நாணயம்

"காலை­யி­லேர்ந்து 22 வெள்­ளிக்கு மலே­சியா ஓடு­ன­து­தான்... பிறகு யாவா­ரம் ஒண்­ணும் இல்ல.. நிஜாம்.."

ஜூரோங் எம்­ஆர்டி ரயில் ­நிலை­யத்­தில் க்ரீச் என சத்­தத்­தோடு ரயில் நின்­றது. கண்­ணா­டிக்­ கூண்டுக்­குள் உள்­பக்­க­மாக நின்று­ கொண்டு ஈரத்­து­ணி­யால் துடைத்­த­தில் தோள் இரண்­டிலும் அப்­பாஸுக்கு வலி. கவுண்­டர் திறந்­த­தும் நாகூர் தர்கா உண்­டி­ய­லில் வழ­மை­யாய் போடும் காணிக்கை இரண்டு வெள்ளி. பின்பு யாசீன் சூரா. இரு­ பக்­க­வாட்­டில் கேஷ் மெஷின்­க­ளுக்கு நடுவே இருக்­கும் செவ்­வக ஊதா நிறப்­பெட்­டி­யில் மலே­சிய வெள்ளி, அமெ­ரிக்க பச்சை, இந்­தோ­னீ­சியா நிக்­காஹ், பிரிட்­டிஷ் வெள்ளை என நாண­யம் வாரி­யாக பிரிக்­கப்­பட்டு ரப்­பர்­பாண்­டில் இறுக்கி கட்­டப்­பட்­டி­ருந்­தது.

கவுண்­டர் திறந்ததும் வங்­கி­களை தொலைபேசியில் அழைத்து நாணய விலை­யைக் குறித்­துக்­கொண்டு, ஆர்­கேட் பிளா­சா­வில் மொத்த விற்பனையாளர்களி­டம் விலை­கேட்­பது, இரண்­டை­யும் ஒப்பீடு செய்து, லாபத்­தோடு விலை­நிர்­ண­யம் செய்து போர்­டில் பதிவு செய்­வது போன்­றவை அப்­பா­ஸின் தின­சரி அலு­வல்­கள்.

சம்­ப­ள­ப் பட்­டு­வாடா நாட்­களில் வியா­பா­ரம் சூடு­பி­டிக்­கும். சுற்­று­வட்­டார மணி­சேஞ்­சர்­களில் விலையை தாளில் ­கு­றித்­துக்­கொண்டு விலை­ப­டிய பேரம் பேசும் சீன அங்­கிள்­கள், சுற்றுப் பயணிகள், வார இறு­தி­யில் ஜோகூர் போய் ­ம­ளிகை, இறைச்சி வாங்க காத்­தி­ருப்போர், நேரத்­தோடு ஜோகூர் திரும்பி குடும்­பத்­தோடு சம்­ப­ள­நாளை கொண்­டாட காத்­தி­ருக்­கும் மலே­சிய தொழி­லா­ளர்­கள் என வரிசை நீண்டு தரைத்­த­ளம் கோப்­பித்­தியாம் வரை முட்­டி­நிற்­கும்.

அதெல்­லாம் ஒரு­கா­லம். எல்­லா­வற்­றி­லும் கொரோனா மண்­ண அள்­ளி­போட்­டு ­விட்­டது. விமா­ன­ப் போக்­கு­வ­ரத்து - ஜோகூர் எல்லை மூடல் என நாணய வியா­பா­ரம் முடங்­கிக் கிடக்­கிறது. கோலோச்­சிய முத­லா­ளி­கள் எல்­லாம் வேறு தொழில் தொடங்­க­லாமா என யோச­னை­யில் மூழ்­கிக் ­கி­டக்­கி­றார்­கள்.

"மலே­சிய டிடி மாத்­து­ன­துல மஜீத் கடை பற்று 7,000 வெள்ளி ரொம்­ப­நாள் பென்­டிங்கா கிடக்­குதே," என்றான் நிஜாம்.

நிஜா­மிற்­கும் அப்­பா­ஸிற்­கும் பெரி­தாக வயது வித்­தி­யா­சமோ இல்லை. அப்­பா­ஸிற்கு ஒரு­கா­லத்­தில் சென்னையின் பர்மா பஜார் வியா­பா­ரம், குருவி- டிவி, என வியா­பா­ரம் பெரி­தாய் வளர்ந்­த­போது இங்கே அறி­மு­கம் ஆனது.

