­பெ­னி­யில் இருப்­ப­வர்­கள், உயர் பத­வி­யில் இருப்­ப­வர்­களை 'சார்' என்று அழைப்­பது வழக்­கம். ஆனால் இவன் ராமை, பெயர் சொல்லி அழைத்­தான். அது­மட்­டு­மல்ல, வந்­த­வன் ராம் முன்னே இருக்­கும் இருக்­கை­யில் அமர்ந்­தான்.

ராம் அவனை சிறிது நேரம் அமை­தி­யாக பார்த்­தான்.

கலைந்த தலை­முடி, ஹார்ரி பாட்­டர் போல ஒரு கண்­ணாடி, சவ­ரம் பார்க்­காத முகம், பில் கேட்ஸ் போல முழுக்கை மறைக்­கும் டீ ஷர்ட், ஆங்­காங்கே கொஞ்­சம் கிழிந்த ஜீன்ஸ் என்று டெக்­னா­லஜி மொழி­யில் சொல்­லக்­கூ­டிய 'கீக்' (Geek) போல தோற்­ற­ம­ளித்­த­வன், அந்த அறையை நோட்­டம் விட்­டுக்­கொண்­டி­ருந்­தான்.

"வாவ்... வக்­லவ் ஸ்மில், யூவல் ஹராரி... அப்­பு­றம் எலன் மஸ்க் பத்­தின புக். நீங்­களும் என்ன மாதிரி புக்ஸ் படிப்­பீங்­களா?'' என்று அவனே பேச்சை ஆரம்­பித்­தான்.

''ஹ்ம்ம்...'' என்று பதில் சொன்ன ராமின் மன­தில், இப்­ப­டிப்­பட்­ட­வன் முன்பு வேலை பார்த்த கம்­பெ­னி­யில் ஒரு வரு­ஷத்­திற்கு மேல் எப்­படி தாக்­குப்­பி­டித்­தான் என்ற கேள்வி எழுந்­தது.

''நீ ஏன் அடிக்­கடி ப்ரொ­ஜெக்ட்ஸ் மாறிட்­டி­ருக்க?'' என்ற ராமின் கேள்­விக்கு, ''இதுக்கு உண்­மை­யான பதில் வேணுமா?'' என்று ஆரம்­பித்­தான்.

''எனக்கு மேல இருந்­த­வன் எல்­லாம் முட்­டாள். புத்­தி­சா­லி­யோட எவ்­வ­ளவு மணி நேரம் வேணும்­னா­லும் வேலை பார்க்­க­லாம். ஆனா முட்­டாள்­க­ளோட என்­னால வேலை பண்ண முடி­யாது. இந்த புக்ஸ் எல்­லாம் படிக்­க­ற­து­னால, நீங்க அப்­ப­டிப்­பட்­ட­வரா இருக்கமாட்­டீங்­கனு நினைக்­கி­றேன்,'' என்று முடித்­தான்.

"உனக்கு இங்க ஒத்­து­வ­ர­லைனா பேசாம வேற கம்­பெ­னிக்கு போலாமே?'' என்று ராம் கேட்­ட­தற்கு, ''கண்­டிப்பா போகத்­தான் போறேன். ஆனா அதுக்கு முன்­னாடி கொஞ்­சம் கையில பணம் சம்­பா­திக்­க­ணும்,'' என்ற அவன் பதில் வித்­தி­யா­ச­மாக இருந்­தது.

"நான் அமெ­ரிக்கா போய், நியூரோ டெக்­னா­ல­ஜில டாக்­டர் பட்­டம் வாங்­க­ணும். அதுதான் என்­னோட முதல் குறிக்­கோள். ஆனா, அதுக்கு முதல்ல கையில கொஞ்­சம் காசு வேணும். அதுக்­காக வெள்­ளைக்­கா­ரன் அங்­கி­ருந்து நமக்கு அனுப்­பற குப்பை வேலை­யெல்­லாம் வாழ்க்­கை­மு­ழுக்க பண்­ணிட்­டி­ருக்­கற ஆள் நான் இல்லை. எனக்கு அங்க போய், அவ­னுக்கு மேல உட்­கார்ந்து என்­னால புதுசா கண்­டு­பி­டிக்க முடி­யும்னு காமிக்­க­ணும். அதுக்­கான திறமை எனக்கு இருக்­குனு தெரி­யும்,'' என்று சொன்­ன­வன் மேலும் தொடர்ந்­தான்.

