சாலையோரத்தில்...

சாலையோரத்தில்...

5 mins read
30f27afe-6d38-418e-8f0a-9851a5790aef
சிறுகதை சித. அரு­ணா­ச­லம் -

துதிப்­போர்க்கு வல்­வினை போக்­கும் என்னும் வழிபாட்டுப் பாடல் ஒலித்­துக்­கொண்­டி­ருக்க கண்­களை விழித்­தார் நாரா­ய­ணன். இந்த வய­தி­லும் வெள்­ளன எழுந்து, வேலை­களை மேற்­கொள்­வது மனைவி முத்­து­லட்­சு­மி­யின் வழக்­கம்.

அதி­காலைப் பொழு­தில் முருகன் பாடலும் சாம்­பி­ராணி வாச­னை­யும் தன் மனை­விக்கு இணை­யான பொறுப்புணர்வை நாரா­ய­ண­னுக்கு நினை­வூட்­டி­யது.

துரித கதி­யில் எழுந்­த­வர் படுக்­கையைச் சரி செய்­தார். இது அவ­ரது வாடிக்­கை­யான வேலை­களில் முத­லி­டம் பெற்­றது. அப்­போது அவ­ருக்கு முன்னே எழுந்துவிட்ட பேத்தி அகல்யா நாச்­சம்மை ஓடி­வந்து காலை கட்­டிக்­கொண்­டாள்.

பேத்­தி­யின் முகத்­தில் விழித்­தது பெரும் மகிழ்ச்­சியை கொடுத்­தது அவ­ருக்கு. ஐயா, குட்­மார்­னிங் என்­றாள். ஐந்து வயது இருக்­கும் அகல்­யா­வுக்கு. குல­தெய்­வத்­தின் பெயர் கட்­டா­யம் இருக்க வேண்­டும் என்று சொன்­ன­தால் சேர்ந்­ததுதான் அகல்­யா­வுக்கு பின் வந்த நாச்­சம்மை. வட்­டார வழக்­கில் அப்பாவின் அப்பாவை ஐயா என்று அழைப்பார்கள். பேத்தி தன்னை ஐயா என்று அழைப்பது அவ­ருக்கு மிக பிடித்­த­மா­ன­தாக இருந்­தது. அது­வும் அந்த மழலை உதிர்க்­கை­யில் திரு­வள்­ளு­வர் ஒரு தீர்க்­க­

த­ரிசி என்று உணர்­வார்.

என்ன பாப்பா என்­றார்.

வாங்­கய்யா விளை­யா­ட­லாம் என்­றாள்.

விளை­யா­டு­ற­துக்­கெல்­லாம் இது நேரம் இல்­லையே பாப்பா. வேண்ணா ஒன்னு செய்­ய­லாம், பல்லு விளக்கி எல்­லாம் முடிச்ச பிறகு ஐயா வாக்­கிங் போவ­னாம், அப்ப பாப்பா கூட வரு­மாம் என்­றார். வெளில போற­துன்னு சொன்­ன­தும் அகல்­யா­வின் முகம் முழுநிலவாய் மிளிர்ந்தது. ஓட்­ட­மும் நடை­யு­மாக வெளியே கிளம்ப தயா­ரா­னாள்.

அவர் தயா­ராகி வரு­வ­தற்­குள் தனது கால­ணி­க­ளு­டன் காத்­தி­ருந்­தாள் அகல்யா. நேர­மா­கு­துய்யா வாங்க, என்ற அவ­ச­ரம் அவ­ளது ஆர்­வத்­தின் வெளிப்­பா­டாய் வந்­தது.

வீட்டை விட்டு எங்கு போனா­லும் கையில் காசு இல்­லா­மல் கிளம்பமாட்­டார் நாரா­ய­ணன். கைத்­தொ­லை­பேசி, பணம், சாவி இவற்றுடன் மூக்கு கண்­ணா­டி­யை­யும் மறக்­கா­மல் எடுத்­துக்­கொண்­டார்.

வாக்­கிங் போற­துக்கு எதுக்­குய்யா கண்­ணாடி என்று பேத்தி கேட்க, எதை­யா­வது பாக்­க­ணும்னு வச்­சுக்க அப்ப தடு­மாறி போயி­ரு­வேன் என்று தான் பட்ட சிர­மங்­க­ளின் ஞாப­க­மாக பதில் சொன்­னார். முடிஞ்ச வரைக்­கும் அடுத்­த­வர்களைத் தொந்­த­ரவு பண்­ணு­வதை தவிர்க்க நினைப்­பார். அதற்­காக பல­முறை யோசித்து செயல்­படு­வது அவ­ரது வழக்­கம்.

