மு.செ.பிரகாஷ்
முப்பதோ, நாற்பதோ
வயதி௫க்கலாம்
திரைகடலோடி திரவியம்
தேடிக்கொண்டி௫க்கலாம்
துரியன் பழத்தினை
அதீதவாசனை தாண்டி
௫சித்தி௫க்கலாம்
தூரதேசத்து
இலையுதிர்காலச் ச௫குகள்
மென்மஞ்சள் ஒளிகூட்டும்
பின்புலத்தில்
புகைப்படத்திற்கு
குடும்பமாக
புன்னகைத்தி௫க்கலாம்
ஆப்பிள் மரம் பார்த்து
பழம் பறித்து
குழந்தைகளுடன்
குதூகலித்தி௫க்கலாம்
இ௫க்கட்டும்.
மரம் என்ற
தமிழ்ச் சொல்
உன் தளிர்களுக்குத் தெரியுமா?