"என்­னைப் பத்தி, இங்க யாருக்­கும் நல்ல அபிப்­ரா­யம் இல்­லைனு எனக்­குத் தெரி­யும். என்ன வணங்­கா­முடி, சூன்­யம், லூசு இப்­ப­டி­யெல்­லாம் பேசிக்­கு­வாங்க. ஐ டோன்ட் கேர்! அவங்கதான் முட்­டாப்­ப­சங்க! அவங்­க­ளுக்கு ஒண்ணு தெரி­யலை. இந்த உல­கம் முன்­னேறி இருப்­ப­தற்­கான கார­ணம், வணங்­கா­மு­டி­கள்தான். கேள்வி கேட்­ட­து­னால தான் அறி­வி­ய­லி­லும் சரி, அர­சி­ய­லி­லும் சரி, மாற்­றம் ஏற்­பட்­டி­ருக்கு. அத­னால எனக்கு எல்­லார் மாதி­ரி­யும் வேலை பண்ண முடி­யாது. ஏதா­வது கஷ்­டமா, சவா­லான பிரச்­சினை இருக்­கற வேலை உங்க ப்ரொ­ஜெக்ட்ல இருந்தா எனக்­குக் கொடுங்க," என்று ஒரே மூச்­சாய் பேசி­னான்.

இப்­ப­டிப்­பட்­ட­வன் எங்­கி­ருந்து கிளம்­பி­னான்? தினம் யாரோ ஒருத்­தன் கொடுக்­கும் வேலை­யைப் பண்­ணிட்டு, கேன்­டீ­னில் பஜ்ஜி சாப்­பிட்டு, இரவு நண்­பர்­க­ளோடு தண்ணி அடிக்­கும் ரகத்­தைச் சேர்ந்­த­வன் இவன் இல்லை என்று ராமிற்கு நன்­றாகப் புரிந்­தது. அறி­வுக்­கும் திற­மைக்­கும் சவா­லாக தீனி கேட்டு வந்­தி­ருக்­கும் இந்த இளை­ஞனை, மற்­ற­வர் போல நடத்­தக்­கூ­டாது என்­றும் தெளி­வா­கப் புரிந்­தது.

''ஹ்ம்ம்...சரி. இந்த ப்ரொஜெக்ட் பத்தி உனக்­குச் சொல்­ல­றேன்,'' என்று ராம் அடுத்த அரை மணி நேரத்­துக்கு அவர்­கள் செய்­யும் அந்த மென்­பொ­ருள் ப்ரொஜெக்ட் பத்­தி­யும், அதில் அவன் சொன்­னது­போல் அந்த வெள்­ளைக்­கா­ரன் கேட்­கும்­படி செய்­ய­வேண்­டிய கட்­டா­யங்­க­ளை­யும் விளக்­கி­னான். அது­மட்­டு­மில்­லா­மல், அந்த ப்ரொ­ஜெக்ட்­டில் அவர்­கள் ஒரு புதிய டெக்­னா­லஜி உப­யோ­கிப்­ப­தா­க­வும், அதைப் பற்றி வணங்­கா­மு­டி­யி­டம் நிறைய படிக்குமாறு கேட்­டுக்­கொண்­டான்.