தக்­க­ச­ம­யத்­தில் சரக்­கு­களை இறக்கி பஜா­ரில் சேட்­டி­டம் கைமாற்றி­ விட்டு கொள்ளை லாபம்­பார்த்­துக்­கொண்­டி­ருந்­தான். சேட்­டிற்கு பிரச்சினை இல்­லா­மல் சரக்கு கிடைத்­தது. அவ­ரும் இவனை வைத்­து­க் கல்லாகட்­டி­னார்.

கிடைத்த வாய்ப்­பு­களில் எல்­லாம் வட்­டிக்குப் பணம் வாங்­கு­வ­தும், சரக்கு வாங்கி ஊருக்­கு ­இ­றக்­கு­வ­து­மாய் இருந்­தான். ஏதோ ஒரு பொல்­லா­நாள். மேல் ­அ­தி­காரி இன்ஸ்­பெக்­ஷன் வர, கஸ்­டம்ஸ் கெடு­பி­டி­யில் ஒரேநாளில் பதி­னைந்து குரு­வி­க­ளோடு சரக்­கு­கள் மாட்­டிக்­கொண்­டது. சரக்கு என்­றால் ஒவ்­வொரு குருவி தலை­யி­லும் இரண்­டரை லட்­சம் மதிப்­புள்ள சரக்கு. அப்­பாஸ் வாழ்க்­கையே மாறிப்­போ­னது.

அன்று அணைந்த சேட்­டின் செல்­போன்தான். இன்­று­வரை அவ­ரி­டம் பேச­மு­டி­ய­வில்லை. மாஸ்­கான்­ சா­வடி வீட்­டிற்­கும் எத்­த­னையோ முறை நடந்­தும் செருப்­பு ­தேய்ந்­ததும்தான் மிச்­சம். எப்­போது போனா­லும் "சேட் வெளி­யூர் போயி­ருக்கு..." என்­ப­தையே அவ­னால்­கேட்கமுடிந்­தது.

அத்தாவின் சாவில் கூட தண்­டல்­கா­ரர்­கள் வீட்டைச் சுற்­றி ­நின்­றார்­கள். கோவ­ளத்­தில் ஒளிந்­து­ கி­டந்து துக்­கத்­திற்கு போன­வனை கழுத்­தில் கத்­தி­வைத்­தார்­கள். எங்கு ­பார்த்­தா­லும் கடன்! நாலு திசை­யி­லும் ­க­டன்! வாழ்­நாள் முழு­தும் சம்­பா­தித்துக் கட்­டி­னா­லும் தீராக்­க­டன். கோர்ட், கேஸ், கந்­து­வட்­டிக்­க­டன், தற்­கொலை முயற்சி என மன­அ­ழுத்­தத்­தில் சிங்­கப்­பூ­ரில் அடைக்­க­ல­மா­னான்.

ஆபத்­பாந்­த­வ­னாக வந்­தார் மஜீத்­மு­த­லாளி. அப்­பாஸை மாதம் 800 வெள்ளி சம்­ப­ளத்­திற்கு தனது ஆர்கேட் பிளாசா கவுண்ட­ரில் ­சேர்த்­துக்கொண்­டார். கொஞ்­சம் ஆறு­தல் கிடைத்­தது. ஊர் செல­வுக்கு பத்­தா­யி­ரம், மீதியை கந்து ­வட்­டிக்குப் பணம் கட்­டி­ய­தன் மூலம் தண்­டல்­கா­ரர்­க­ளி­டம் தவணை கிடைத்­தது. ஐந்து ஆண்டு­ வ­ன­வா­சத்­தில் நிஜாம் அவ­னுக்கு அறி­மு­கம்.

"நிஜாம் காப்பி வாங்கி வரவா?"

கையில் வெள்­ளைப்­ பை­யும் கவ­ரு­மாய் நின்ற நிஜாம், "வேணாம் இப்­ப­தான் சாப்­பிட்டு வாரேன்," என கையி­லி­ருந்­த­ பாத்­தி­ரத்தை நீட்டி, "நஃபிசா உனக்கு தந்­தாள்," என்­றான்.