ஐயா கையைப் பிடித்துக் கொண்டு அப்­பத்­தா­வி­டம் (அப்பாவின் அம்மா) சொல்­லி­விட்டு கிளம்­பி­னாள். வெளிய வந்­த­துமே, கதை சொல்­லுங்­கய்யா என்­றாள்.

என்ன பாப்பா, கதை கேக்­குற? தூங்­கு­றப்பதானே கதை கேப்ப, இப்ப என்ன என்­றார். அகல்­யா­வுக்கு கதை சொல்­வ­தற்­கா­கவே பல சம்­ப­வங்­க­ளை­யும், கதை­க­ளை­யும் தேடித்தேடி படிக்க ஆரம்­பித்­தி­ருந்­தார். இப்ப என்ன சொல்­ற­துன்னு அவர் யோசித்­தற்­காகத் தான் இப்­படி கேட்­டார். கதை கேக்­கு­ற­துக்­குன்னு நேரம் இருக்கா? எப்ப வேண்­ணா­லும் கேக்­க­லாம்ல, சொல்­லுங்­கய்யா என கேட்­டாள். இந்த வய­சுல இப்­ப­டி­யெல்­லாம் கேள்வி கேட்­குற அகல்­யாவை பத்தி பெரு­மையா இருந்­தா­லும், அதை வெளிய காமிச்­சுக்­காம, கதை சொல்­லும்போது வேற வேலை எது­வும் பாக்கக் கூடாது என்று சொல்லி சமா­ளித்­தார். போர­டிக்­கு­மேயா, என்­றாள். நம்ம பேசிட்டே போக­லாம் பாப்பா என்­றார். பேச ஆரம்­பித்­தால், கேள்­வியை கேப்­பாளே, அது­வும் சிக்­க­லாச்சே என்று வேற யோசித்­தார்.

அப்ப சரி பேசிட்டே போக­லாம் என்று சமா­தா­னம் அடைந்­தாள். அடுத்த நிமி­டமே கேள்­வி­கள் வந்து விழுந்­தன. அந்த சம­யம் அவர்­கள் 'தோ பாயோ' பேருந்து நிலை­யம் அரு­கில் இருந்­தார்­கள். இந்த பஸ்­ஸெல்­லாம் யாரு செய்வா? எங்க வாங்­கு­வாங்க என்று முதல் கேள்வி வந்­தது. தமிழ்ல அதுக்கு பேரு, பேருந்து என்­றார்.

இப்­படி ஒவ்­வொரு முறை­யும் பேத்தி சொல்­கிற வார்த்­தை­களை தமிழ்ப்படுத்தி விளக்­கு­வது அவ­ரது வாடிக்கை. இந்த சம­யத்­துல சொன்னா கப்­புன்னு புடிச்­சுக்­கு­வாங்­கு­றது அவ­ரது நினைப்பு. வீட்­டுல எல்­லா­ரும் கிண்­டல் பண்­ணி­னா­லும் விடா­மல் சொல்­லிக்­கொண்­டி­ருப்­பார். இவர் சொல்­ற­துக்­காக அடுத்த தடவை பேருந்­துன்னு சொல்­லு­வான்னு அவர் எதிர்­பார்க்­கலை. மாறாக அந்த வார்த்தை தெரிந்­தி­ருக்க வேண்­டும் என்று விரும்­பி­னார்.

திரும்­ப­வும் கேட்­டாள், ஐயா எங்க செய்­வாங்க? என்­றாள்.

அதுவா, வெளிநாடு­கள்ல, இத்­தாலி, ஜெர்­மனி இங்­க­யெல்­லாம் செஞ்சு சிங்­கப்­பூ­ருக்கு அனுப்­பு­வாங்க என்­றார். இங்க அந்த வசதி கிடை­யாது என்­றார்.

ஆச்­ச­ரி­யத்­து­டன் கேட்ட அவள் எதுல வரும் என்­றாள்.

கப்­பல்லதான் வரும் பாப்பா.

'கப்­பல்'னா?

ஷிப்.

பெரிய ஷிப் இருக்­காய்யா?

இருக்கு பாப்பா. பத்து பதி­னஞ்சு ஏரோ­பி­ளேன் வைக்­கிற அள­வுக்கு எல்­லாம் கப்­பல் இருக்கு.