''இன்­ட்ரஸ்ட்­டிங். நான் அந்த புது டெக்­னா­ல­ஜில வேலை பண்­ண­றேன். அப்­பு­றம், அந்த டெக்­னா­ல­ஜில வர கஷ்­ட­மான பிரச்­னை­களை எனக்­குக் கொடுங்க. அதை நான் ஒரு சவாலா எடுத்து முடிக்­க­றேன். ஆனா ஒரு வேண்­டு­கோள். இந்த காலை­யில ஒன்­பது மணிக்கு வரது, தினம் சும்மா மீட்­டிங்­கில் உட்­கா­ர்­ரது, ரிப்­போர்ட் அனுப்­பற வேலை­யெல்­லாம் எனக்கு கொடுக்­கா­தீங்க. அந்த டெக்­னா­ல­ஜியை உப­யோ­கப்­ப­டுத்­தற வேலை­யும், அதுல வர பிரச்சி­னை­க­ளைத் தீர்க்­கற வேலை­யை­யும் எனக்கு எப்ப வேணும்­னா­லும் கொடுங்க. ராத்­திரி பகல்னு பார்க்­காம முடிச்­சுக் கொடுக்­க­றேன்,'' என்று சொல்­லி­விட்டு ராமின் அறை­யி­லி­ருந்து கிளம்­பி­னான் வணங்­கா­முடி.

வணங்­கா­முடி கிளம்­பிய பிறகு, பாஸ்­கரை அழைத்­தான் ராம். அவர் கேட்­டுக்­கொண்­ட­து­போல், அந்த வணங்­கா­மு­டியை ராத்­திரி பகல் பார்க்­கா­மல் வேலை செய்ய வைக்­கப்­போ­வ­தாக சொன்­ன­தும், பாஸ்­க­ருக்கு திருப்தி.

என்ன? ஒரு சின்ன இக்­கட்டு மட்­டும் இருந்­தது. அந்த வணங்­கா­முடி அவர்­கள் குழுவில் சேரப்­போ­வ­தாக ராம் அறி­வித்­த­போது அனை­வ­ருக்­கும் அதி­ருப்தி. ஆனால் அந்த புது டெக்­னா­லஜி சம்­பந்­த­மான வேலை­யில் வணங்­கா­முடி இருக்­கப்­போ­வ­தா­க­வும், அதில் வரும் சவா­லான பிரச்சி­னை­களை அவன் கையா­ளப்­போ­வ­தா­க­வும் ராம் சொன்­ன­பி­றகு, அந்த தலை­வலி பிடித்த சவா­லான வேலை அவ­ர்களுக்கு வர­வில்லை என்று அவர்­க­ளுக்­கும் திருப்தி!!

மூன்று மாதங்­கள் கடந்­தது. ப்ரொ­ஜெக்ட்­டும் வேக­மா­கச் சென்­றது.

டீம் மீட்­டிங் நடக்­கும்­போது அந்த வணங்­கா­முடி அவ்­வப்­போ­து­தான் வரு­வான். அப்­ப­டியே ஏதா­வது ஒரு முறை வந்­தா­லும், ஏதோ சிந்­த­னை­யில், அந்த புது டெக்­னா­லஜி பற்றி வித­வி­த­மாக பேசு­வான். அவன் பேசு­வ­தை­யும், அனுப்­பும் கோப்­பு­க­ளை­யும் ராம் டீமில் இருக்­கும் மற்­ற­வர்­க­ளுக்கு பகி­ரு­வ­துண்டு. ஆனால் அதை புரி­யும் அள­விற்­கான சக்­தி­யும் திற­மை­யும் அவர்­க­ளி­டம் இல்லை.