உள்ளே நான்கு தேங்­காய்­ப்பால் கொழுக்­கட்­டை­கள் இ­ருந்­தன. இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்பு தான், அப்­பா­ஸோடு தங்கை இரு­வ­ரு­க்குமாய் மொத்­தம் மூன்­று­ கல்­யா­ணம். ஏற்­கெனவே இருந்த கட­னோடு கல்­யா­ணக் ­க­ட­னும் சேர்ந்துகொண்­டது. மூன்­று ­மா­தம் வட்­டி கட்­ட­மு­டி­யா­மல் போன­தில் வக்­கீல் வீட்­டிற்கே அடி­யாட்­க­ளோடு வந்துவிட்டான்.

வீட்­டில் கிடந்­த ­சோ­ஃபாவை இழுத்து நடு­ரோட்­டில் போட்­டான். அக்­கம் பக்­கத்­தி­னரை அழைத்து குடும்ப மானத்­தை ­வாங்­கி­னான். தம்பி, தங்கை, மனைவி, அம்மா உடல்­ கூ­சிப்­போய் தெரு­வில் நின்­றார்­கள். தெருவே கூடி­நின்­று வேடிக்­கை­ பார்த்­தது. தவணை கட்­டா­விட்­டால் அடுத்த முறை பண்­ட­பாத்­தி­ரத்தை தெரு­வில் அள்­ளிப்­போ­டு­வேன் என மிரட்­டி­விட்டு போன­தாக அம்மா போனில் கூறி­னாள்.

கடை­ய­டைத்­த­தில் நிஜா­மிற்கு வரு­மா­னம், வாடகை, சம்­ப­ளம் என கையை கடித்­தது. இருந்­தும் சகித்­துக்­கொண்டு மெஸ்­செ­லவு, ரூம்­வா­ட­கைக்கு என தன்­ கைக்­கா­சில் கொஞ்­சம் கொடுத்­தான். இப்­போது கடை­தி­றந்­தும் வியா­பா­ரம் பெரி­தாய் இல்லை. இப்­ப­டி­யே­போ­னால் நிஜா­மிற்கு கடும் நசிவு வரும் என்­பதை அப்­பாஸ் அறி­யா­மல் இல்லை. அப்­பா­ஸின் கடன்­சுமையை நிஜாம் ­அ­றி­யா­ம­லும் இல்லை.

நிஜாம் கையி­லி­ருந்த கவரை பார்த்­துக்­கொண்டே ட்ரா­யரை திறந்­தான் அப்­பாஸ். அதே 22 வெள்ளி. எத்­த­னை­ முறை திறந்து பார்த்­தா­லும் மாறு­வ­தாய் இல்லை. ஏதா­வது அற்­பு­தம் நிக­ழாதா என அச்­சத்­தில் மூழ்­கி­க் கி­டக்­கும் எண்­ணற்ற தொழி­லா­ளர்­களில் அவ­னும் ஒரு­வன்.

மஜீத் மணி­சேஞ்­ச­ரில் இரு­வ­ரும் ரன்­னர்­கள். முது­கில் ஆமை­ஓடு­போல் பணத்தை பேக்­கில் கட்­டிக்­கொண்டு முத­லில் பேங்­கிற்குப் போக­வேண்­டும். நாண­யம் டெலி­ வ­ரி ­மு­டிந்­த­தும் திரும்­ப­வும் ஆர்­கேட். கொஞ்­சம் ஆசு­வா­சம், பின்பு வெளி­நாட்டு கப்­பல் ஆர்­டர் இருக்­கி­றதா என­ப் பார்த்து ­செய்­து­விட்டு ஆஸ்­தி­ரே­லியா, மலே­சியா, பவுண்ட், யூரோ நாண­யத்தை திரும்­ப­வும் முது­கில் கட்­டிக்­கொண்­டு ஓட­வேண்­டும். மீண்­டும் ஆர்­கேட்.