சரியா, நம்ம ஊர்ல எல்­லாம் 'பஸ்'­ல டிரை­வரை தவிர இன்­னொ­ருத்­தர் இருப்­பாரே டிக்­கெட் கொடுக்க, விசில் ஊத. இங்க மட்­டும் 'பஸ்'­ல டிரை­வர் மட்­டும் தான் இருக்­காரு. டிக்­கட் யாரு குடுப்பா. யாரு விசில் ஊதுவா? என்­றாள். இதுல நிறைய விஷ­யம் இருக்­குப்பா. இங்க எல்­லாம் மிஷின் இருக்கு. ஊர்ல எல்­லாம் அந்த அளவு வசதி இல்லை. ரெண்டு பேர் இருந்தா இன்­னும் கொஞ்ச பேர வேலைக்கு வைக்­க­லாம் அப்­ப­டின்­னார். இப்­ப­டி­யாக கேள்­வி­கள் வந்து விழுந்துகொண்டே இருந்­தன.

கொஞ்ச தூரம் வந்­த­தும், ஐயா அங்க பாருங்­கய்யா என்­றாள்.

என்ன பாப்பா?

அங்க பாருங்க பெரிய குச்­சியை ரோட்­டுல நட்டு வச்­சு­ருக்­காங்க என்­றாள்.

பெரிய குச்­சியா எது பாப்பா?

அங்க பாருங்­கய்யா, கண்­ணா­டியைப் போட்­டுக்கிட்டு பாருங்க என்­றாள்.

அவள் காண்­பித்த இடத்­தில், இரண்டு மரங்­கள் மொத்­த­மாக வெட்­டப்­பட்டு இருந்­தன. எந்த அளவு என்­றால், மொட்டை அடிக்­கப்­பட்ட தலை போல் சுத்­தமா இருந்­தது. அதுவா பாப்பா, அது குச்சி இல்ல, மரம் என்­றார்.

மரமா, காமெடி பண்­ணா­தீங்­கய்யா அப்­ப­டின்னு பதில் வந்­தது. வடி­வேலு படம் ரொம்ப பாப்பா போல,

'மரம்'னா இலை­யெல்­லாம் இருக்­குமே, 'பிரான்ச்' இருக்­குமே என்­றாள்.

அதை வெட்­டிட்­டாங்­கப்பா, அதான் இப்­படி மொட்­டையா இருக்கு என்­றார்.

வெட்­டிட்­டாங்­களா? அப்ப எதுக்கு மரம் வளக்­கு­றாங்க என்­றாள்?

அது, பிரான்ச் எல்­லாம் ரோட்­டுக்கு வந்தா போற வர வண்­டிக்­கெல்­லாம் இடைஞ்­சலா இருக்­கும். அத­னால வெட்­டிட்­டாங்க என்­றார்.

நீங்க கத சொல்­லும்போது, அந்­தக் காலத்­துல அர­ச­ரெல்­லாம் ரோட்­டுல மரம் வளத்­தாங்­கன்னு சொல்­லு­வீங்க, இப்ப அந்த அர­ச­ரெல்­லாம் இல்­லையா? இப்ப இருக்க அர­ச­ருக்கு மரம் புடிக்­காதா? இது அறி­வார்ந்த கேள்­வி­யாக வந்­தது.

இன்­றைய காலத்­தின் அவ­சி­யத்­தை­யும், மக்­க­ளின் தேவை­யை­யும் அவ­ளுக்குப் புரிய வைக்க முடி­யாது என்­பது அவ­ருக்கு நன்கு தெரி­யும்.

இருந்­தா­லும் அவளைச் சமா­தா­னப்படுத்­து­கிற அள­வுக்கு பதில் சொல்ல வேண்­டுமே?

இப்ப இருக்­கு­ற­தெல்­லாம் அர­ச­ரில்லை, அர­சாங்­கம். அதா­வது கவர்ன்­மெண்ட். அவங்க போக்கு­வரத்­துக்கு, அதா­வது 'டிரா­பிக்'­குக்கு இடைஞ்­சலா இருக்­கதை எல்­லாம் அகற்­று­வாங்க, அத­னால தானே மரத்த வெட்­டி­யி­ருக்­குக்­காங்க என்­றார். அரு­கிலே குடி­யி­ருக்­கு­ற­வங்க புகார் பண்ணி இருந்தா அத­னா­ல­யும் வெட்­டு­வாங்க என்­றார்.

சரி, பிரான்ச் வெட்­டு­றது இருக்­கட்­டும். இலைய எதுக்கு வெட்­டு­றாங்க என்­றாள்.

அதுக்கு பேரு கிளை. கிளை எல்­லாம் வெட்­டும்போது இலை­யும் போயி­ரும்ல, அதான் என்­றார்.

வெட்­டு­றப்ப மரத்­துக்கு வலிக்­கா­தாய்யா, அது அழுதி­ருக்­கும்ல என்­றாள். அந்த கேள்­வி­யில் ஆயிரம் வலி இருந்­தது.

இதுக்குப் பதில் சொல்ல முடி­யா­மல் சாலையோர மரத்தைப்போல திகைத்து நின்­றார் நாரா­ய­ணன்.