அந்த மென்­பொ­ருள் தயா­ரிப்­பின் முக்­கிய கட்­ட­மாக, அதை சோதனை செய்­யும் வேலை தொடங்­கி­யது. அந்த மென்­பொ­ரு­ளில் வரும் பிரச்­சி­னை­களை குழுவில் உள்­ள­வர்­கள் கையாள தத்­த­ளிக்­கும்­போது, ராம் அந்த பிரச்­சினையை வணங்­கா­மு­டியிடம் தள்ளிவிட்டான். அவ­னி­டம் கொடுத்த ஒரு சில மணி நேரங்­களில் பிரச்­சினை தீர்ந்­து­வி­டும். இதில் ராமிற்­கும் திருப்தி, வணங்­கா­மு­டிக்­கும் சந்­தோ­ஷம். ஆனால் பிரச்­சினை வேறு விதத்­தில் வந்­தது. ராமிற்கு அவ­னைக் கையாள வேண்­டிய முறை தெரிந்­தி­ருந்­த­தால், வணங்­கா­மு­டிக்கு எப்­போது வேண்­டு­மா­னா­லும் வேலைக்கு வர­லாம் என்று சலு­கை­கள் கொடுத்­தி­ருந்­தான். வேலையை முடிப்­ப­து­தான் கட்­டா­யம் என்று அவர்­கள் இரு­வ­ருக்­கும் இருந்த ஒப்­பந்­தம். ஆனால் டீமில் இருந்த மற்­ற­வர்­கள், ராம் வணங்­கா­மு­டிக்கு மட்­டும் தனிச் சலுகை கொடுப்­ப­தாக மேல­தி­காரி பாஸ்­க­ரி­டம் தனி­யாக புகார் செய்­தார்­கள்.

ஒரு மாலை, ராம் அறைக்கு வந்த பாஸ்­கர், "ராம், ப்ரொ­ஜெக்ட்ல அந்த வணங்­கா­முடி எப்­படி வேலை பண்­ண­றான்?. சரியா இல்­லாட்டி, வேலையை விட்டு தூக்­கி­ட­லாமா?'' என்று கேட்­டார்.

"அய்­யயோ!! பாஸ்­கர், அவன் தான் முக்­கி­யம். இந்த ப்ரொ­ஜெக்ட்ல வர கஷ்­ட­மான பிரச்­சி­னை­யெல்­லாம் அவ­னைத் தான் தீர்க்­கச் சொல்­லி­யி­ருக்­கேன்'' என்­றான் ராம்.

"அது சரி. ஆனா வேலைனா ஒரு கட்­டுப்­பாடு வேணும். அவன் எப்ப வேணும்­னா­லும் வேலைக்கு வாரான் போறானு சொல்லி கேள்­விப்­பட்­டேன். உங்க குழுவில இருக்­க­ற­வங்­க­ளுக்­கூட அது பிடிக்­கலன்னு நினைக்­கி­றேன்,'' என்று அந்தப் பிரச்­சி­னை­யைப் பற்றி ஆரம்­பித்­தார் பாஸ்­கர்.

"பாஸ்­கர், அவன் ஒரு தனி ரகம். மிச்­ச­வங்க மாதிரி, ஒன்­பது மணிக்கு வந்­துட்டு அஞ்சு மணிக்­குப் போற ரகம் கிடை­யாது. அப்­பு­றம் எல்­லார் மாதி­ரி­யும் மேல இருக்­க­ற­வங்க சொல்­ல­றதைத் தட்­டாம கேட்­கச் சொல்­ல­றது, இதெல்­லாம் முடி­யாது. அவங்­க­ளைக் கொஞ்­சம் வித்­தி­யா­ச­மாத்­தான் கையா­ள­னும்,'' என்று வணங்­கா­மு­டிக்­காக வாதா­டி­னான் ராம்.

"எனக்­குப் புரி­யல ராம். ஒரு சில வேலை மட்­டும்­தான் பண்­ணு­வேன், நான் இப்­ப­டித்­தான் இருப்­பேன்னு சொல்லிக்கிட்டு இருக்­க­ற­வங்க அடுத்­த­வங்­க­ளுக்கு நல்ல எடுத்­துக்­காட்ட இருக்­க­ற­தில்லை. அத­னால குழுவுல பிரச்சினை வரும். உங்­க­ளுக்­குத் தெரி­யா­தது இல்லை! என்­னவோ, நீங்­க­தான் பெரிசா அவனை புக­ழ­றீங்க. அவ­னும் அவன் டிரஸ் பண்­ணற வித­மும் எனக்குப் பிடிக்­கலை. இப்போ கூட அவனை, உங்க அறைக்கு வெளி­யில பார்த்­தேன். மேல­தி­காரி நான் வரேன் சொல்லி, ஒரு 'ஹலோ' கூட சொல்­லலை. மரி­யா­தையே தெரி­யாத பசங்க. அவன் வெறும் சூன்­யம் ராம். வெறும் சூன்­யம்!