இந்த முறை உள்ளூர் நாணய மாற்றுக்காரர்களுக்கு சரக்கு டெலி­வரி. மதி­யம் சாப்­பிட மூன்று மணி­யா­கி­வி­டும். எல்லா நாண­யங்­க­ளை­யும் இருப்­பில் வைத்­துக்­கொண்டு தக்­க­ச­ம­யம் ­பார்த்து கைமாற்­றி­வி­டு­வ­தில் மஜீத் முத­லாளி கில்­லாடி. படித்­த­வர் இல்லை. ஆனால் நாண­யத்­தின் மதிப்பையும், ஏற்ற இறக்கங்களையும் கணிப்பதில் வல்லவர். எல்­லாம் நாகூர் பெரிய எஜ­மா­னோட பார்­வை­ என தவ­றா­மல் உண்­டி­ய­லில் இரண்­டு ­வெள்ளி போட்­டு­வி­டு­வார். கிடைக்­கும் லாபத்­தில் செல­வு­க­ளை­ச் சு­ருக்­கிக்­கொண்டு ஊரில் சொத்­து ­வாங்கிப்­ போ­டு­வார்.

நெகரா பேங்ல வெள்­ளி­யில்­ல­னா­லும் மஜீத்திடம் வெள்­ளி­

யி­ருக்­கும் என்­பது ஆர்­கேட் வியா­பா­ரி­க­ளி­டையே புழங்­கும் பேச்சு வழக்கு. கொஞ்­சம் கரு­மியே தவிர, மனி­தர் ரொம்ப நாண­ய­மா­ன­வர். காலை இரண்டு ரொட்டித் துண்டு- 11 மணிக்கு மைலோ த்ரி இன் ஒன், மதி­யம்­ வெள்­ளைச்­சோறு ரெண்டு காய்­கறி, இரவு இரண்டு சப்­பாத்தி என சிக்­கனமாக வாழ்பவர். கடை­யில் யாரே­னும்­ நெய்­சோறு இறைச்சி வாங்கி சாப்­பிட்­டால் கூட, "கட்­டு­சட்டா சம்­பா­திச்சு சொத்து சேர்க்­க­ணும்டா.. சம்­ப­ளத்தை திண்­ட­ழிச்சா பின்­னாடி ­கஷ்­டம்..." என கத்­திக்­கொண்டே இருப்­பார்.

இந்த நேரத்தில்தான் நிஜா­மிற்கு கல்­யாண வரன் வந்­தது. கருப்­பு­கே­சம் திரண்­டு­ கி­டக்­கும் புரு­வங்­கள் இரண்­டும் சேர்ந்­தி­ருக்­கும். கொத்து கொத்­தாய் நெற்­றி­யில் வழிந்­து­ வி­ழும்­மு­டியை கோதி­விட்டு அவன் வியா­பா­ரம் செய்­யும் அழகு, பார்ப்­ப­தற்கு ஒரு சினிமா நாய­க­னுக்­கு­ரிய எல்­லா ­மு­க­லட்­ச­ணங்­களும் அவ­னுக்கு இருந்­தது.

ஆர்­கேட்­டிற்கு சரக்கு வாங்­க­வரும் இன்­னொரு வியா­பாரி சாகுல் ­அ­மீது மாமா தன்­னு­டைய மக­ளுடன் ஒரு­முறை கடைக்கு வந்­தார்­. எல்­லாம் கைகூடி வர, மஜீத் முத­லா­ளி­யே­ முன்நின்று நிஜாம் - நஃபிசா திரு­ம­ணத்தை நடத்­தி­வைத்­தார். தனி­யாக தொழில் வைக்­கப் ­போகி­றேன் என நிஜாம்­ லை­சன்­சோடு வந்து நிற்க அவரே இந்த கவுண்­ட­ரை­யும் பிடித்­துக்­கொ­டுத்­தார்.

"கட­னுக்கு யாவா­ரம் பண்­ணாதே... அப்­ப­டியே பண்­ணு­னா­லும் ஒருநாள்தான் கட­னுக்கு கெடு.உட்­கார்ந்து கடன் கொடுத்தா அதை அலஞ்சு வாங்­க­ணும். எதை­யும் ரொக்க யாவா­ரமா பண்ணு. என்­னட்ட காலை­யில சரக்கு எடுத்­துக்க. ஆனா ராத்­திரி எட்­டுக்­குள்ள செட்­டில் பண்­ணிடு," என கட்டளை கள், அறி­வு­ரை­யோடு, "இவ­னை­யும் கூட வச்­சுக்கோ நல்லா தொழில் தெரிஞ்­ச­வன்,"­ என்று அப்­பா­ஸை­யும் அனுப்­பி­வைத்­தார்.

