கருமேகங்கள்

கருமேகங்கள்

3 mins read

இரா சத்திக்கண்ணன்

அன்று வெள்­ளிக்­கி­ழமை. மழை கொட்­டித்­தீர்க்­கிறது. குளிர் எங்­கும் பர­வு­கிறது. வெகு­நாட்­க­ளுக்குப் பிறகு அப்­ப­டி­யொரு குளிர்­மழை. நிச்­ச­யம் வான­வில் வரும். நடுத்­தெ­ரு­வில் அழ­கிய உயிர் நீரோடை அமை­தி­யாய் ஓடத் தொடங்­கு­கிறது.

சில மஞ்­சள் நிறப்­பூக்­களும், இலை­களும் நீரோ­டை­யில் மிதந்து செல்­கின்­றன. எந்­தக்­ கு­ழந்­தையோ செய்து நீரோ­டை­யில் விட்ட காகி­தக்­கப்­பல் அற்­பு­த­மாய் இருக்­கிறது. நீரோடை அதீ­தக் கன­வு­க­ளோடு நகர்­கிறது.

தெரு­மு­னை­யில் இருக்­கும் டெலி­போன் பூத்­தில் அதிக கூட்­ட­மில்லை மழை­யால். மாற்­றுத் திறன் தொழி­லா­ளி­யான முரு­கன் அமர்ந்­தி­ருந்­தார் மழையை விரித்­துப்­பார்த்­த­படி. தின­சரி ஒரு நூறு ரூபாய் வரு­மா­னம் கிடைக்­கும். அவ­ரின் புன்­னகை விலை­ம­திப்­பற்­றது. அவ­ரின் சிவப்­பு­நிற டிஷர்ட் கண்­ணைப் பறிக்­கிறது.

சிவப்­பு­நிற டிஷர்ட்டை அவ­ருக்குக் கொடுத்த அந்த எழு­பத்­தைந்து வயது நிறைந்த அம்­மா­ளுப் பாட்டி தளர்ந்த நடை­யு­டன், கையில் குடை­யோடு டெலி­போன் பூத்­துக்கு வந்­தார்.

அம்­மா­ளுப்­ பாட்­டியை கண்­ட­வு­டன் முரு­க­னுக்கு அப்­ப­டி­யொரு மகிழ்ச்சி. பாட்டி தான் செய்த ஒரு மைசூர் பாக்கை முரு­க­னுக்கு கொடுத்­தார். 'என்ன பாட்டி?' எப்­படி இருக்­கீங்க! என வின­வி­னார்.

பாட்டி சிரித்த முகத்­தோடு நல்லா இருக்­கேன். 'நீங்க எப்­படி இருக்­கீங்க? என்று பாட்­டி­யும் முரு­க­னி­டம் கேட்­டார். ஆயி­னும் அம்­மா­ளுப்­ பாட்­டி­யின் முகத்­தில் எப்­போ­து­மி­ருக்­கும் மகிழ்ச்­சி­யில்லை என்­பதை நன்கு உணர்ந்­தார் முரு­கன்.

'யாரு­கிட்ட பேச­ணும் பாட்டி? நம்­ப­ரைக்­கொ­டுங்க! என்­றார் முரு­கன். பாட்டி நம்­ப­ரைக் கொடுத்­தார்.

முரு­கன் நம்­ப­ரைச் சுழற்­றத் தொடங்­கி­னார். 'கீரிங் கீரிங்' என்ற பழைய மணி­யொ­லி­யைக் கேட்­ட­படி பாட்­டி­யின் கண்­களில் ஏக்­கம்.

'யாரு யாரு' என்று பாட்­டி­யின் குரல் மறு­மு­னை­யில். 'நான்­தான் அம்மா பேச­றேன்!' என்­கி­றார் அம்­மா­ளுப்­ பாட்டி.

சொன்­ன­து­தான் தாம­தம். "ஏம்மா நடு­ராத்­தி­ரில கூப்­பி­டற. அமெ­ரிக்­கால இப்போ ராத்­திரி இரண்டு மணி. அப்­ப­டி­யென்ன அவ­ச­ரம்? அதான் வாரா­வா­ரம் ஞாயிற்­றுக்கிழ­மைகள்ல தான் உன்­னோட பேச­றேனே," எனப் பொரிந்து தள்­ளி­னார் அம்­மா­ளுப்­பாட்­டி­யின் செல்ல மகன் கணேஷ்.

அம்­மா­ளுப்­ பாட்டி ஒன்­றும் சொல்­லா­மல் டெலி­போனை கட் செய்து முரு­க­னைப்­பார்த்து புன்­ன­கைத்­தார் கண்­ணீர் குளத்தை மறைத்­த­படி.

முரு­கன் 'என்­னமா ஆச்சு? ஒண்­ணுமே பேச­லையே!' என்­றார். அம்­மா­ளுப்­ பாட்டி ஒன்­றும் சொல்­லா­மல் டெலி­போன் பூத்­தை­விட்­டுக் கிளம்­பி­னார்.

மழை மெல்ல விரிக்­கிறது. அம்­மா­ளுப்­பாட்­டி­யின் கண்­க­ளுக்கு வான­வில் தெரி­ய­வில்லை.

மெல்ல மெல்ல நடந்து தன் வீட்டை அடைந்­தார் அம்­மா­ளுப்­பாட்டி. கண­வனை இழந்த பின்பு தனி­யாக வாழ்­கி­றார் அம்­மா­ளுப்­பாட்டி.

மெல்ல நகர்­கிறது பகல். அம்­மா­ளுப்­ பாட்டி இரவு உணவு உண்­ணா­மல் வெறும் தண்­ணீ­ரைக்­குடித்து­விட்டு உறங்­கச் சென்­றார்.

இன்று ஞாயிற்­று­கி­ழமை. காலை எட்­டு­ம­ணி­யி­ருக்­கும். 'கிரீங் கிரீங்' என்று டெலி­போன் பூத் போனில் சத்­தம்.

'சார், நான் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து கணேஷ் பேச­றேன்! அம்­மா­ளுப்­ பாட்­டி­யைக் கூப்­பி­ட­மு­டி­யுமா!

என்ற குரல்

முரு­கன் தன்­னைச் சுதா­க­ரித்­துக்­கொண்டு, ஏன் சார் இப்­படி பண்­ணி­டீங்க? உங்க அம்மா அம்­மா­ளுப்­பாட்டி உங்­க­ளோடு பேச வந்­தார் வெள்­ளிக்­கி­ழமை. நீங்க என்ன சொன்­னீங்க சார்? மனசு சரி­யில்­லாம வீட்­டுக்­குப் போன­வங்க, அப்­ப­டியே மொத்­தமா தூங்­கிட்­டாங்க!

நாங்க அவங்­களை பத்­தி­ரமா கட­வு­ளோடு சேர்த்­து­விட்­டோம். கவ­லைப்­ப­டா­தீங்க, உங்க வீட்­டுச் சாவி பத்­தி­ரமா இருக்கு. அட்­ரஸ் சொல்­லுங்க. கொரி­யர்ல அனுப்­பி­ட­றேன். மொத்த மழை­யும் விரித்­தது. கணேஷ் மன­சில் அடர்ந்த கரு­மேகங்­கள் சூழ்ந்­தன.