"இந்த ப்ரொஜெக்ட் முடிஞ்­ச­தும் அவனை எப்­ப­டி­யாச்­சும் கழட்டி விட்­டு­டு­வோம்,'' என்று பாஸ்­கர் முடித்­த­தில், ராமிற்கு வருத்­தம்.

இந்­தப் பேச்சு நடந்து சில வாரங்­களில், ஒரு நாள் காலை ராமின் அறைக்கு அந்த வணங்­கா­முடி வந்­தான்.

"என்ன, இன்­னிக்கி இவ்­வ­ளவு சீக்­கி­ரம் வேலைக்கு வந்­தி­ருக்க?. ஏதா­வது பிரச்சி­னையா?'' என்று கேட்டான் ராம். இனி­மேல் உங்­க­ளுக்கு எந்­தப் பிரச்­சினை­யும் வராது ராம்,'' என்று ஆரம்­பித்­த­வன், "நான் வேலையை விட­றேன். எனக்கு அம­ரிக்­கா­வில நியூரோ சயின்ஸ்ல டாக்­டர் பட்­டம் பண்­ண­ற­துக்­கான வாய்ப்பு வந்­தி­ருக்கு,'' என்­றான்.

ராமிற்கு அவன் சொன்­ன­தைக் கேட்டு சந்­தோ­ஷம். ஆனால் கூடவே வருத்­த­மா­க­வும் இருந்­தது.

"ப்ரொஜெக்ட் இன்­னும் ஒரு மாசத்­துல முடி­யப்­போ­குது. இப்ப போய் விட­றியே. இந்த ப்ரொ­ஜெக்ட்ல உன்­னோட உழைப்­புக்­கான சன்­மா­னம் கிடைக்­க­ற­துக்­குள்ள விட்­டுட்­டியே," என்று வருத்­தப்­பட்­டான்.

"நீங்க என் திற­மைக்கு மரி­யா­தை­யும், வேலை­யில சலு­கை­யும் கொடுத்­ததைவிட, வேற என்ன சன்­மா­னம் வேணும் ராம்? நீங்க என்ன புரிஞ்­சுக்­கிட்­டிங்க. அதுவே எனக்கு போதும். ஆனா கவ­லைப்­ப­டா­தீங்க. ப்ரொஜெக்ட் லைவ் போற வரைக்­கும் எந்­தப் பிரச்­சி­னை­யும் வராது. அதுக்­கப்­பு­ற­மா­வது, நீங்க என்ன நினை­வுல வெச்­சுக்­கு­வீங்­கன்னு நினைக்­கி­றேன்,'' என்று சற்றே சிரித்­தான்.

சில வாரங்­களில், வணங்­கா­முடி அமெ­ரிக்கா கிளம்­பி­னான். ப்ரொ­ஜெக்ட்­டும் வெற்­றி­க­ர­மாக முடிந்­தது. அந்த ப்ரொஜெக்ட் முடிந்த சில நாட்­களில், பாஸ்­கர் ஒரு நாள் காலையில் அவ­ச­ர­அ­வ­ச­ர­மாக ராமின் அறைக்கு வந்­தார்.

"ராம், அந்த கிள­யன்ட்டுக்கிட்ட இருந்து மெயில் வந்­தி­ருக்கு. அந்த ப்ரோக்­ராம் வட்டி விகி­த­மெல்­லாம் தப்­புத்­தப்பா கணக்­குப்போடு­தாம். இன்­னும் மூணு நாளைக்­குக்­குள்ள இதை சரி பண்­ணாட்டி அவங்­க­ளுக்கு பெரிய பிரச்­சினை ஆகி­டும்னு சொல்லி மெயில் அனுப்பி­யி­ருக்­காங்க. இது எப்­படி நடந்­தது? சோதனை பண்­ணும்­போது எல்­லாம் ஒழுங்­காத்­தானே வேலை பண்­ணிச்சு. உங்க குழுவில இருக்­க­ற­வங்­களை உட­ன­டியா இந்­தப் பிரச்­சி­னையை சரி பண்­ணச் சொல்லு,'' என்று பதற்­ற­மா­கச் சொன்­னார்.