கடை ஆரம்­பித்­த­தும் மஜீத் முத­லாளி முதல் வியா­பா­ர­மாக பிஸ்மி சொல்­லி­ நூ­று­வெள்ளி கொடுத்­தார். நிஜாம் அதை சென்­டி­மென்­டாக இன்­னும் கடை­யில் வைத்­தி­ருக்­கி­றான்.

ஆரம்­பத்­தில் 50க்கும் 60க்கும் பிசிறு தட்டி, பின்பு 500 வெள்­ளியை ஒரு­வ­ழி­யாக மூன்று மாதங்­களில் தாண்­டி­யது. வியா­பா­ரத்தை கூட்­டும் உத்­தி­களில் அப்­பாஸ், வெளி­நாட்­டி­னர் அதி­க­மாக புழங்­கும் கடைத்தொகுகளில் பழைய கூட்­டா­ளி­ ஷோ­ரூம் சேல்ஸ்­பெர்­சன்­களை சந்­தித்­தான். நல்ல விலை தரு­வ­தாக உறு­தி­ய­ளித்­தான்.

சந்தை விலையைவிட ­இ­ரண்டு- மூணு காசு உடைத்து கொடுத்­தான். வியா­பா­ரம் வளர்ந்­தது. கொரோ­னா­விற்கு முன்பு வரை ­நாளொன்­றுக்கு சரா­சரி 1,000 வெள்ளி, மலே­சியா டிடி­யில் மட்­டும் சுளை­யாக 200 வெள்ளி லாபம் நிற்­கும். மஜீத்­ மு­த­லாளி காலத்­திற்கு பிறகு அவ­ரு­டைய மகன்­கள் பொறுப்­பில் நிறு­வ­னங்­கள் கைமா­றி­யது. நாண­யம் தவ­ற ­மார்க்­கெட்­டில் பெயர் கெட்­டுப்­போ­னது.

"மஜீத்" கடை­யை பெ­ய­ரில் மட்­டும் வைத்­துக்­கொண்டு பாகப்­பிரி­வி­னை­யில்­ அ­வ­ரையே ஊருக்கு அனுப்பிவிட்­டார்­கள்.

"மஜீத் ­மு­த­லாளி மாதிரி அவ­ரோட பிள்­ளைங்க கிடை­யாது," என அவர்கள் ­கா­து­ப­டவே ஆர்­கேட் வியா­பா­ரி­கள் பேச ஆரம்­பித்­தார்­கள். அவ்­வப்­போது வந்­து­போ­கும் முத­லா­ளி­யை­ எங்­கா­வது கண்­டால் பழைய உற்­சா­க­த்தையும் பேச்சையும் கேட்க முடி­வ­தில்லை.

"முடிஞ்சா புண்­ணி­யத்த சேருங்­கடா. காசு ­ப­ணத்தை சேர்த்து வச்சா புள்­ளைங்க அடிச்­சுக்­கு வானுங்க," என­ பு­லம்­பிக்­கொண்­டி­ருந்­தார்.

இரவு எட்­டு ­மணி. கடை­ய­டைக்க தயா­ரா­ன­போது "சாப்­பி­டு­வோமா?" என்றான் நிஜாம்.

இதோ வந்­துட்­டேன் நிஜாம் என விளக்­கு­களை அணைத்­து­விட்டு பக்­க­வாட்டு கத­வை­யும் அடைத்­தான். ஒன்­றுக்கு இரண்­டு­முறை கதவை சரி­பார்த்­து­விட்டு இரு­வரும் நடக்க ஆரம்­பித்­தார்­கள்.

பூரி­ கி­ழங்­கும் தோசை­யும் ­ஆர்டர் செய்­து­விட்டு இரு­வ­ரும் மேசை­யில் அமர்ந்­தி­ருந்­தார்­கள். எங்­கி­ருந்து ஆரம்­பிப்­பது என தெரி­யா­மல் ­தொண்­டையைக் கனை த்­துக்­கொண்­டி­ருந்­தான் நிஜாம்.

