மனச்சோர்வு

குட்டிக்கதை

இரா சத்திக்கண்ணன்

அன்று ஞாயிற்­றுக்­கி­ழமை. சூரி­யன் சற்று சுணக்கமாக வெளியே வந்­தான். மெல்ல மெல்ல விடி­கிறது. நில­வும் இன்­னும் ஆகா­யத்­தில் இருக்­கிறது. லிட்­டில் இந்­தி­யா­வின் டன்­லப் தெரு ஆள்­ந­ட­மாட்­ட­மின்றி எந்­த­விதப் பர­ப­ரப்­பு­மின்றி அமை­தி­யாக உள்­ளது. அவ்­வ­ளவு கார்­களும் இல்லை. திரு­வா­ரூர் தேரை இழுத்­துச்­செல்­லும் அள­விற்கு வெறிச்­சோ­டிக் கிடக்­கிறது டன்­லப் தெரு. வார­நாட்­களில் கூட்­டம் நிரம்­பி­வ­ழி­யும் பல­ச­ரக்கு மற்­றும் காய்­கறி கடை இன்­னும் திறக்­க­வில்லை.

அதி­கா­லை­மு­தலே காய்­கறி வந்­தி­றங்­கும் மினி­வேன்­க­ளு­மில்லை. மஞ்­சள் சாயம் சுமந்த கத­வும் ஜன்­னல்­களும் அடைக்­கப்­பட்­டி­ருந்­தன. மஞ்­சள் பல­ச­ரக்குக் கடை என்றே சொல்­ல­லாம். கடைக்­கு­முன்­னர் சில காய்ந்த இலை­கள் கிடக்­கின்­றன.வெள்ளை அரைக்கை சட்­டை­யும் கட்­டம்­போட்ட சிங்­கப்­பூர் சில்க் லுங்­கி­யும் அணிந்­த­படி பாரதி மஞ்­சள் கடை­யின் நடை­மே­டை­யில் அமர்ந்­தி­ருந்­தார்.

அவருடைய கண்­கள் உறக்­க­மின்றி சிவந்­தி­ருந்­தன. கைகளைக் கட்டிக்கொண்டு அங்­கு­மிங்­கும் பார்த்­த­படி இருக்­கி­றார். ஆகாயத்தை அண்­ணாந்து பார்த்தவாறு விரல்­களை ஆட்டி காற்­றில் ஏதோ வரை­கி­றார். அவர் நிச்­ச­யம் சாமி­யா­ரில்லை. கைய­டக்­கத் தொலை­பே­சியை அவ்­வப்­போது காண்­கி­றார். ஏதா­வது செய்தி வந்­த­தா­வென தட­வித் தட­விப்­பார்க்­கி­றார். சென்­ற­வா­ரம் சூயஸ் கால்­வா­யில் நிகழ்ந்த சரக்­குக்­கப்­பல் அடைப்­பையோ, அத­னால் உலக வர்த்­த­கம் நிலைகுத்தியதையோ அல்­லது தமி­ழ­கத்­தின் ஐந்துமுனைப் போட்டி சட்­ட­மன்றத் தேர்­தல் பற்­றியோ அல்­லது உலக நாடு­களின் கொரோனா தடுப்­பூசி நடவடிக்கைகள் பற்­றியோ அவர் சிந்­திப்­ப­தாய் தெரி­ய­வில்லை. அவர் மனச்­சோர்­வில் கட்­டுண்டு கிடப்பதைப்போல்தான் அவரின் நடவடிக்கை இருந்தது.

லிட்­டில் இந்­தி­யா­வில் ஓர் உணவகத்தில் அதி­காலை ஏழு மணிக்கு காப்பி குடிப்­ப­தற்­காக சென்­றி­ருந்த எனக்கு பார­தியை நன்கு தெரி­யும். அவன் ஒரு­முறை என் வீட்டு தண்­ணீர்க் குழாய் உடைந்­த­போது சரி­செய்ய வந்­தி­ருந்­தார். அப்­போ­து­மு­தல் பழக்­கம்.

பார­தி­யின் அருகே சென்­றேன். "எப்­படி இருக்­கீங்க" என்­றார். "நல்லா இருக்­கேன். ஆமா, நீங்க எப்­படி இருக்கீங்க?" என்­றேன். "நல்லா இருக்­கேன்.., ஆனா..." என்று இழுத்­தார்.

"என்ன பாரதி, சொல்லுங்க," என்­றேன்.

"அது ஒன்­னும் இல்ல... ஊர்ல அம்­மாவை ஆஸ்­பத்­தி­ரி­யில சேர்த்­தி­ருக்­காங்க, அதான் யோசிக்­கி­றேன்," என்­றார். "இத்­தனை வரு­ஷமா நானும் என் மனை­வி­யும், என் குழந்­தை­களும் அம்­மாவை பார்த்­துக்­கிட்­டு­ருந்­தோம். கூழோ கஞ்­சியோ சேர்ந்து குடிச்­சோம். என்னை நல்லா வளர்த்­தாங்க. என்­னை­யும் என் பிள்­ளை­க­ளை­யும் அன்­பை­யும் அறத்­தை­யும் ஊட்டி வளர்த்­தாங்க. எப்­போ­தும் நற்­பண்­பு­க­ளோடு உல­கம் மெச்ச வாழ­வேண்­டும்," என்று சொல்லி முன்­மா­தி­ரி­யாக வாழ்ந்­தார்­கள். இப்ப ஆஸ்­பத்­தி­ரி­யில் சீரி­ய­ஸாக இருக்­காங்க. இன்­னும் ஒரு நாளோ அல்­லது இரண்டு நாளோ­தான் இருப்­பாங்­கன்னு டாக்­டர் சொல்­லிட்­டாங்க. என்னை பார்க்­க­ணும்னு புலம்­பி­க்கிட்டே இருக்­காங்­க­ளாம். இப்ப இருக்­குற கொரோனா சூழ்­நி­லை­யிலே போவ­மு­டி­யலை. அதான் அம்­மா­வைப் பார்க்க வீடியோ காலுக்கு வெய்ட் பண்­ணிட்­டு­ருக்­கேன்," என்­றார் பாரதி!

அப்­போ­து­தான் எனக்கு உரைத்­தது அவ­ருக்கு மனச்­சோர்வு இல்லை! அவர் உயர்ந்த மனி­தன் என்று.

என்னால் எட்ட முடியாத உயரத்தில் பாரதி உயர்ந்து நிற்­கி­றார்.

அம்­மாவை முதி­யோர் இல்­லத்­தில் விட்டுவிட்ட நான் கீழே கீழே தாழ்ந்து போய்க்­கொண்­டி­ருக்­கி­றேன். உண்­மை­யில் எனக்­குத்­தான் அதிக மனச்­சோர்வு இருக்­க­வேண்­டும்!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!