அடுத்த இரண்டு நாட்­க­ளா­கி­யும் ராமும் அவனுடைய குழுவில் இருந்­த­வர்­களும் என்­னெ­வெல்­லாமோ செய்து பார்த்­தார்­கள். அந்­தப் பிரச்­சினை தீர­வில்லை. முன்­றா­வது நாள் காலை, பாஸ்­கர் மிக­வும் பதற்­றத்­து­டன் காணப்­பட்­டார்.

"ராம், இன்­னிக்கி அந்­தப் பிரச்­சினை தீராட்டி, அவங்க நம்ம மேல பெனால்டி போட்­டு­டு­வாங்க. ஏதா­வது பண்ணு ராம். ப்ளீஸ்…'' என்­றார். ராமிற்கு மட்­டும் வணங்­கா­முடி­யின் நினைப்பு வந்­தது. 'சே!! அவன் மட்­டும் இருந்­தி­ருந்தா...' என்று அவன் நினைத்­துக் கொண்­டி­ருக்­கும்­போது ஒரு ஈமெ­யில் வந்­தது. 'ஹை ராம். எப்­படி இருக்­கீங்க? யாரும் என்ன நினைச்சு பாத்­தி­ருக்­க­மாட்­டாங்­கனு தெரி­யும். ஆனா, உங்­க­ளுக்­குக் கூடவா என் நினைப்பு வரலை? நான் தான் சொன்னே, ப்ரொஜெக்ட் லைவ் போகிற வரைக்­கும் பிரச்­சினை வரா­துன்னு...." என்று ஆரம்­பித்­த­வன், அந்த மெயி­லின் அடி­யில் ஏதோ நாலு வரி­கள் எழு­தி­யி­ருந்­தான். அதைப் படித்த ராமிற்கு தூக்­கி­வா­ரிப்­போட்­டது. அந்த வரி­கள், அந்த வட்டி விகித மென்பொருள் ப்ரோக்­ரா­மின் முக்­கி­ய­மான நான்கு வரி­கள்.

ராம் உட­ன­டி­யாக வணங்­கா­முடி கொடுத்த நான்கு வரி­களை அவனுடைய குழுவினரிடம் கொடுத்­தான். அதை வைத்து அவர்­கள் அந்த பிரச்­சி­னை­யைத் தீர்த்­தார்­கள்.

"யு ஆர் எ ஜீனி­யஸ் ராம். கிரேட். இப்­ப­டிப்­பட்ட குழுவும் ஆட்­களும்தான் நம்ம கம்­பெ­னிக்கு வேணும்,'' என்று பாஸ்­கர் அவ­னைக் கட்­டித் தழு­வி­னார்.

ராம் தன் அறைக்கு வந்து, வணங்­கா­மு­டி­யின் மெயி­லுக்­குப் பதில் அளித்­தான்.

''அப்போ, நீ தான்….??'' என்று ராம் கேட்­ட­தற்கு, ஒரு சிரிக்­கும் எமோஜி படம் மட்­டும் அவ­னி­ட­ம் இருந்து பதி­லாக வந்­தது.

சற்று நேர யோச­னைக்­குப்­பி­றகு ராம், வணங்­கா­மு­டிக்­குப் பதி­ல­ளித்­தான். 'சூன்­யத்­தோட மதிப்­புக்­கூட அது இருக்­கற இடத்­தைப் பொறுத்­தது. உன்னை மாதி­ரி­யான வணங்கா­மு­டி­கள் இந்த கம்­பெ­னிக்­குத் தேவை­யில்லை. யு ஆர் எ ஜீனி­யஸ். ஆல் தி பெஸ்ட்'.

முற்றும்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!