"என்ன யோசிக்­கிற நிஜாம்?"

தன்­ கை­யி­லி­ருந்த கவரை அப்­பாஸை நோக்கி நகர்த்­தினான். ஊருக்கு டிக்­கெட் ­புக்­கா­கி­யி­ருந்­தது. பின்பு கையி­லி­ருந்த பையை­யும் தள்­ளி­னான்.

"இதுல வீட்­டுக்கு கொஞ்­சம் சாமான் இருக்கு. உம்­மாவ கேட்­டதா சொல்லு."

புரி­யா­மல் விழித்துக்­கொண்­டி­ருந்­தான் அப்­பாஸ்.

"நிலைமை உனக்கு புரி­யும்ணு நினைக்­கி­றேன். நானும் பல்ல கடிக்­கி­றேன்.. இதுக்­கு­மேல இத நம்பி காலம்­ தள்­ள­மு­டி­யாது."

"....."

"இந்த வாரம் மட்­டும் மூணு பேர் லைசன்ஸ் வேணாம்­னு­ திருப்பிக் கொடுத்­துட்­டாங்க. இந்த மாசத்­துல மட்­டும் இதோட எட்டு பேர். நிலைமை சரி­யா­ன­தும் ­சொல்­லி­ய­னுப்­பு­றேன்." என எழுந்து ­போய்­விட்­டான் நிஜாம். தோசை­யும் பூரி­யும் மேசை­யில் கேட்­பா­ரற்­று­காய்ந்து கிடந்­தது.

"நிஜாம்... நான் காதர் மாமா பேசு­றேன்"

"சொல்­லுங்க மாமா..." மறு­முனை­யில் மஜீத் முதலாளியின் மானே­ஜர் காதர்.

"உங்­க­ளுக்கு அடிச்­சுப் ­பார்த்­தேன்.. லைன் போகல.. என்ன அவ­ச­ரம் மாப்ளே.. காலை­யில அப்பாஸ் வந்து 7,000 வெள்ளி பாக்­கிய வாங்­கிட்டு போயிட்­டார்."

நிஜா­மிற்கு ஒரு­ க­ணம் தலை­சுற்­றி­யது. சில வினா­டி­க­ளுக்கு பிறகு சுதா­ரித்­துக்­கொண்டு, நான் தான் மாமா வாங்­கிக்க சொன்­னேன்," என போனை அணைத்து விட்டு நஃபிசா­வி­டம் கொடுத்­தான்.

­ந­ஃபிசா வானத்­திற்­கும் பூமிக்­கும் குதித்­துக்­கொண்­டி­ருந்­தாள்.

"படிச்சு படிச்சு சொன்­னேனே வைக்­கிற இடத்­துல வைக்­க­ணும். நல்ல ஆளுன்னு நெனச்சேன். இப்படி நல்­ல­பாம்­புக்கு முட்டை உடைச்சி வளர்த்­தி­ருக்­கோம்."

"பர­வா­யில்லை விடு..."

"பிளாசா வாடகை பாக்கிய எப்­படி செட்­டில் பண்­ண­போ­றீங்க... என்­னமோ கையில காசு இருக்­குற மாதி­ரி­ ப­ர­வா­யில்­லைன்­றீங்க..."

"கொஞ்­சம் அனத்­தாம இருக்­கியா!"

கையில் இருந்த கடை கணக்குப் புத்­த­கத்தை சோபாவில் வீசி எறிந்­து­விட்டு போனாள். கை­யில் தலை­வைத்­த­வாறே சோபாவில் சாய்ந்­தான். அப்­பா­ஸின் பழைய நினை­வு­கள் புகைபோல­ சூழ்ந்­துகொண்­டி­ருந்­தது. சோயா நடு­வில் சொரு­கி­கி­டந்த போன் இடுப்பைக் குத்­திக்­கொண்­டி­ருந்­தது. நகர்ந்து அமர்ந்­தான். மீண்­டும் அசெ­ள­கர்­ய­மா­கவே இருந்­தது. இருட்­டுக்­குள் கைவிட்டு துலாவி போனை ­

எ­டுத்துப்­ பார்த்­தான். "Your account XXXX has been credited with 7000.00" வாசகம் திரையில் மின்னியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!